மின் இணைப்பு பெயர் மாற்றம்? சீக்கிரம் பண்ணுங்க டேட் முடிய போகுது
மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய நடக்கும் சிறப்பு முகாம் ஓரிரு நாட்களில், அதாவது வருகின்ற ஆகஸ்ட் 24ஆம் தேதியோடு முடிவடைகிறது.
பத்திரம் பெயர் மாற்றியவர்கள் மின் இணைப்புக்கான பெயரை மாற்றுவதற்கு அதிக காலம் எடுத்தது. இதையடுத்து பெயர் மாற்றத்துக்கான கட்டணம் செலுத்திய அதே நாளில் பெயர் மாற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். இதையடுத்து விறுவிறுப்பான ஏற்பாடுகள் தொடங்கின. மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும் இதுபற்றி பேசினார். அப்போது ஒரு மாதத்துக்கு உடனடி பெயர் மாற்றத்துக்கான சிறப்பு முகாம் நடக்கும் என அறிவித்திருந்தார்.
இதையடுத்து கடந்த ஜூலை 24-ம் தேதி முதல் ஒரு மாத காலம் சிறப்பு முகாம் நடைபெறும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்திருந்தது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
“தமிழ்நாடு முழுவதும் உள்ள வீட்டு மின் இணைப்பு மற்றும் பொது மின் இணைப்புதாரர்களுக்கென ‘சிறப்பு பெயர் மாற்ற முகாம்’ ஒன்றினை வருகின்ற ஜூலை 24ஆம் தேதி முதல் ஒரு மாதகாலம் வரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாமா?
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைச் செலுத்தி பெயர்மாற்றம் செய்துகொள்ளும் வசதி நடைமுறையில் உள்ளது.
எப்போதெல்லாம் நடக்கும்
கடந்த மாதமான ஜூலை 24 முதல் ஒரு மாதத்துக்கு இந்த சிறப்பு பெயர் மாற்றம் முகாம்கள், ஞாயிற்றுகிழமை மற்றும் பண்டிகை தினங்கள் தவிர்த்து, அனைத்து மின்வாரிய அலுவலுக வேலை நாட்களிலும் நடைபெறும். காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை செயல்படும். வீட்டு மின் இணைப்புகள் மற்றும் பொது மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்ய, கீழ்காணும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்து, கட்டணமான 726 ரூபாய் செலுத்தி இந்த ‘சிறப்பு பெயர் மாற்றம் முகாம்’ மூலம் பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர் கீழே குறிப்பிட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் பிரிவு அலுவலகத்தில் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
ஆதார் அட்டை
நகராட்சி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சமீபத்திய சொத்து வரி
நகராட்சி/மாநகராட்சி தவிர மற்ற பகுதிகளில் விற்பனை பத்திர நகல் அவசியம்
இறப்பின் காரணமாக பெயர் மாற்றம் செய்யும் விண்ணப்பாதார்களுக்கு தேவையான ஆவணங்கள்
சொத்துப் பத்திரம் அல்லது செட்டில்மெண்ட் பத்திரம்
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.