வெங்காயத்தில் பல ஆரோக்கியமிக்க நன்மைகள் உள்ளன. இது மனிதனின் செரிமான அமைப்பை சீராக செயல்படுத்த உதவும். இதய ஆரோக்கியத்தையும் பராமரிக்கும். கண்களில் அரிப்பு, தொண்டை அரிப்பு, ஜலதோஷம் போன்ற பல ஒவ்வாமை பிரச்சனைகளுக்கும் வெங்காயம் ஒரு நல்ல தீர்வாக அமையும்.

வெங்காயம் இல்லாது சமையல் இல்லை

அனைத்து விதமான சமையல் செய்தாலும் வெங்காயம் பிரதானமான பொருளாகும். வெங்காயம் இல்லாமல் எதையுமே தாளிக்க முடியாது. குழம்பாகட்டும், காய்கறி ஆகட்டும், ரசமாகட்டும் அல்லது பிரியாணி என எது செய்தாலும் அதில் வெங்காயம் அவசியம் ஆகும்.

கருப்பு பூஞ்சை

வெங்காயத்தை உரிக்கும் போது சில வெங்காயங்களிலன் மேற்புறத்திலேயே கருப்பு நிறங்களில் அச்சு போன்று ஏதோ இருப்பதை பார்த்திருப்போம். அது பூஞ்சை. குறிப்பாக இப்போது வரும் வெங்காயங்களில் இது அதிகப்படியாக இருக்கும். மழைக்காலங்களிலேயே இது பெரும்பாலும் அதிகம் காணப்படும். பலருக்கும் இப்படி இருக்கும் வெங்காயத்தை வாங்கலாமா? வேண்டாமா? தெரியாமல் வாங்கிவிட்டால் அதை சாப்பிடலாமா சாப்பிடக்கூடாதா? என்றெல்லாம் பல குழப்பங்கள் இருக்கும். ஒருவேளை இந்த கருப்பு பூஞ்சை உடலுக்குள் பல்வேறு நோய்களை ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது? என்ற அச்சமும் இருக்கும்.

அப்படி சாப்பிட்டால் என்ன செய்யும்?

வெங்காயத் தோலை உரிக்கும் போது கருப்பு நிற அச்சு இருந்தால் அப்படிப்பட்ட வெங்காயத்தை சாப்பிட்டால் அதில் மியூகோர்மைகோசிஸ் என்ற நோய் வரலாம் என கூறப்பட்டது. பொதுவாக இது வெங்காயத்தில் காணப்படும் இந்த கருப்பு நிற ஆச்சு ஆஸ்பெர்கிலஸ் நைகர் என அழைக்கப்படும். இந்த வகை பூஞ்சை மண்ணிலேயே அதிகம் காணப்படும். அதுதான் மண்ணில் விளையும் வெங்காயத்திலும் பரவி விடும். இந்த கருப்பு அச்சு மியூகோர்மைகோசிஸ் அல்ல என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது ஒரு வித நச்சை வெளிப்படுத்தும் என்றும் சில ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

உயிரைப் பறிக்குமா?

கருப்பு நிற அச்சு உள்ள வெங்காயத்தை சாப்பிட்டால் அது உயிரையே பறித்து விடுமா என்று கேட்டால் அந்த அளவு ஆபத்து அல்ல ஆனாலும் ஒரு சில ஒவ்வாமையை உடலில் ஏற்படுத்தும் அலர்ஜி இருப்பவர்கள் இந்த கருப்பு அச்சு வெங்காயத்தை தவிர்ப்பது நல்லது அதேபோல ஆஸ்துமா இருப்பவர்களும் இந்த வெங்காயம் உள்ள இடத்திலிருந்து காற்றை நுகந்தால் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்

பயன்படுத்தலாமா? கூடாதா?

கருப்பு நிற அச்சு உள்ள வெங்காயத்தில் அதன் மேல் தோலையும் உட்புறத்தில் உள்ள ஒரு லேயர் வெங்காயத்தையும் உரித்து விட்டு நன்கு கழுவிவிட்டு பின்பு சமைக்கலாம். ஆனால் அத்தகைய வெங்காயத்தை சமைக்காது பச்சையாக சாப்பிடுவது நல்லதல்ல. ஒருவேளை ஃப்ரிட்ஜில் வைக்கிறவர்களாக இருந்தால் அந்த கருப்பு அச்சை நீக்கிவிட்டு ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அது மற்ற உணவுப் பொருட்களுடன் கலந்து விஷமாக மாறவும் வாய்ப்பு உண்டு.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE