நடிப்பை கைவிட்டாரா அதிதி? உண்மை இதான்
இயக்குனர் சங்கரின் மகளும் விருமன், மாவீரன் படங்களின் கதாநாயகியுமான அதிதி தற்போது மருத்துவ உடையில் போட்டோ போட்டது அவரது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.
பிரம்மாண்டங்களுக்கு மறுபெயர் என்றால் அதனை சங்கர் என்று அழைக்கலாம். அத்தகைய இயக்குனர் சங்கர் தனது மகள் அதிதியை மருத்துவம் பயில வைத்திருக்கிறார். ஒரு மருத்துவர் ஆக அவர் இருந்தபோதும் தனக்கு நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தினால் நடிப்பை கற்றுக்கொண்டு அவர் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக வலம் வருகிறார்.
இந்த நிலையில், அதிதி சமூக வலைதளங்களில் வெளியிடும் சில வீடியோக்கள், புகைப்படங்கள் அவரை கிரிஞ்சு என பலரும் விமர்சிக்கும் வகையில் இருந்தாலும் அதை கியூட் என ரசிக்கும் ரசிகர் பட்டாளம் ஏராளமாக உள்ளது. இன்ஸ்டாகிராமில் மட்டும் அதிதி ஷங்கரின் அஃபிஷியல் பக்கத்தை ஒரு மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.
இந்த நிலையில் தான் நடிகை அதிதி சங்கர் மருத்துவரைப் போன்ற உடை அணிந்து கையில் கிளவுஸ் அணிந்து தலையில் கேப், முகத்தில் மாஸ்க் சகிதம் பக்கா மருத்துவர் கெட்டப்பில் அமர்ந்திருக்கிறார். ஒரு சாதாரண நாற்காலியில் அவர் அமர்ந்திருப்பதால் இது திரைப்படத்துக்கான ஷூட்டிங் ஸ்பாட் அல்ல என பலரும் யூகிக்கின்றனர்.
மேலும் ஒரு சிலரோ படத்துக்கு சரியான சம்பளம் கிடைக்காததால் மருத்துவத் தொழிலுக்கே போய்விட்டார் போல என்றும் விமர்சித்து வருகின்றனர்.
ஆனால் மினியன்ஸ் மிஷாப் என்ற பெயரில் அவர் ஐடி கார்டு அணிந்து இருப்பதால் இது படத்துக்கான பிரமோஷன் ஆக தான் இருக்க வேண்டும் என்றும் ஏனெனில் இப்படி ஒரு மருத்துவமனை எங்குமே கேள்விப்பட்டதில்லை என்றும் யூகிக்க முடிகிறது.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.