சென்னை, டெல்லி இளசுங்களுக்கு சர்க்கரை நோய் அபாயம், உஷார்!

காற்று மாசு காரணமாக சென்னை டெல்லியில் வசிப்பவர்களுக்கு டைப் 2 வகையிலான சர்க்கரை வியாதி வருவதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது. காற்று மாசுக்கும் – நீரிழிவுக்கும் என்ன தொடர்பு? என்பதை தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

சென்னை மற்றும் டெல்லி என்பது அதிக காற்று மாசு உள்ள இடமாக மாறி வருகிறது. இங்கு மக்கள் வாழ தகுதி பெற்ற நகரமாக இன்னும் சில ஆண்டுகளில் எட்டப் போவது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அரசாங்கங்கள் ஏதேனும், நடவடிக்கை எடுத்தால் ஒழிய ஏதும் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பதற்கு எவ்வித வாய்ப்பும் இல்லை. அது மட்டும் இன்றி தனி நபர்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

காற்று மாசு அதிகரிப்பதால் சர்க்கரை நோய் ஏற்படும் என்று சென்னை மக்களுக்கும் டெல்லி மக்களுக்கும் ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் புதியதாக ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

இந்த சர்க்கரை வியாதி ஆனது டைப் 2 என வகைப்படுத்தப்படுகிறது. அதாவது மரபணு வழியாக பரம்பரை பரம்பரையாக வராமல் லைஃப் ஸ்டைல் டிசீசஸ் என கூறப்படும் வாழ்க்கை வாழும் முறையினால் வரும் நீரிழிவு நோயாக இது கருதப்படுகிறது.

சர்வதேச பத்திரிகைகளில் வெளியான 2 ஆய்வு முடிவுகளும் இதே அதிர்ச்சி தகவல்களை ஒருமித்து தெரிவித்துள்ளன.

2010 முதல் 2016 ஆம் ஆண்டு வரை இந்த சோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக சென்னையில் 6072 பேரிடமும் டெல்லியில் 5342 பேரிடமும் ஆய்வுகள் நடைபெற்றன. அவர்களின் ரத்த மாதிரிகளும் பரிசோதிக்கப்பட்டன.

தெற்காசியாவின் கார்டியோ மெட்டபாலிக் ரிஸ்க் குறைப்பு மையம் தான் இந்த ஆய்வை மேற்கொண்டது. இதன் முடிவின்படி காற்று மாசுபாட்டுக்கும் நீரழிவு நோய்க்கும் பெரிய தொடர்பு இருப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். காற்று மாசு காரணமாக இளைஞர்களும் அதிக அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

காற்று மாசு அதிகரிப்பதால் சர்க்கரை நோய் மட்டுமின்றி உயர் ரத்த அழுத்த பிரச்சனையும் ஏற்படுகிறது. எனவே, அரசாங்கமும், தனிநபர்களும் மக்களின் நல்வாழ்வை உணர்ந்து எச்சரிக்கையோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE