முன்பெல்லாம் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, உலை கொதித்ததும், அதனுள் அரிசி, பருப்பு, காய்கறிகள் ஆகியவற்றை போட்டு சமைப்பார்கள். ஆனால் நவீன சமையலறைகளில் குக்கர் என்ற ஒரு சாதனம் இல்லாத வீடே இல்லை என்று கூறலாம். சாப்பாடு வேக வைப்பது முதல் பருப்பு, புலாவ், பிரியாணி என மக்கள் பலரும் பிரஷர் குக்கரில் தங்களது உணவை சமைக்கின்றனர். எரிவாயுவை சேமிப்பதற்கும், வெகு சீக்கிரம் சமைத்து முடிக்கும் துரிதத்துக்காகவும் பிரஷர் குக்கர் பயன்படுகிறது.

ஆனால் சில சமயம் குக்கரை பயன்படுத்தத் தெரியாமல் பயன்படுத்துவதால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கும் நிலை உருவாகிறது.

விசில் அடிக்காது

ஒரு சில சமயங்களில் குக்கரை அடுப்பில் வைத்து, அடுப்பை பற்ற வைத்து, வெகுநேரமான பின்னும் விசில் அடிக்காது. ஆனால், சாப்பாடுடோ, அதனுள் வைத்துள்ள பொருளோ தீர்ந்து போய்விடும். இருப்பினும் விசில் மட்டும் வராது. இதற்கு காரணம் குக்கரின் விசில் மூலம் தண்ணீர் வெளியேறுவதற்கு நேரம் ஆகும். அரிசியோ பருப்போ வந்து விசிலை அடைத்துக் கொள்ளும். இதுபோன்ற தொடர் பிரச்னைக்கான அவற்றுக்கான தீர்வுகளை வழங்குகிறது த காரிகை. உங்கள் நட்புக்களுக்கும் இந்த டிப்ஸ்களைப் பகிருங்கள்.

சரியான அளவு தண்ணீர்

குக்கரில் சாப்பாடோ, உணவு பொருட்களையோ வேகவைக்கும் போது அதற்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ அவ்வளவு அளவை மட்டும் பலர் ஊற்றுவதில்லை. குறைந்த நேரத்தில் அரிசியை ஊற வைத்த காரணத்தால் சாப்பாடு நன்றாக வேக வேண்டும் என்பதற்காக அதிக அளவான தண்ணீரை ஊற்றி விடுகின்றனர். இதனால் பிரஷர் கொடுத்து குக்கருக்குள் இருக்கும் பொருளை வேக வைக்க முடியாமல் குக்கர் திணறும். இச்சூழலில் பிரஷரான ஆவியுடன் சேர்ந்து விசில் அடிக்கும் போது, கூடுதலாக இருக்கும் தண்ணீரும் வெளியே வரும். அதனால் சரியான அளவு தண்ணீர் வைத்து குக்கரை மூட வேண்டும்.

அளவான நெருப்பு

சரியான தண்ணீரை ஊற்றி அதிகமாக அளவு நெருப்பை கூட்டிவிட்டாலும் தண்ணீர் கொதிக்கும் வேகத்தில் அது விசிலுடன் சேர்ந்து வெளியேற வாய்ப்புள்ளது. இதனால் எப்போதும் நடுத்தர வெப்பத்தையோ அல்லது மிக குறைந்த வெப்பத்திலேயோ வைத்து சமைப்பது நல்லது.

சரிவர சுத்தம் செய்யாதது

குக்கரின் விசிலில் அழுக்கு படிந்து இருக்கலாம். இது விசிலை சுத்தம் செய்வது எவ்வளவு அவசியம் என்பதை அவ்வப்போது நமக்கு புரிய வைக்கும். அழுக்கு படிந்த விசில் ஒரே மூச்சில் அடிப்பதற்கு நேரம் எடுக்கும். விசில் வந்து வந்து அடங்குவது போன்ற சத்தத்தை கொடுக்கும். ஆனால் விசில் மேல் எழும்பாது. அத்துடன் தண்ணீரோடு சேர்ந்து விசில் அடிக்க ஆரம்பிக்கும். அதனால் ஒவ்வொரு முறை குக்கரை கழுவும் போதும் பிரஷர் குக்கரின் விசிலை நன்றாக சுத்தம் செய்து, அடைப்பை நீக்க ஊதிவிட்டு வெயிலில் காயவைத்து அனைத்து ஓட்டைகளிலும் அடைப்பு இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அதன் பின்னர் மூடி சமைக்கலாம். அதேபோல்தான் குக்கர் விசில் மாட்டும் இடத்தில் உள்ள குழாயிலும் ஓட்டைகள் இருக்கும். அதிலும் ஏதேனும் அடைத்து இருந்தால் அழுக்கு படிந்து இருந்தால் விசில் வருவதில் சிக்கல் ஏற்படலாம். இது சில சமயம் குக்கர் வெடிக்கும் அபாயத்துக்கும் வழிவகுக்கும்.

கேஸ் கட்

பல குடும்பங்களில் ஒரே கேஸ் கட்டை பல குக்கர்களுக்கு பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. இது சீக்கிரம் கேஸ் கட்டை தேய்த்து விட வழிவகுக்கும். அழுக்கு நிறைந்த கேஸ் கட்டுகளாலும் தண்ணீர் பக்கவாட்டில் வெளியேற வாய்ப்புள்ளது. இது குக்கரின் மூடியை சரிவர பொருந்த அனுமதிக்காது. அதேசமயம் பக்கவாட்டில் நீர் மட்டுமின்றி பிரஷரான ஆவியும் வெளியேற வாய்ப்புள்ளது. இதனால் உணவு வெகு சீக்கிரத்தில் வேகாததுடன் விசிலும் வராது. குக்கர் மூடி தனியே கழன்று தூக்கி அடிக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே ஒவ்வொரு குக்கருக்கும் அதற்கேற்ற தனித்தனி கேஸ் கட்டுகளை பயன்படுத்துவதும், உரிய நேரத்தில் அதை மாற்றுவதும் நலம் பயக்கும்.

சேதமான மூடி

குக்கர் பழையதாக இருந்தாலோ அல்லது அதன் மூடி பலமுறை கீழே விழுந்து இருந்தாலும் அது சேதமடைந்து இருக்கலாம். நெளிவு சுழிவுகளின் காரணமாக அதனுள் இருந்து பிரஷரை தக்கவைக்காது பக்கவாட்டில் வெளியேற்றும் தன்மை அதிகரிக்கும். அத்தகைய சூழலில் தண்ணீர் வெளியேறினால், குக்கர் மூடியே ரிப்பேர் செய்வது அல்லது புதிய குக்கர் வாங்குவது நல்லது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்

You may have missed

Facebook
Instagram
YOUTUBE