புற்றுநோய் முதல் எலும்பு இழப்பு வரை. நெடுநாள் விண் பயணத்தில் சுனிதா வில்லியம்சின் சவால்கள்
58 வயதான சுனிதா வில்லியம்ஸ் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் விண்வெளிக்கு சென்றார்.
இது அவருடைய முதல் பயணம் அல்ல. 3வது பயணம்.
58 வயதான போதும் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று அவர் துள்ளி நடனம் ஆடிய படி உள்நுழைந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிக வரவேற்பு பெற்றது.
எத்தனை வயதான போதும் அவர் மிகவும் உற்சாகமாக இந்த பயணத்தை மேற்கொண்டது பெரும்பாலானவருக்கும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியை கொடுத்தது. இந்த பயணத்தில் விநாயகர் சிலையும் தனக்கு பிடித்த மீன் குழம்பையும் எடுத்துச் சென்றிருந்தார் சுனிதா வில்லியம்ஸ்.
ஏற்கனவே ஸ்டார் லைனர் விண்கலமானது ஹீலியம் லீக் பிரச்சனையால் தாமதமாக பூமியில் இருந்து புறப்பட்டது.
இந்த நிலையில் விண்வெளிக்கு சென்று கடந்த மாதம் 14ஆம் தேதியே திரும்பி இருக்க வேண்டிய சுனிதா வில்லியம்ஸ் உடைய புவிக்கு திரும்பும் பயணம், மீண்டும் கோளாறு காரணமாக தள்ளிப் போகிறது.
இந்த நிலையில், சர்வதேச விண்வெளி மையத்தில் அதிக நாட்கள் இருந்தால் உடலில் என்னென்ன பிரச்சனைகள் நேரிடும் என்பதை ‘த காரிகை’ உங்களுக்கு பட்டியலிடுகிறது.
மைக்ரோ கிராவிட்டி தாக்கம்
புவி ஈர்ப்பு விசை குறைபாட்டால் விண்வெளியில் வீரர்கள் மிதந்து கொண்டிருப்பார்கள்.
அவர்களுக்கு ஃப்லூயிட் ரீ டிஸ்ட்ரிபியூஷன் என்ற உடலில் உள்ள நீர்ச்சத்து பல்வேறு இடங்களுக்கு வழி மாறி பரவி உறுப்பு செயல் இழப்பை ஏற்படுத்தக் கூடும்..
முகம் வீங்கி போதல், மூச்சு இறுக்கம், கால்களுக்கு போதிய நீர் விநியோகம் இல்லாது போவது, பூமிக்கு திரும்பும்போது இதய செயல்பாடு குறைந்து மயக்கம், அதீத உடல் சோர்வு ஆகியவை ஏற்படக்கூடும்.
இது, மைக்ரோ கிராவிட்டி தாக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள் ஆகும்.
எலும்பு பிரச்சனைகள்
அதே மைக்ரோ கிராவிட்டி இன் தாக்கத்தால், மசில் அட்ரோபி என்ற எலும்பு இழப்பு ஏற்படலாம். சதை மற்றும் எழும்பு இழப்பு காரணமாக அடர்த்தி குறைந்து ஆஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்பு சம்பந்தமான நோய் வரக்கூடும். என்னதான் விண்வெளியில் உடற்பயிற்சி செய்தாலும் கூட எலும்பு இழப்பு என்பதை முற்றிலுமாக விண்வெளி வீரர்களால் தவிர்க்க முடியாது.
சிறுநீரக பாதிப்பு
சிறுநீரில் அதிக கால்சியம் சேர்வதன் மூலம், சிறுநீரகத்தில் கற்கள் உருவாக வாய்ப்பு அதிகம். இது ஃப்லூய்ட் ரீ டிஸ்ட்ரிபியூஷன் காரணமாகவும் ஏற்படும்.
மெட்டபாலிக் பாதிப்பு
உணவு செரிமான பிரச்சனைகள் தேவையான ஊட்டச்சத்துக்களை உடல் கிரகித்து அதனை பயன்படுத்தும் முறை விண்வெளியில் மாறிவிடும். இதனால் ஹார்மோன் லெவல் மாறுபட்டு இன்சுலினும் தாறுமாறாக சுரந்து விடும். குடலில் உள்ள கட் பாக்டீரியாக்கள் சரிவர செயல்பட முடியாமல் போய் பூமிக்கு திரும்பிய பின்பும் நீண்ட கால உடல் பிரச்சினைகள் ஏற்படலாம்.
உணர்வு, பேலன்ஸ் மாறுபடும்
விண்வெளிக்கு சென்று திரும்பி தொடு உணர்வு போன்ற உணர்வுகளில் மாறுபாடு ஏற்படும்.. கை கண் ஆகியவற்றை ஒருங்கிணைந்து செயல்பட வைப்பதில் சிக்கல் நீடிக்கும். ஸ்பேஸ் மோஷன் சிக்னஸ் ஆல் பலருக்கு வாந்தியும் குமட்டலும் வரக்கூடும்.
புற்றுநோய்
விண்வெளி மையத்தில் ரேடியேஷன் அதிகம் இருக்கும். இதன் காரணமாக டிஎன்ஏ பாதிப்பு ஏற்பட்டு புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம். அதனால் தான் விண்வெளி மையத்தில் ரேடியேஷன் அளவை கட்டுப்படுத்த பயணத் திட்டங்களை குறைவாக வகுக்கின்றனர்.
விண்வெளிக்கு சென்று வருபவருக்கு தீவிர உடல் பாதிப்புகள் ஏற்படும் என்பதால் விண்வெளிக்கு செல்லும் முன்பாகவே அவர்களுக்கு தீவிர உடற்பயிற்சி உணவு கட்டுப்பாடு வழங்கப்படுகிறது.
விண்வெளியில் இருந்து திரும்பிய பின்பும் அவர்களுக்கு போதிய மருத்துவ உதவிகள் ஆலோசனைகள் தொடர் கண்காணிப்பு உள்ளிட்டவை வழங்கப்படுவதை நாசா உறுதி செய்கிறது.