மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ். திரும்பவும் லாக்-டவுன்?
5 ஆண்டுகளுக்கு முன் உலகையே அச்சுறுத்திய கோவிட்-19 வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அது எந்தெந்த நாடுகளில் பரவுகிறது? எவ்வளவு வேகமாக பரவுகிறது? இதனால் என்னவெல்லம் நடக்கும் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கொரோனா பரவியது எப்படி?
2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் பகுதியில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நுரையீரல் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த வகை வைரஸுக்கு கோவிட் 19 என்று பெயரிடப்பட்டது. பின்னர், 2020ஆம் ஆண்டு இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்த ஆரம்பித்தது.

பரிசோதனைகள், லாக்-டவுன், இறப்புகள்
தொடக்கத்தில் இந்த வைரஸை எப்படி கையாள்வது என்று தெரியாமல் அனைத்து நாடுகளும் லாக்-டவுனை அமல்படுத்தின. இதனால், பொருளாதாரம் பாதித்தது. மக்கள் செய்வதறியாது திகைத்தனர். மறுபுறம் இறப்புகள் அதிகரித்தன. இந்த கொரோனாவுக்கு வைத்தியம் பார்க்க முடியாமல், மருத்துவர்களே மலைத்தனர்.

தூக்கியடித்த இரண்டாம் அலை
2020ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சற்று குறையத் தொடங்கிய கொரோனா தொற்று, 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பின் மீண்டும் உயரத் தொடங்கியது. இந்த முறை, முதல் முறை வந்ததை விட வீரியமாக வந்து உயிரிழப்பை அதிகப்படுத்தியது. மீண்டும் லாக்-டவுன் போட்டால் பொருளாதார பாதிப்பு வரும் என்ற சூழலில் பகுதியாக லாக்-டவுன் முறை அமல்படுத்தப்பட்டு கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதன்பின், தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு உயிர்கள் காப்பற்றப்பட்டன.

இப்போது மீண்டும் கொரோனா
நான்கு ஆண்டுகளுக்குப் பின் கொரோனாவின் வீரியம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகளில் ஏற்கெனவே அதிகளவிலான கொரோனா பரவல் கண்டறியப்பட்டிருக்கும் சூழலில், சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் என்ன சிக்கல்?
தற்போது இருக்ககூடிய கொரோனா தொற்று எண்ணிக்கை கவலையளிப்பதாக இல்லாவிட்டலும், நாளுக்கு நாள் அதிகரிக்கும் அதன் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது. இந்த விவகாரதை கூர்ந்து கவனித்து வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. திரும்பவும் எல்லாத்தையும் ஆரம்பிச்சுடுவாங்களோ!