அல்வா கொடுக்கிறதுன்னாலும் சாப்பிடுவதாலும் அவ்வளவு ருசியா இருக்கும். அப்படி நீங்களே வீட்ல அல்வா செஞ்சு எல்லாருக்கும் கொடுத்தா எவ்வளவு நல்லா இருக்கும். அதுவும் துளி கூட எண்ணெய் நெய் பயன்படுத்தாமல் கொழுக்கு மொழுக்குன்னு அல்வா செஞ்சீங்கன்னா வீடே ரவுண்டு கட்டி சாப்பிடும்.

அதிலும் குறிப்பாக டயட்ல இருக்குறவங்க எல்லாம் அச்சச்சோ இவ்வளவு நெய் ஊத்தி இவ்வளவு எண்ணெய் ஊத்தி சாப்பிட்டுட்டோமே? இந்த கலோரி எல்லாம் எப்ப தான் எரிக்கிறது? அப்படின்னு சொல்லி கவலையில் இருப்பாங்க. அந்த கவலையே தேவையில்லை இந்த மாதிரி ஒரு ஸ்பெஷலான அல்வாவுக்கு கொஞ்சம் கூட கில்டினஸ் இல்லாம அள்ளி அள்ளி சாப்பிடுற அளவுக்கு ரொம்ப ஹெல்த்தியா இருக்கும். அந்த ரெசிபி எப்படி செய்யறது? என்னென்ன பொருள் எல்லாம் தேவை அப்படிங்கிறது இப்ப பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

1 கப் அவல்

300 கிராம் வெல்லம்

1 தேங்காய்

அடுத்து என்ன தேடுறீங்க? அவ்வளவுதாங்க இன்கிரிடியன்சே. சரி வாங்க இப்ப எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

செய்முறை

அவலை நன்றாக வறுத்து பொடி ஆக்கிக் கொள்ளவும்

தண்ணீர் ஊற்றி வெள்ளத்தை உருக்கி அரை கப் வருமளவு காய்ச்சி வடித்துக் கொள்ளவும்

3 முறை தேங்காயிலிருந்து பால் எடுத்து அதனை 3 கப்புகளில் வைத்துக் கொள்ளவும்

பொடியாக்கிய அவலை தேங்காய் பாலில் ஊற்றி நன்கு கிளறவும்.

அடுத்து அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வானலியை வைக்கவும். அடிகனமான வாணலி என்றால் அல்வா திரண்டு வரும்போது அடிபிடிக்காமல் இருக்க எளிமையாக இருக்கும்.

அந்த வாணலியில் ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

அடுத்து அரைத்து வைத்த மாவை அதில் ஊற்றி சற்று திக்கான கன்சிஸ்டெண்சி வரும் வரை கிளறவும்.

இப்போது வெள்ளப் பாகை அதனில் ஊற்றி கிளறவும்.

வெல்லம் நன்றாக கரைந்து செமி சாலிடான ஒரு கன்சிஸ்டெண்சி வரும் அளவு கிளறவும்.

வேறு ஒரு பாத்திரத்தில் இந்த அல்வாவை எடுத்து ஊற்றவும்.

சற்று நேரம் கழித்து கீத்து போட்டு எடுத்தால் வாய்க்குள் கொழுக்கு மொழுக்கு என உருளும் அல்வா ரெடி.

நெய், எண்ணெய் இலலாம எப்படி ஒட்டாம வரும்னு நீங்க யோசிக்கிறது த காரிகைக்கு கேட்டுடுச்சு. தேங்காய் பால் சேர்ப்பதால் அதிலேயே தேங்காய் எண்ணெயின் வழவழப்பு தன்மை வரும். எனவே தனியாக நெய்யோ அல்லது எண்ணெயோ சேர்க்க வேண்டியதில்லை. மேலும் தேங்காயிலிருந்து எடுத்த பால் என்பதால் அதில் நல்ல கொழுப்புகளே அதிகம் இருக்கும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE