மனைவி ரெடியாகும் வரை ஸ்கிரிப்ட் தொட மாட்டேன் – விக்ரமன்

இயக்குனர் விக்ரமின் மனைவி கடந்த 5 ஆண்டுகளாக தனியார் மருத்துவமனையின் ஒரு தவறால் படுத்த படுக்கையாகி கிடக்கிறார். இதனால் திரையுலகில் ஜொலித்து வந்து இயக்குனர் விக்ரமன் கூட கதை எழுத மாட்டேன் என மனம் உடைந்து காணப்படுகிறார்.

வானத்தைப்போல, புதுவசந்தம் பூவே உனக்காக சூரிய வம்சம் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்ளிட்ட பல வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர் விக்ரமன். ஆந்திராவைச் சேர்ந்த குச்சுப் புடி நடனக் கலைஞர் ஜெயசித்ராவை இயக்குனரான விக்ரமன் திருமணம் செய்து கொண்டார்.

அபிநயம் காட்டி அழகாக நடனம் ஆடும் தனது மனைவியின் நடன அசைவுகள் அவருக்கு மிகவும் பிடிக்கும். இப்படி இருக்க ஒரு முறை இயக்குனர் சங்கத் தலைவராக விக்ரமன் இருந்தபோது தொடர்ந்து நடனம் ஆடியதால் உடல் வலி வந்துள்ளதாக கூறி தனது மனைவி விக்ரமனிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து வடபழனியில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனைக்கு விக்ரமன் தனது மனைவியை அழைத்துச் சென்றார்.

அங்கு சில பரிசோதனைகளுக்குப்பின் அவருக்கு அளித்த தவறான சிகிச்சையின் விளைவாக முதுகுத்தண்டில் நரம்பு பாதிக்கப்பட்டு அவரால் நடக்க கூட முடியாமல் வெளியே வந்துள்ளார்.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக அவர் எங்கும் நடமாட முடியாமல் தவித்து படுத்த படுக்கையாக கிடக்கிறார். 2 நர்சுக்களை போட்டு விக்ரமன் அவர்களை கவனித்துக் கொண்டு வருகிறார். இருந்த போதும் தனது மனைவிக்கு உடல்நலம் சரியான பின்பு தான் ஸ்கிரிப்ட் பேடையை தொடுவேன் என அவர் சபதம் ஏற்று உள்ளார்.

மனைவி 5 ஆண்டுகளாக படும் கஷ்டத்தை தாங்க முடியாமல் அவர் கடும் மனவேதனையில் உள்ளார். அவரது மகன் கூட தற்போது இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு திரையுலகில் காலடி எடுத்து வைத்து ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இந்த நிலையில் தனக்கு அந்த மருத்துவமனை தரப்பிலிருந்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விக்ரமனின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார். ஏன் புகார் அளிக்கவில்லை? என செய்தியாளர் கேட்டபோது அந்த மருத்துவமனை நிர்வாகத்தின் தலைவர் பல உதவி இயக்குனர்களின் குழந்தைகளை இலவசமாக இன்ஜினியரிங் உள்ளிட்டவற்றை படிக்க வைப்பதாகவும், தனது புகாரின் விளைவாக அவர்களுக்கு கெட்ட பெயர் கொடுத்து விட வேண்டாம் என கருதியே விக்ரமன் அந்த பெயரை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

மாதந்தோறும் மருத்துவ செலவுக்காக 5 லட்சம் ரூபாய் செலவாகும் நிலையில் 70 சதவீத சொத்துக்களை விற்று விட்டதாகவும் குற்றாலத்தில் உள்ள தோட்டத்தை விற்று அமெரிக்காவில் சிகிச்சைக்கு செல்ல விருப்பதாகவும் அவர் பரிதாபத்தோடு கூறியுள்ளார். எனவே, மருத்துவமனை தரப்பு தங்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE