பெண்கள் மாமியார்களுக்கு அடிமைகளல்ல – நீதிபதி

திருச்சூரைச் சேர்ந்த பெண் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அப்போது திருமணத்தின் புனிதமான பந்தத்தை நீட்டிக்கும் பொருட்டு, திருமண பந்தத்தில் இணைந்து வாழுமாறு திருச்சூர் குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் 6 மாதம் சேர்ந்து வாழ உத்தரவிட்டனர்.

ஆனால், இதை எதிர்த்த பெண், தான் குழந்தையோடு பணி இட மாறுதலால் தலசேரிக்கு குடி பெயர்ந்துவிட்டதாகவும் விவாகரத்து வழக்கை இங்கேயே மாற்றி உத்தரவிடுமாறும் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன், பெண்கள் ஒன்றும் மாமியார்களுக்கும் – அம்மாக்களுக்கும் அடிமை இல்லை என கருத்து தெரிவித்தார். பின்பு, கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் மாற்றி உத்தரவிட்டார்.

ஏற்கெனவே இதே நீதிபதியான தேவன் ராமச்சந்திரன்தான், ஆணாதிக்க மனநிலைப் போக்கு இருப்பதாக தனது வேதனையைப் பதிவு செய்தார்.

சமீபத்தில் நீதிமன்றத்துக்கு வருவோர் நீதிபதி முன் கடவுளைப் போல குனிந்து வணங்கி நிற்க வேண்டியதில்லை என நீதிபதி, பி.வி.குன்ஹிகிருஷ்ணன் கருத்து கூறியிருந்தார். நீதிபதிகள் பெண்களுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருவது, பெண்ணியவாதிகளின் மத்தியில் இந்தக் கருத்து அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

பொதுவாகவே பெண்கள் குடும்ப வன்முறைகளில் அதிகம் பாதிக்கப்படுவதாக தரவுகள் கூறுகின்றன. எனவே தான் சட்டங்களும், சட்ட நுணுக்கங்களும் பெண்களுக்குச் சாதகமாகவே உள்ளன.பெண்கள் இலகிய மனம் படைத்தவர்கள் என்பதால், குடும்பத்தைக் கட்டிக்காக்க அவர்கள் தாங்க முடியாத வலிகளையும் பொறுத்து குடும்பத்தை கட்டி வழி நடத்துகின்றனர். இருந்தபோதும், அவர்கள் பப வகைகளில் துன்பங்களுக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE