சந்திரமுகி 2-ன் பிளஸ்-மைனஸ் என்ன?
சந்திரமுகி பாகம் 2 படம் பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு சந்தித்திருந்தாலும் ஒரு சில பாசிட்டிவ் பக்கமும் சந்திரமுகி இரண்டாம் பாகத்துக்கு உள்ளது. அவை என்னென்ன என்பதை முதலில் பார்த்துவிட்டு, பிற பத்திரிகைகள் என்னென்ன கூறியுள்ளன? என்பதை நெகட்டிவ் பக்கத்தில் பார்க்கலாம்.
பிளஸ் பாயிண்ட்
ராகவா லாரன்ஸின் வேட்டையன் கதாபாத்திரம் மிரட்டி இருக்கிறது என்றே சொல்லலாம்.
கங்கனாவின் நடனமும் அழகும் எமோஷனும் வொர்க் அவுட் ஆகி உள்ளது.
வீல் சேரில் அப்பாவி போல் வரும் லட்சுமிமேனன், சந்திரமுகியாக மாறும் காட்சி அருமை
ஒரு சில இடங்களில் லாரன்ஸ் உடன் வடிவேலு பேசும் காட்சிகள் தியேட்டரில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது
வடிவேலு படம் என்பதற்காகவே வந்த கூட்டமும் திரையரங்குக்கு உண்டு
நாயகியாக வரும் கங்கணாவத் அழகு தேவதையாக ரசிகர்களை கவர்கிறார்
கங்கனாவின் நடனம், பயம் என முக பாவனைகள் அனைத்திலும் அசத்தல்
லட்சுமி மேனனின் உடலுக்குள் சந்திரமுகியின் ஆத்மா புகுந்ததும் ஆக்ரோஷமான நடிப்பு
நெகட்டிவ் பாயிண்ட்ஸ்
திரைக்கதையால் படம் சுவாரஸ்யமாக நகரவில்லை
2 குழந்தைகளையே ராதிகா குடும்பம் வெறுத்து ஒதுக்கும் போது ஒரே சீனில் வசனம் பேசி ஹீரோ திருத்துவதை ஏற்கமுடியவில்லை
படத்தின் பல இடங்களில் அவுடேட்டட் காட்சிகள் நிறைந்துள்ளதாக விமர்சனங்கள் வந்துள்ளன
கதாபாத்திர வடிவமைப்பில் பெருமளவு மெனக்கெடவில்லை என்று சொல்லப்படுகிறது
பல சீன்கள் அடுத்து என்ன நடக்கும் என கெஸ் செய்து விடும் அளவிற்கு இருந்தது.
குறிப்பாக லட்சுமிமேனன் வீல்சேரில் அமர்ந்து வரும்போது, அவருக்கு அடுத்து என்ன ஆகப்போகிறது என்பது தெரிய வருகிறது.
திறமையான நடிகையான ராதிகாவும், அசத்தலான நகைச்சுவை நடிகரான வடிவேலும் சரியாக பயன்படுத்தப்படவில்லை.
அவர்களது திறமை மேம்போக்காக பயன்படுத்தப்பட்டிருப்பது போன்றும் போன்றுவதாக விமர்சனங்கள் வந்தன.
ராகவா லாரன்ஸ் தனக்கே உரிய பாணியில் நடிக்காது சந்திரமுகி முதல் பாகத்தின் ரஜினி டச் வேண்டும் என்பதற்காக மெனக்கெட்டு ரஜினி போன்று பல இடங்களில் பாவித்து நடித்திருப்பது அசலாக தெரியவில்லை
1990-2000-ம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட ஹீரோ இன்ட்ரோடக்சன் சாங், ஃபைட் என பழைய ஃபார்முலாக்கள் சந்திரமுகி 2-ல் பின்பற்றப்பட்டுள்ளது
முதல் பாகம் – 2ம் பாகம் என்ன வித்தியாசம்?
சந்திரமுகி 1 முதல் பாகத்தில் யாரும் எதிர்பாத்திடாத பல திருப்பங்கள் நிறைந்திருந்தன. ஆனால் 2ம் பாகத்தில் அப்படி இல்லை. முதல் பாகத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரம் உளவியல் சார்ந்த பிரச்சனையாக தான் காட்டப்பட்டது. ஆனால் 2-ம் பாகத்தில் கங்கனாவின் கதாபாத்திரத்தில் பேய், தெய்வ சக்தி, ஆத்மா உள்ளிட்ட பழைய புகைப்படங்கள் சிக்கிவிட்டதாக விமர்சனங்கள் வந்துள்ளன.
பிற பத்திரிக்கைகளின் விமர்சனங்கள்
புளிக்காத மாவில் ஊற்றிய தோசை – ஹிந்துஸ்தான் டைம்ஸ்
சிரிக்க வைக்க மெனக்கெட்டுள்ளனர் – டைம்ஸ் ஆப் இந்தியா
திரை முழுக்க நிறைந்த கதாபாத்திரங்கள், ஆனால் தெளிவில்லை – இந்து தமிழ் திசை
படத்தின் பலம் வடிவேலு நடிப்பு தான் -மாலைமலர்
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.