பிரியாணியின் மெயின் ஐட்டமே பீஸ் தான். அந்த சிக்கன் பீஸ்காகவோ மட்டன் பீசுக்காகவோ குழுவாக சாப்பிடுபவர்களாக இருந்தால் ஆளாளுக்கு உனக்கு எனக்கு என அடித்துக் கொள்வார்கள். ஆனால் சிக்கன் பிரியாணி வாங்கிய ஒரு கடையில் பிரியாணியில் பீஸ் இல்லாமல் கொடுத்தது நுகர்வோர் நீதிமன்றம் வரை சென்று விட்டது

பெங்களூருவை சேர்ந்த கிருஷ்ணப்பா தனது வீட்டில் சிலிண்டர் காலி ஆகிவிட்டதை அறிந்தார். மாற்றுவதற்கு வேறு ஒரு சிலிண்டர் இல்லாததால் அன்றைய தினம் இரவு சாப்பாட்டை ஹோட்டலில் சாப்பிட்டு விடலாம் என தம்பதி முடிவு செய்தனர்.

அருகிலுள்ள பிரசாந்த் ஹோட்டலுக்கு சென்று ஒரு சிக்கன் பிரியாணி 150 ரூபாய் வீதம் வாங்கி உள்ளனர். கொடும் பசியில் வீட்டுக்கு வந்து உணவு பார்சலை பிரித்துப் பார்த்தால் அதில் வெறும் குஸ்கா மட்டுமே இருந்திருக்கிறது. எவ்வளவு தூரம் அடியில் கிளறி பார்த்தும் கூட ஒரு பீஸ் கூட இல்லை. ஏற்கனவே பசியில் இருந்த தம்பதியும் மனம் உடைந்து போனார்கள்.

ஓட்டல் பிரசாந்துக்கு போன் செய்து, தாங்கள் சிக்கன் பிரியாணிக்கான பணம் ₹150 செலுத்தி தங்களுக்கு குஸ்கா மட்டுமே கொடுத்திருப்பதாக கூறினர்

இதை அடுத்து அடுத்த அரை மணி நேரத்துக்குள் உங்கள் வீட்டு முகவரிக்கு வந்து பிரியாணி டெலிவரி செய்வதாக கடை நிர்வாகம் கூறியது.

இதனை நம்பி தம்பதியரும் 2 மணி நேரம் வரை கடும் பசியில் காத்திருந்தும் யாரும் பிரியாணியை கொண்டு வரவில்லை. எனவே அவர்கள் அந்த குஸ்காவை சாப்பிட்டுவிட்டு படுத்து விட்டனர்.

இருந்த போதும் 150 ரூபாய்க்கு குஸ்கா வாங்கி சாப்பிட்ட அவர்களால் அதனை ஏற்கவே முடியவில்லை.

எனவே பெங்களூரு அர்பன் நுகர்வோர் நீதிமன்றத்தில் அவர்கள் தங்களுக்கு நேர்ந்த ஏமாற்றம் பற்றி வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கு விசாரணைக்கு ஹோட்டல் பிரசாந்த் தரப்பில் யாரும் வரவில்லை.

தங்களுக்கு இழப்பீடாக ரூ.30,000 வேண்டும் என அந்த தம்பதி வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

இதை அடுத்து சம்மன் பிறப்புத்த நீதிமன்றம் மே மாதம் தீர்ப்பு வழங்கியது.

அதில், நுகர்வோரை ஏமாற்றியதற்காக போட்டோ ஆதாரங்களை வைத்து உறுதிப்படுத்தியது.

கடந்த ஏப்ரல் மாதம் கிருஷ்ணப்பா தனது வீட்டில் சிலிண்டர் தீர்ந்து விட்டதால் பிரியாணி வாங்கிய நிலையில் சிக்கன் பீஸ் இல்லாமல் வெறும் குஸ்கா மட்டுமே கொடுத்ததால் சம்பந்தப்பட்ட ஹோட்டல் பிரசாந்த் நிர்வாகத்திற்கு ரூ.1,000 அபராதம் மற்றும் விதித்தது. அத்துடன் பிரியாணிக்கான பணம் ₹150 சேர்த்து ₹1150 ஆக செலுத்தும் படி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதே போல் கோவை ஆனந்தாஸ் கடையில் ப்ரைட் ரைஸ் வாங்கிய நுகர்வோர் ஒருவர் அந்த டப்பாவில் ஆனந்தாஸ் நிறுவனத்தின் லோகோ பிரின்ட் செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பார்சலுக்கு ₹5.71 என ஹோட்டல் நிர்வாகம் பில்லோடு சேர்த்து வசூலித்த நிலையில், அந்த நிறுவனத்தின் விளம்பர ஏஜென்டாக தன்னை பயன்படுத்துவது பற்றி, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை அடுத்து அவருக்கு ₹15,000 அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE