சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கு என்ன சிறப்பு அறிவிப்பு?

சென்னை மாநகராட்சிக்கான 2024 – 25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிலையில், 82 புதிய அறிவிப்புகளை மேயர் பிரியா வெளியிட்டுள்ளார்

கல்விக்கான சிறப்பு அறிவிப்புகள்

மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சுற்றுலாவுக்கு ரூ.45 லட்சம்

LKG – 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தலா 2 சீருடை ரூ.8.50 கோடி

255 பள்ளிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா ரூ.7.46 கோடி

சென்னை பள்ளி மாணவர்களுக்கு காலணிகள் ரூ.3.59 கோடி

பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்க ரூ.61 லட்சம்

பள்ளிகளுக்கு ஆய்வகங்கள், உபகரணங்களுக்கு ரூ.5.80 கோடி

தொழிற்பயிற்சி நிலையத்தை மேம்படுத்த ரூ.3 கோடி

419 சென்னை பள்ளிகளில் உடனடி பழுது பார்க்கும் வகையில் ரூ.1.32 கோடி

திறமைமிக்க மாணவர்களுக்கு STEM பயிற்சி வழங்க ரூ.1 கோடி

338 பள்ளிகளுக்கு 5 பேரமரு பச்சை வண்ண பலகை ரூ.92.95 லட்சம்

UKG பயிலும் 5,944 மாணவர்களுக்கு மழலையர் வகுப்பு நிறைவு பட்டமளிப்பு விழா

மாணவர் பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்க 10 ஆலோசகர்கள்

64,022 மாணவர்களுக்கு ரூ.3.59 கோடியில் தலா 1 செட் Shoe, 2 செட் Socks

பெண்களுக்கான அறிவிப்புக்கள்

200 வார்டுகளிலும் பெண்களுக்கு பிரத்யேக உடற்பயிற்சிக் கூடம் ரூ.10 கோடி

“EmpowHER” உடற்பயிற்சி கூடம் 200 வார்டுகளிலும் அமைக்கப்படும் என அதிரடியாக் அறிவித்ததும் பெண் கவுன்சிலர்கள் பலத்த கரகோசம் எழுப்பி வரவேற்றனர்.

மருத்துவமனைகள், பொதுக்கழிப்பிடங்கள் இடமறிய ஆப் உருவாக்கப்படும்

சொத்து பெயர் மாற்ற ஆவணங்கள், தொழில் உரிமங்கள் இணையத்தில் பதிவிறக்கலாம்

சுற்றித்திரியும் மாடுகளை அடைத்துவைத்து அபராதம் வசூலிக்க மாட்டுத்தொழுவம்

இளஞ்சிறார்களுக்கான ஆரம்ப நிலை பயிற்சிமையங்கள்

புதிதாக 2 நாய் இனக்கட்டுப்பாடு மையங்கள்

மாநகராட்சியில் 4ம்நிலை தொழிலாளர்களுக்கும் முழு உடல் பரிசோதனை

மழைநீர் வடிகால்

மழைநீர் தேங்குவதை தவிர்க்க குளங்கள், பூங்காக்களில் Sponge Park அமைக்க நடவடிக்கை

மாத்தூர் எம்.எம்.டி.ஏ காலனி குளத்தினை ரூ.8.00 கோடி மதிப்பீட்டில் Sponge Park அமைப்பு

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE