செவ்வா கிழமை அனுமனுக்காக இத தானம் பண்ணுங்க

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாமிக்கு உரிய நாளாக இந்துக்கள் வழிபட்டு வருகின்றனர். வியாழக்கிழமை சாய்பாபாவுக்கு உகந்த நாளாக பலரும் விரதம் இருப்பதை பார்த்திருப்போம். அதேபோல் செவ்வாய்க்கிழமையானது அனுமனுக்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. அந்தந்த கடவுளர்களுக்கு உரிய நாளில், அவர்களை வழிபட்டு, அவர்களது பெயரில தான தர்மங்களை வழங்கும்போது பல்வேறு புண்ணியங்கள் வந்து சேர்வதாக நம்பப்படுகிறது.

செவ்வாய்க்கிழமைகளில் அனுமனை வழிபடுவதும், விரதம் அனுஷ்டிப்பதும் அவரது அருளை பெற உதவும் என கூறப்படுகிறது அன்றைய தினம் அனுமன் பெயரில் தானம் செய்வது வீட்டில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு செழிப்பையும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. அந்த வகையில் அனுமனுக்கு பிடித்த பொருட்கள் என்னென்ன அவற்றை தானம் செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பதவி உயர்வுக்கு

வீர அனுமனுக்கு லட்டு மிகவும் பிடித்த உணவு பண்டமாகும். எனவேதான் பூஜைகளின் போதும் அவருக்கு லட்டுக்கள் படைக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அன்று அனுமன் கோவிலுக்கு சென்று கடலை மாவில் செய்த லட்டுக்களை தானமாக வழங்கலாம். ஜோதிட சாஸ்திரப்படி இவ்வாறு லட்டுக்களை தானமாக வழங்குவதன் மூலம் பதவி உயர்வு நீண்ட காலமாக தடைபட்டு இருந்தால் அது விலகுமாம். சிறந்த வருமானத்தை தருவதோடு வேண்டிய பதவி உயர்வும் விரைவில் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

உடல்நல பிரச்சனை தீர

அனுமனுக்கு உகந்த தினமான செவ்வாய்க்கிழமை அன்று தேங்காய் தானமாக வழங்கலாம். தேங்காய் மிகவும் மங்களகரமான பொருளாக கருதப்படுகிறது. யாருக்கேனும் நீண்ட நாட்களாக உடல் நலம் தொடர்பாக பிரச்சனைகள் இருந்தால் அனுமனை வேண்டிக்கொண்டு செவ்வாய் கிழமை அன்று அவரது கோவிலில் தேங்காய்களை தானமாக வழங்கலாம். இது நோயில் இருந்து விரைவில் விடுபட உதவுவதோடு நீண்ட ஆரோக்கியத்தையும் கொடுக்கும் என நம்பப்படுகிறது.

செவ்வாய் தோஷம் நீங்க

அனுமனுக்கு பிடித்த நிறமாக சிவப்பு நிறம் பார்க்கப்படுகிறது. எனவே, அந்த நிறத்தில் ஆன ஆடைகளை தானமாக வழங்கும் போது அவருக்கு மிகவும் மனம் குளிரும் எனக் கூறப்படுகிறது. ஆடைகள் வாங்க பணம் இல்லாதோர் சிவப்பு நிறத்தில் உள்ள பழங்களை வாங்கி தானமாக வழங்கலாம்.இவ்வாறு செய்வதன் மூலம் செவ்வாய் தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்று நம்பப்படுகிறது

திருமணத்தடை நீங்க

அனுமனுக்கு பிடித்த பொருட்களுள் அடுத்ததாக ஒன்று மசூர் பருப்பு. ஜோதிட சாஸ்திரப்படி தங்களது ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருப்பவர்களோ அல்லது செவ்வாய் தோஷத்தால் திருமண தடைகளில் தவிப்பவர்களும் மசூர் பருப்பை வாங்கி தானம் செய்யலாம். சிவப்பு நிறப் பருப்பை தானம் செய்வதன் மூலம் அனுமன் மகிழ்ச்சி அடைவதாக கூறப்படுகிறது.

குறைவில்லா பணம்தான் பெற

அனுமனுக்கு பிடித்த பொருட்களில் மற்றொன்று துளசி இலை. மேலும் துளசி செடியானது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி செவ்வாய்க்கிழமை அனுமனுக்கு துளசி இலைகள் அல்லது துளசி மாலை அணிவிப்பது மிகவும் நலம் பயக்கும் என்று கூறப்படுகிறது. அன்றைய தினம் துளசி இலைகளையும் துளசி மாலைகளையும் தானமாக வழங்குவதன் மூலம் பணத்துக்கும் தானியத்துக்கும் குறைவில்லாத வரம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

இதுபோன்ற தகவல்களை அடிக்கடி தெரிந்துகொள்ள த காரிகையின் சமூக வலைதளப்பக்கங்களைப் பின் தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE