பெண்களுக்கு இந்த சலுகைலாம் இருக்கு. தெரியுமா?

இந்தியாவுக்கு பாரதத்தாயின் தேசம் என்றும் பெயர். ஆனால், இங்கு பெண்களுக்கே அவர்களுக்கு சட்ட ரீதியாக இருக்கும் உரிமைகள் பற்றி தெரிவதில்லை. அப்படி முதலில் அவர்களுக்கு இந்தியாவில் உள்ள 10 சட்டங்கள் பற்றி தெரிந்துகொள்வோம்.

ஆனால் எப்படிஎப்படியோ பாதுகாப்பு சட்டங்கள் போட்டும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மட்டும குறைந்தபாடில்லை.

2005 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்து வாரிசுரிமை சட்டம்

அச்சட்டத்தின் முக்கிய திருத்தமே மூதாதையர் சொத்துக்களில் பெண்களுக்கு சம உரிமைகள் வழங்குவது

பெண்களுக்கு கண்ணியம் காக்க உரிமை உண்டு

பெண்களுக்கான இந்த சட்டத்தின்படி, இந்தியாவில் ஒரு பெண்ணை பெண் மருத்துவர்தான் சோதனை செய்ய வேண்டும. அல்லது பெண் மருத்துவர் இல்லாத நிலையில் ஆண் மருத்துவர் பரிசோதனை செய்ய முடியாது.

பெண்களுக்கு இலவச சட்ட உதவி

1987 சட்டப்படி, பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் சட்ட அதிகாரிகளிடமிருந்து இலவச சட்ட உதவி பெற உரிமை உண்டு.

பெண்களுக்கு கருக்கலைப்பு உரிமை உண்டு

சிசுவின் 24 வாரங்களுக்குள் அதனை பெண்கள் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு. இது, பெண்ணின் திருமண நிலையைப் பொருட்படுத்தாமல் செய்துகொள்ளலாம்.

பெண்களை இரவில் கைது செய்ய முடியாது

ஒரு வழக்கில் மாஜிஸ்திரேட்டின் உத்தரவு இல்லை என்றால், இந்தியாவில் பெண்களை இரவு நேரத்தில் கைது செய்ய முடியாது.

அது மட்டும் இல்லாமல், ஒரு பெண் கான்ஸ்டபிள் முன்னிலையில் மட்டுமே அவரை விசாரிக்க உரிமை உண்டு.

பெண்கள் ஆன்லைனில் புகார்களை பதிவு செய்யலாம்

ஒரு பெண் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது பதிவு செய்யப்பட்ட தபால் மூலமாகவோ புகார்களை பதிவு செய்வதற்கான உரிமை உண்டு

ஒரு பெண் நேரடியாக காவல்நிலையத்திற்கு செல்ல முடியாத நிலையில் இருக்கலாம். அப்படி இருந்தால் SHO ஒரு பெண் காவலரை அவரது இல்லத்திற்கு அனுப்பி புகாரைப் பதிவு செய்யலாம்.

குடும்ப வன்முறைக்கு எதிராக பெண்களுக்கு உரிமை

498வது சட்டப்பிரிவின் படி, இந்திய பெண்கள் தனது கணவர், காதலன், ஏதேனும் குடும்ப உறுப்பினர்களால் பொருளாதார ரீதியாக, உணர்ச்சி ரீதியாக மற்றும் பாலியல் ரீதியாக சொந்தரவு ஏற்பட்டால் அதனை கேட்க உரிமை உள்ளது.

தொந்தரவு செய்பவர்களுக்கு எதிராக பெண்களுக்கு உரிமை உண்டு

தேவையில்லாமல் பெண்கள் பின்னால் சென்றால் கூட சட்டப்பிரிவு 354 டி பிரிவின்படி, சட்ட நடவடிக்கை எடுக்கலாம். இது செல்லுபடியாகும்.

பெண்களுக்கு ஜீரோ எஃப்ஐஆர் உரிமை உண்டு

ஒரு பெண் குற்றம் நடந்த இடம் அல்லது குறிப்பிட்ட அதிகார வரம்பை பொருட்படுத்தாமல் எந்தவொரு காவல் நிலையத்திலும் எஃப்ஐஆர் பதிவு செய்யலாம்.

இது ஜீரோ எஃப்.ஐ.ஆர் எனப்படும். பின்னர் அந்தந்த காவல் நிலையத்திற்கு வழக்கானது மாற்றப்படும்.

பணியிடத்தில் துன்புறுத்தலுக்கு எதிராக பெண்களுக்கு உரிமை

வேலை பார்க்கும் இடத்தில் பெண்களுக்கு ஏதேனும் பாலியல் தொல்லைகள் இருந்தால், 2013 சட்ட விதிகளின் படி, பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகவும் புகார் செய்யலாம்.

பெண்களுக்கு சம ஊதியம்

1976 ஆம் ஆண்டின் சம ஊதியச் சட்டத்தின்படி, ஆண்களுக்கு எவ்வளவு சம்பளம் தரபடுகிறதோ அதே அளவு சம்பளத்தை பெண்களும் கேட்ட சம உரிமை உள்ளது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE