ஆன்லைன் மளிகை டெலிவரிக்கு வந்த கூட்டுறவுத்துறை
கூட்டுறவுத்துறையானது மக்களுக்கு மலிவான விலையில் மளிகை உள்ளிட்ட பொருட்களை வழங்க கோ ஆப் பஜார் என்ற அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளது.
எப்படி செயல்படுகிறது?
கோ ஆப் பஜார் மூலமாக ஒருவர் மொபைலில் இருந்து தங்களுக்கு வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். வீட்டுக்கே வந்த டோர் டெலிவரி செய்யும் வசதியை தமிழக கூட்டுறவு துறை அறிமுகம் செய்துள்ளது.
என்னென்ன பொருட்கள்?
உணவு, மளிகை, மருந்து, வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவை வீட்டுக்கே வந்து விநியோகிக்கப்படுகிறது. குறிப்பாக மசாலா பொடி வகைகள், எண்ணெய், பருப்பு வகைகள், உயிரி உரங்கள் என 64 வகையான பொருட்கள் ஆர்டர் செய்தால் உடனடியாக வீடு தேடி வரும் வகையில் கோ ஆப் பஜார் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது
உற்பத்தி நிறுவனங்கள்
திருச்செங்கோடு, ஈரோடு, பெருந்துறை, சைதாப்பேட்டை, திருவல்லிக்கேணி, காஞ்சிபுரம், கொல்லிமலை, சத்தியமங்கலம் உள்ளிட்ட 8 கூட்டுறவு சங்கங்கள் மூலம் தயாரிக்கப்படும் 64 வகையான பொருட்களை இந்த செயலியில் சந்தை படுத்தப்படுகிறது
குறைந்த விலை
தனியார் நிறுவனங்களை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. உதாரணத்திற்கு ஒரு லிட்டர் கடலை எண்ணெய் தனியார் நிறுவனங்களில் 270 முதல் 300 ரூபாய் வரை விற்பனையாகும் நிலையில், கூட்டுறவுத் துறையின் கோ ஆப் பஜார் மூலம் ரூ.240 க்கு வாங்கிக் கொள்ளலாமாம்.
எங்கிருந்து வரும்
பொருட்களை ஆர்டர் செய்தால் அருகில் உள்ள கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இருந்து பொருட்கள் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போதைக்கு டெலிவரி பார்ட்னர்கள் தனியே பணியாற்றுவதால் டெலிவரி சார்ஜ் சற்று அதிகமாக உள்ளதாகவும் கூட்டுறவுத்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக பொருட்களின் எண்ணிக்கையும் பயனாளர்களின் எண்ணிக்கையும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க அதிகரிக்க டெலிவரி சார்ஜ் குறைக்கப்படும் என்றும் கூட்டுறவு துறை அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற தகவல்களை அடிக்கடி தெரிந்து கொள்ள த காரிகையின் சமூக வலைதளப் பக்கங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.