வழக்கமாக விபத்துக்களிலும் உயிரிழப்புகளிலும் சென்னை மாவட்டம் தான் தமிழகத்திலேயே முதல் இடம் பிடித்து வந்தது/ ஆனால் அந்த தரவை தற்போது புரட்டிப் போட்டுவிட்டு கோவை மாவட்டம் பிடித்துள்ளது இது மிகவும் துரதிஷ்டவசமான விஷயம் தான்.

கோவை மாவட்டத்தில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டிலேயே அதிக சாலை விபத்தும் அதிக உயிரிழப்பும் ஏற்படும் மாவட்டமாக கோவை உள்ளது. கோவையில் 2023 -ல் 3642 விபத்துகளில் 140 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் அதுவே சென்னையோடு ஒப்பிடும்போது அதே 3642 விபத்துகளில் 500 பேர் தான் உயிரிழந்துள்ளனர்.

சென்னை மாறியது எப்படி?

சென்னையை பொருத்தவரை தற்போது போக்குவரத்து விதிமுறைகளை அமல்படுத்துவது மிகவும் கண்டிப்பாக்கிவிட்டனர். வாகனம் ஓட்டுபவர்களும் வாகனத்தின் பின்னே அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் போட்டாக வேண்டும் என்ற விதிமுறை மிகவும் ஸ்ட்ரிட்டாக ஃபாலோ செய்யப்படுகிறது.

மருத்துவ வசதிகள்

சென்னையை பொருத்தவரை 4 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் அதன் அதிதீவிர எமர்ஜென்சி சேவை பிரிவுகள் உள்ளன. அதுமட்டுமின்றி சென்னையின் புறநகர் பகுதிகளில் எமர்ஜென்சி கேர் சென்டர் என்ற பெயரில் ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டு 92 சதவீத மரணங்கள் தடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் கோவையில் இரண்டே இரண்டு பெரிய மருத்துவமனைகள் தான் உள்ளன. ஒன்று கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மற்றொன்று இஎஸ்ஐ மருத்துவமனை. எனவே 108 ஆம்புலன்ஸ் மூலம் அடிபட்டவரை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் முன்பாகவே பலர் உயிரிழந்து வருகின்றனர்.

சென்னையைப் போன்று ஈசி எனப்படும் எமர்ஜென்சி கேர் சென்டர்கள் கோவையில் இல்லை. எனவே ஆங்காங்கே முகாம்கள் இல்லாததால் நீண்ட தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் முன்பு பல உயிர்கள் பிரிந்து விடுகின்றன.

சென்னைக்கு ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்வது என்பது போன்ற வழக்குகள் 180 முதல் 200 ஆவது தினமும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை பதிவு செய்து வருகிறது. இதுபோன்ற கண்டிப்பான விதிமுறை அமல்பாடுகளால் கடந்த ஆண்டு ஹெல்மெட் அணியாமல் உயிரிழந்தவர்கள் வெறும் 45 பேர் மட்டுமே என்பதால் சென்னை பெரும் முன் உதாரணமாக மாறி வருகிறது.

அதேபோல் விபத்துக்கள் அதிகம் நடக்கும் கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருப்பூர் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் எமர்ஜென்சி கேர் சென்டர் களை அமைத்து போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு கடினமான தண்டனைகளை கொடுத்தால் இந்த உயிரிழப்புகள் குறையும் என்று நம்பப்படுகிறது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE