மார்பகங்களை அறுத்து வாழை இலையில் வைத்த பெண்

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னே பெண்கள் தங்களுடைய மார்பகங்களை மறைக்கக் கூடாது அப்படின்னு ஒரு விதி இருந்தது. அதுவும் குறிப்பாக பிராமணர்கள் முன்னாடி மேல் சீலை அணியவே கூடாதாம்.

சத்ரியப் பெண்கள்

தமிழக கேரள எல்லையில கடந்த 1822 ஆம் ஆண்டு தொடங்கினது தோல் சீலை போராட்டம். ஆதிக்க சாதிக்கு எதிரா அப்போவே பெண்கள் 40 வருஷம் போராடி இருக்காங்க.

இன்றைய தமிழ்நாட்டோட கன்னியாகுமரி,நெல்லை மாவட்டங்களில் சில பகுதிகளை கேரளாவின் சில பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது திருவிதாங்கூர் சமஸ்தானம். நம்பூதிரி பிராமணர்கள் வரும்போது எல்லாம் பிராமணப் பெண்கள் மேலாடை இன்றி வரணும் அப்படிங்கறது தான் அங்க எழுதப்படாத சட்டம்.

ஆதிக்க சாதி பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது கணவர் நெருங்கிய உறவுகள் தவிர வேறு யாரிடமும் பேசக்கூடாது என்ற விதியும் இருந்தது.

அதிலும் குறிப்பாக கீழ் சாதி பெண்கள் தங்களுடைய மார்பகங்களை மறைக்கிற மாதிரி எந்த ஒரு ஆடையுமே அணியக் கூடாது. அதையும் மீறி அணைஞ்சா முலை வரி கட்ட வேண்டி வரும். அப்படியே வரி கட்டினாலும் நம்பூதிரிமார்கள் முன்னாடி வரும்போது திறந்த மார்பகங்களுடன் தான் இருக்க வேண்டும்.

சூத்திரப் பெண்கள்

சேர்தலா அப்படிங்கற ஒரு இடத்தில நங்கேலி என்ற ஒரு ஈழவப் பெண் மேலாடை அணிந்து இருந்தாங்க. அரசு அதிகாரிகள் அவர்களிடம் வரி வசூலிக்க போனபோது “தன்னுடைய மார்பகங்களை அறுத்து வாழையில வைத்து கொடுத்து தன்னுடைய எதிர்ப்பு தெரிவிச்சாங்க” அதிக ரத்தப்போக்கால அவங்க உயிரிழந்ததுக்கு அப்புறம், அவரோட கணவர் சிறுகண்டன் தீயில பாய்ந்து உயிர் துறந்தாங்க. அந்த இடம் இதுவரைக்கும் “முலைச்சி பறம்பு” அப்படின்னு அழைக்கப்படுது.

1819 ல ராமவர்மா அப்படின்ற அரசர் மேலாடை அணியக்கூடாது என அறிவிச்சதுக்கப்புறம் தோல் சீலை உரிமை போராட்டம் தொடர்ந்து 3 கட்டங்களா நடந்தது. இதை ஒரு வாய்ப்பா பயன்படுத்திக்கிட்ட ஆங்கில அதிகாரி ஜான் மன்றோ கிறிஸ்தவ மதத்துக்கு மாறினா குப்பாயம் போன்ற நீண்ட மேலாடைய பெண்கள் அணிந்து கொள்ளலாம் என ஒரு திருத்தம் கொண்டுவந்தார். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெருவாரியான பெண்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தாங்க.

இதை பொறுத்துக் கொள்ளாத நாயர், வேளாளர் போன்ற ஆதிக்க சாதியினர் பெரும் கலவரம் ஏற்படுத்தினாங்க. ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களுடன் ரவிக்கைகள் கிழிக்கப்பட்டு மரங்களில் தொங்க விடப்பட்டன

குமரி மாவட்டத்தில் நாடார் சமூகத்தில் வந்த வைகுண்டர் அப்படிங்கற சமூக திருத்தவாதி, பெண்கள் எக்காரணம் கொண்டும் திறந்த மார்போடு இருக்கக் கூடாது அப்படின்னு வலியுறுத்தினார். சந்தை போன்ற பொது இடங்கள்-ல ரவிக்கை அணிந்து அதன் மேல் மெல்லிய சேலை துணியும் அணிந்து வந்தாங்க கிறிஸ்தவ நாடார் பெண்கள்.

ஆனால் அவர்களோட ஆடைய கிழிச்சு நாயர் சமூகத்தினர் அவமானப்படுத்த தொடங்கினாங்க. அகஸ்தீஸ்வரத்துக்கு பக்கத்துல தற்போதும் தாலி அறுத்தான் சந்தை அப்படிங்கிறது வழக்கத்தில் இருக்கு.

வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. அதனால ஊர் ஊரா கலவரம் பரவியது. மதங்கள கடந்து ஏழை பணக்காரர் என வேறுபாடு இன்றி ஒடுக்கப்பட்ட மக்கள் ஒரணிலத் திரண்டு சரியான பதிலடி கொடுத்தாங்க. சாதி வெறியர்களை பின்வாங்க செஞ்சாங்க.

மக்கள் ஒன்று திரண்டுட்டாங்க. இனிமேல் நம்முடைய சாதிவெறி செல்லாது அப்படின்னு சொல்லி உணர்ந்த திருநாள் அரசர் சாணார் சமூகப் பெண்கள் தோல் சீலை அணிவதை ஏற்றுக்கொண்டு அறிவிப்பு வெளியிட்டாங்க. ஒடுக்கப்பட்ட சாதிய சேர்ந்த பெண்களுடைய மானம் காத்த போராட்டம்தான் இந்த தோல் சீலை போராட்டம்.

Facebook
Instagram
YOUTUBE