அஜித் விஜய் என்ன? கதை தான் கெத்து! யாரிந்த H.வினோத்?
‘பெரிய பட்ஜெட் பெரிய ஹீரோ மட்டும் படம் இல்ல ஒரு மனுஷன மேம்பட்ட மனுஷனா மாத்துறதுதான் திரைப்படம்’ என திரைப்படத்திற்கு ஒரு புதிய டெஃபனிஷன் கொடுத்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் ஹெச் வினோத்.
வித்தியாசமாக கதைகளை இயல்பான வடிவில் படைக்கும் கலைஞர்களில் முக்கியமான ஒரு இயக்குனர் ஹெச் வினோத்.
பார்த்திபனிடம் இயக்கம் பயின்றவர்
இவர் நடிகர் பார்த்திபனிடமும் இயக்குனர் விஜய் மில்டனிடமும் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றியவர்.
பச்சை குதிரை மற்றும் கோலி சோடா படங்களில் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றிய ஹெச் வினோத்துக்கு இயக்குனராக வாய்ப்பும் வாழ்க்கையும் கொடுத்தது மனோபாலா தான்.
ஹெய்ஸ்ட் படமான சதுரங்க வேட்டையை காமெடியாக சாமானியர்களுக்கு கொண்டு சென்று, பணம் என்பது வாழ்க்கையில் ஒரு மிக முக்கியமான பொருள் அல்ல, அதையும் மீறி இயற்கையான வாழ்க்கை, வாழ்க்கை சமநிலை இரண்டும் தான் முக்கியம் என்பதை சாமானியர்களுக்கு தனது சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் உணர்த்தினார்.
ஹிட் கொடுத்த சதுரங்க வேட்டை
இந்த படத்தை தயாரித்தது நடிகர் மனோபாலா தான்.
சிறிய நடிகர்களை வைத்து சதுரங்க வேட்டை படம் எடுத்து வசூல் ரீதியாகவும் வரவேற்பு ரீதியாகவும் வெற்றி பெறச் செய்தார்.
மெகா ஹிட் அடித்த தீரன் அதிகாரம் ஒன்று
இவர் ஆப்பரேஷன் பவாரியா என்ற தமிழக காவல்துறையின் வீர தீரமிக்க கொள்ளை கும்பலை பிடிக்கும் கதையை மையப்படுத்தி தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை எடுத்தார்.
காஷ்மோரா, காற்று இடைவெளி படத்துக்கு பின்பு இந்த கதையை கேட்ட கார்த்தி உடனடியாக ஒப்புக்கொண்டார்.
மிகப் பெரும் ரிசர்ச் பணிகளுக்கு பின்பு இந்த படம் வெற்றிகரமாக எடுக்கப்பட்டு திரையிடப்பட்டது.
ஒரு கொள்ளை கும்பல் எந்த மாதிரியான வேலைகளை, எப்படி எல்லாம் செய்யும்? அதை போலீசார் எப்படி முறியடித்தனர்? என்பதை மையமாகக் கொண்டு அந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.
இதற்கு அடுத்து நடிகர் அஜித்தை அப்ரோச் செய்த ஹெச் வினோத்துக்கு அவரது கதை மறுக்கப்பட்டது.
H.வினோத் கதையை மறுத்த அஜித்
“நான் ஏற்கனவே இதே போன்று பல கதைகளில் நடித்து விட்டதால் ஹிந்தியில் வெளியான பிங்க் என்ற படத்தை எனக்காக ரீமேக் செய்து கொடுக்க முடியுமா? தங்களின் எழுத்தும் இயக்கமும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது!” என்று அஜித் கேட்டுக்கொண்டார்.
முதலில் ரீமேக் படங்களை இயக்க ஹெச் வினோத் மறுத்த நிலையில் அஜித் கேட்டுக்கொண்டதற்காக அவர் அந்த திரைப்படங்களை பலமுறை பார்த்து அதை கிரகித்து பின் நேர்கொண்ட பார்வை என்ற படத்தை 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் அஜித்தை வைத்து இயக்கி வெளியிட்டார் ஹெச் வினோத்.
நடிகர் அஜித் ஒரு ஷாட் நடித்த முடித்த பின்பு பொதுவாக சாட் எப்படி வந்திருக்கு என்று அருகில் இருப்பவர்களை கேட்பார்.
ஒரு நடிகர் கேட்கிறார் என்பதற்காக பலரும் நன்றாக வந்துள்ளது என்று சொல்வார்கள்.
ஆனால் நடிகர் அஜித் கேட்டால் கூட இன்னொரு ஷாட் போலாம் சார் என்று ஓபனாக கூறி விடுவார் வினோத்.
எனவே தன்னை வைத்து சிறப்பாக வேலை வாங்க தெரிந்த இயக்குனர் என்று முடிவு செய்துவிட்ட அஜித் வலிமை, துணிவு ஆகிய படங்களையும் ஹெச் வினோத்தையே வைத்து எடுக்க செய்தார்.
“பெரிய நடிகர்கள் எல்லாம் ஒரு மேட்டரே இல்ல“
இந்த நிலையில்தான் சமீபத்திய திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் ஹெச் வினோத், “திரைப்படம் என்பது பெரிய நடிகர்களையோ பெரிய பட்ஜெட்டையோ பெரிய அளவில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டு கொடுத்துவிட்டாலோ அது சிறந்த திரைப்படமாக ஆகாது” என்று கூறியுள்ளார்
“மாறாக ஒரு திரைப்படம் எப்படி ஒரு மனிதனை சிறந்த மனிதனாக மேம்படுத்துகிறது என்பதைக் கொண்டே அந்தத் திரைப்படம் சிறந்த திரைப்படமாக கருதப்படும்’ என்று ஹெச்பினோத் திரைப்படத்துக்கு ஒரு புதிய டெபினிஷனை கொடுத்து இருக்கிறார்.
விஜயின் கடைசி படத்தை இயக்கும் வினோத்
இவர் நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமான 69ஆவது படத்தில் நடிகர் விஜயை இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
என்னதான் நடிகர் விஜய் அஜித் என அவர்களுக்காக படம் செய்தாலும் இவர் கதைக்கான இயக்குனர்.
இவரது கதையை முக்கியத்துவம் ஆக கருதி திரைப்படம் எடுத்தால் அது மீண்டும் ஒரு சதுரங்க வேட்டையையோ அல்லது தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படத்தையோ எடுக்க உதவும்.
ஆனால் பெரிய நடிகர்களிடம் ஒரு நல்ல கதை சொல்லி இயக்குனர் கிடைத்துவிட்டால் அவர் நடிகர்களுக்கான படத்தையே செய்ய வேண்டிய உள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகிறது
இது பற்றி உங்கள் கருத்து என்ன? என்பதை கமெண்டில் பதிவிடவும்