ஒவ்வொரு உடல் மொழியும் ஒவ்வொரு ஆட்டிட்யூடை வழிப்படுத்தும். அதன்படி இன்டர்வியூ ஆகட்டும், மீட்டிங், பிரசன்டேஷன், ஆகட்டும். அல்லது கிளைன்டை சந்தித்து ப்ராஜெக்ட் ஓகே செய்வதாகட்டும். எதற்குமே நமது உடல் மொழி முக்கிய பங்காற்றுகிறது. என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்குமா? என்பது சந்தேகமே. அப்படி இருக்கும் போது எந்த மாதிரியான உடல் மொழி டாமினேட்டிங்காக இருக்கும்? ஆட்டிட்யூடை நல்ல விதமாக காட்ட உதவும்? என்பதை ‘த காரிகை’-யின் கட்டுரையில் தற்போது பார்க்கலாம்.

நிமிர்ந்து நிற்பது

எப்போதுமே கூன் போடாமல் நிமிர்ந்து நிற்பது என்பது சிறந்த போஸ் ஆக இருக்கும். இது, தன்னம்பிக்கையும் டாமினன்டையும் வெளிப்படுத்தும். நேராக நிமிர்ந்து, நின்று, தோள்பட்டையை முன்னோக்கி இல்லாமல் பின்னோக்கி இருக்கும்படி நகர்த்தி, தலையும்-தாடையும் குனிந்து இருக்கும் படி அல்லாமல் நிமிர்த்தி நின்றாலே இது உங்கள் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் உடல் மொழியாக இருக்கும்.

கண் பார்த்து பேசுதல்

அடுத்தவரிடம் பேசும் போது எப்போதுமே கண்ணை பார்த்து பேச வேண்டும். வேறு எங்கேயும் பார்த்துக் கொண்டோ, வேடிக்கை பார்த்துக் கொண்டோ பேசுவது அந்த பேச்சுவார்த்தையில் உங்களுக்கு விருப்பமில்லை என்பது போல் அடுத்தவர் புரிந்து கொள்ள வழிவகுக்கும். இது பேச்சுவார்த்தையில், அதிக தன்னம்பிக்கையை உங்களுக்கு கொடுக்கும்.

கான்ஃபிடெண்ட் ஆன உடல் மொழி

மிகவும் பலமான, ஒரே மாதிரியான உடல் மொழியை பேசும்போது வெளிப்படுத்த வேண்டும். உதாரணத்துக்கு, விரலை நீட்டி சுட்டிக்காட்டி பேசுதல், கையை ஆட்டி, அசைத்து பேசுதல் போன்ற பல்வேறு அசைவுகளை நீங்கள் பேசும் மொழியோடு உடல் மொழியையும் சிங் செய்யும்படி இணைத்து பேசுதல் வேண்டும்.

அதிக இடம் எடுத்துக் கொள்ளுங்கள்

உட்காரும்போது அல்லது நிற்கும் போதும் தங்களை குறுக்கிக் கொண்டு ஓரிடத்தில், சாய்ந்து அமர்வதை விட உங்களுக்கு உரிய இடத்தை அழகாக ஆக்ரமித்து சௌகரியமாக அமர்வது அல்லது. நேராக நிற்பது உங்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். பின்னோக்கி சாய்ந்து இருக்கையில் அமர்வதை விட முன்னோக்கி நிமிர்ந்து அமர்வது உங்களது உடல் மொழியை அழகாக்கும்.

தெளிவாக பேசுதல்

தெளிவாகவும் பிறருக்கு புரியும் படியும் பேச வேண்டும். மிக குறுகலாக ஒரு பேச்சுவார்த்தையை முடிப்பதும், மிக மென்மையாக அடுத்தவருக்கே பேசுவது கேட்காதது போல் பேசுவதையும் தவிர்க்க வேண்டும். மிக மெதுவான குரலில் பேசுவது என்பது நீங்களே உங்களது வார்த்தைகளை உறுதியாக நம்பவில்லை என்பது போல் பாவனையை காட்டக்கூடும்.

அசைந்து கொண்டிருக்கக் கூடாது

அடுத்தவரிடம் பேசும்போது காலை உயர்த்தி மீண்டும் தரையில் வைத்து, வைத்து அசைந்தபடியோ, நின்ற ஒரு இடத்தில் நிற்காது உடலை திருப்பித் திருப்பி ஆடிய படியோ பேசுதல் கூடாது. இது, நீங்கள் பயத்தில் இருப்பதை உணர்த்தக் கூடும். மேலும் நீங்கள் பாதுகாப்பு இல்லாத சூழலில் இருப்பது போன்ற உணர்வை பிறருக்குத் தரலாம்.

அளவான குரல்

போதிய அளவு சத்தமாக பேச வேண்டும். இது உங்களுக்குள் உள்ள தனித்தன்மையையும், தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்த உதவும். பேச்சு வார்த்தையும் பெருமளவு வெற்றி பெறும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE