பொதுவாக ஆடி மாதங்களில் கிரகப்பிரவேசம் செய்வது, புது வீட்டுக்கு பால் காய்ச்சுவது போன்ற விஷயங்களை செய்யக்கூடாது என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஆனால், ஆடி மாதம் வாஸ்து புருஷன் நித்திரை கொள்ள சென்று விடுவார் என்பதால் அந்த காலத்தில் வீடு குடி போவதில் எவ்வித சிக்கலும் இல்லை என ஒரு சில தரப்பு மக்கள் விளக்கம் அளிக்கின்றனர்.


ஏன் ஆடி மாதம் மாதம் குடிபோகக் கூடாது என்பதை முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள் என த காரிகை யின் சிறப்பு கட்டுரையில் தற்போது பார்க்கலாம்.

ஆடி மாதம்

ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிப்பாராம். அதாவது தகப்பன் என்பவரை குறிக்கும் சூரியனும் தாய் என்பவரை குறிக்கும் சந்திரனும் கடக ராசியில் சஞ்சரிப்பதே ஆடி மாதத்தில் சிறப்பு என கூறப்படுகிறது. இந்த காலத்தில் தன்னை விட்டு பிரிந்து சென்றதால் சிவபெருமானே அம்பிகையே தேடி சமாதானம் செய்ய சென்ராறம். இது பெண்களுக்கு ஏற்ற சிறப்பான மாதமாக கருதப்படுகிறது. பெண்களின் மகத்துவம் இந்த மாதத்தில் மேம்படும் என்றும் சொல்லப்படுகிறது.

ஆடியும் ஆன்மீகமும்

ஆடி மாதங்களில் பெரும்பாலும் அம்மன் வழிபாடு செய்வதாக மக்கள் வேண்டுதல் மேற்கொள்வார்கள். அம்மனுக்கு இளநீர் அபிஷேகம் கூழ் ஊற்றுவது போன்ற வேண்டுதல்களையும் ஆடி மாதத்தில் நிறைவேற்றுவது பன்னெடுங்காலம் தொட்டு தமிழர்களிடையே ஒரு பழக்க வழக்கமாக உள்ளது.

ஆடியும் இலக்கியமும்

ஆடி மாதத்தில் தான் ராவணனை சம்ஹாரம் செய்ததாக புராணங்களும் இதிகாசங்களும் கூறுகின்றன. கெட்டதை அழித்து நல்லதை புகுத்தும் மாதமாக இந்த ஆடி மாதம் பார்க்கப்படுகிறது.

ஆடியில் பால் காய்ச்சலாமா?

முன்பை போல இல்லாமல் தற்போது ஆடி மாதங்களில் குடியேறுவது சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. புதிய வேலைக்கு செல்வோர் பணியிட மாறுதல் பெற்றோர் ஆடி மாதங்களில் பால் காய்ச்சி குடியேறுகின்றனர். முன்பெல்லாம் ஆடி மாதங்களில் வீட்டு வாடகை வெறுமனே கழியும் என்பதாலும் யாரும் குடி வர மாட்டார்கள் என்பதாலும் அதற்கு முன்னதாக காலி செய்பவரிடம் அந்த மாதத்துக்கான வாடகையும் உரிமையாளர்கள் சேர்த்து வசூலித்து வந்தனர். ஆனால் மக்களிடையே இந்த ஆடி மாதம் பூனை கூட குடியேறாது என்ற வழக்கு மொழி மறைந்து வருவதால் இந்த மாதங்களிலும் மக்கள் தயக்கம் இன்றியே குடியேறுகின்றனர். ஒரு சிலர் வாஸ்து பூஜை செய்துவிட்டு குடியேறினால் ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கையுடன் அதற்கு தேவையான பூஜைகளை செய்துவிட்டு அந்த மாதத்தில் புது வீடுகளில் பால் காய்ச்சி குடியிருக்கின்றனர்.

ஆடி வாஸ்து நாள்

ஆடி மாதத்தில் குடியேறும் சிலர் வாஸ்து நாளில் பூஜை செய்து குடியிருக்கின்றனர். ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளில் நில ம் வாங்கி சொத்துக்களை பெருக்குகின்றனர்.

ஆடியில் என்னவெல்லாம் செய்யக்கூடாது?

ஆடி மாதம் அரைகுறையாக கட்டப்பட்ட வீட்டுக்கு கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது என்ற ஒரு பழக்கம் உள்ளது. வீட்டின் உரிமையாளர் குடிபோகும் மாதத்தில் பிறந்தால் அந்த மாதத்தில் புதிய வீட்டுக்கு குடி போவதோ திருமணமோ செய்ய கூடாது என்று பெரியவர்கள் கூற கேட்டது உண்டு.

இதுபோன்ற தகவல்களை அடிக்கடி தெரிந்துகொள்ள த காரிகையின் சமூக வலைதளப் பக்கங்களையும் பின் தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE