விவாகரத்தை கொண்டாடும் பெண்கள் வாழும் ஊர்
வட ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மவுரிடானியாவில் விவாகரத்துக்கு பின் பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்ததை கொண்டாடும் வகையில் அங்கு பெண்கள் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர்.
மவுரிடானியாவில் திருமணம் என்பது ஒரு சந்தையாக பார்க்கப்படுவதில்லை மாறாக பெண்கள் தங்களுக்கு பிடிக்காத வாழ்க்கையில் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் வெளியேறும் முழு உரிமையும் சுதந்திரமும் அவர்களுக்கு உள்ளது.
சமூகத்துக்காகவும் குழந்தைகளுக்காகவும் பொருளாதாரத்துக்காகவும் அடக்குமுறைகளை சகித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும் என்ற நிலைப்பாடு அங்கு இல்லை.
மவுரட்டானியாவில் காலம் காலமாக பெண்களுக்கு சுயமரியாதையும் மதிப்பும் கொடுக்கப்பட்டு வருகிறது.
திருமணமான பெண் பெண்கள் தங்களுக்கு அந்த வாழ்வில் சுயமரியாதை கிடைக்காவிட்டால் அவர்கள் அதிலிருந்து வெளியேறும் சுதந்திரம் அவர்களுக்கு முழுமையாக வழங்கப்படுகிறது.
இந்த சமுதாயத்தில் ஆணை விட பெண் விவாகரத்தை முன்னெடுப்பதில் தயக்கம் காட்டாமல் வாழ்கின்றனர்.
விவாகரத்தில் ஆனபின் பெண்களை அவர்களது உறவினர்களும் நண்பர்களும் சூழ்ந்து கொண்டு கொண்டாடுகின்றனர்.
விவாகரத்துக்கு பிந்தைய பார்ட்டி என்ற பெயரில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் விருந்து உள்ளிட்டவை அங்கு கோலாகலமாக நடைபெறுகிறது.
இந்த பார்ட்டியின் மூலம் அந்தப் பெண் மறு திருமணத்திற்கு தயாராகிவிட்டால் என்பதை அறிவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
மவுரட்டானியா சமுதாயத்தில் திருமணம் ஆகாத பெண்களை விட திருமணமான பெண்களுக்கு மதிப்பும் தேவையும் அதிகமாக உள்ளது.
ஏனெனில் முந்தைய திருமணத்தில் நடந்த கசப்பான அனுபவங்களை அந்த பெண் பெற்றிருப்பதால் மறு திருமணத்தில் அந்த தவறுகள் நடக்காது என்று நம்பப்படுகிறது .
எனவே திருமணம் பற்றிய அனுபவமோ பக்குவமோ இல்லாத இளம் பெண்களை விட விவாகரத்தான பெண்களுக்கு அங்கு வரவேற்பும் அதிகமாக இருக்கிறது.
திருமணமான பின் விவாகரத்துக்கு பின் அரபு நாடுகளில் பெண்கள் சுதந்திரம் முடக்கப்படுவதாக கூறப்படும் நிலையில் பெண்களுக்கு அப்போதுதான் புதியதாக ஒரு வாழ்க்கை ஆரம்பிப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.
என்னதான் பெண்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தாலும் இதில் சில நெகட்டிவ் உள்ளன.
மருதாணி அவள் திருமணமாகும் மூன்றில் ஒரு திருமணம் விவாகரத்தில் முடிகிறது. எனவே அங்கு விவாகரத்தும் திருமண வாழ்க்கையில் நிலைபெற்ற தன்மையும் குழந்தைகளின் எதிர்காலமும் பொருளாதாரம் திறமற்ற நிலைமையும் உள்ளது.
ஒருவேளை அந்தப் பெண் திருமணத்திலிருந்து வெளியேற நினைத்தால் பிரைட் பிரைஸ் என்ற பெயரில் அவருக்கு கொடுக்கப்பட்ட வரதட்சணையை அந்த பெண் திருப்பி கொடுத்துவிட்டு அந்த மண வாழ்க்கையில் இருந்து வெளியேறிவிடலாம் என்பது கிட்டத்தட்ட ஒரு சந்தை போக்கான மனப்பான்மை ஏற்படுத்தி விடும் என்று நம்பப்படுகிறது.