குக் வித் கோமாளி தொடங்கியது முதலே மன அழுத்தத்தில் இருப்பவர்கள், அலுவலகப் பணிச் சுமையில் சிக்கியவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள் என பலரும் பார்த்து சிரித்து மகிழும் ஒரு நகைச்சுவை மருத்துவமாகவே மாறிவிட்டது அந்த நிகழ்ச்சி.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் நன்கு சிரித்து உடலின் அனைத்து நரம்புகளையும் செயலாக்கமடையச் செய்த பங்கில் கோமாளிகளுக்கு மட்டுமின்றி நிகழ்ச்சியின் நடுவராக இருந்தவர்களுக்கும் பங்கு உண்டு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அப்படி நடுவர்களாக இருந்தவர்களில் வெங்கடேஷ் பட்டும் ஒருவர். இவர் விஜய் டிவியில் பல ஆண்டுகளாக நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அதில் இவருக்கு அதிக புகழ் பெற்றுத் தந்ததும், மக்களின் மனதில் இடம்பெறச் செய்த நிகழ்ச்சிகளில் ஒன்றுமாக அமைந்தது தான் ந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி.

ஆனால், 5-வது சீசனின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் இடம்பெறமாட்டேன் என அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் சமையல் கலை நிபுணர் வெங்கடேஷ் பட். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்வருமாறு. . .

“குக் வித் கோமாளியின் புதிய சீசன் தொடங்குவது குறித்து கடந்த சில மாதங்களாக ஊகங்கள் நிலவி வருகின்றன. சீசன் 5-ல் நான் நடுவராக தொடர்வேன் என சமூக வலைதளங்களில் கணிப்புகள் வலம் வருகின்றன. புதிய சீசனில் நான் பங்கேற்கவில்லை என்பதை தெளிவுப்படுத்தும் வாய்ப்பாக இதனை பயன்படுத்திக்கொள்கிறேன்.

என்னையும் சேர்த்து பல லட்சம் பேரை மகிழ்விக்கும் அந்த அற்புதமான நிகழ்ச்சியிலிருந்து ப்ரேக் எடுத்துக்கொள்கிறேன். குக் வித் கோமாளி என்னுடைய ஜாலியான பக்கத்தைக் காட்டியது. மேலும் நான் நானாக இருக்க வசதியை ஏற்படுத்தி தந்தது. 24 ஆண்டுகளுக்கும் மேலாக நான் அங்கம் வகித்த சேனலுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, மற்ற வாய்ப்புகளை நோக்கிச் செல்ல முடிவு செய்துள்ளேன். நிகழ்ச்சியின் இயக்குநர் உள்ளிட்டோருக்கு நன்றி.

மன அழுத்தத்தில் இருக்கும் பலருக்கும் அவர்களின் மன அழுத்ததை குறைக்கும் நிகழ்ச்சியாக இது அமைந்தது. இந்த முடிவு ஒரு கடிமான முடிவாக இருந்தாலும், அதில் நான் உறுதியாக இருக்கிறேன். விரைவில் வரவிருக்கும் வித்தியாசமான நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அது குறித்து யூகித்துக்கொண்டிருங்கள். நன்றி” எனக் கூறியுள்ளார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE