அதிக அளவு ஏப்பம் – புற்றுநோயா?
புற்றுநோய் என்பது உடலில் ஆரம்ப நிலையில் பரவும் போது பெரும்பாலும் அறிகுறிகளை வெளிப்படுத்தாது. ஆனால், ஏராளமான மக்கள் இத்தகைய நோய் ஒரு சில சிறிய அறிகுறிகளை வெளிப்படுத்தியும் அதனை கண்டு கொள்ள முடியாது உள்ளனர். இதன் விளைவு புற்றுநோய் அதிக அளவு பரவி அடுத்தடுத்த ஸ்டேஜ்களுக்கு முன்னேறிவிடும் நிலையாகும். எனவே, இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கட்டுப்படுத்த ஒரு சில அறிகுறிகளை அறிந்து கொள்வது அவசியமாகிறது.
ஏப்பம் எதனால் ஏற்படும்
பொதுவாக அதிக அளவில் வேகமாக சாப்பிடும் பழக்கம் உடையோருக்கு ஏப்பம் வருவது உண்டு. அதாவது குடிக்கும் போதோ சாப்பிடும் போதோ காற்று உடலுக்குள் போய்விடும். பின் அந்தக் காற்று வாயுவாக வாய் வழியே வெளியேறுவது ஏப்பம் எனப்படுகிறது. குளிர்பானங்கள் அருந்துவோர், தொடர்ந்து புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் நிறைய சூயிங்கம் சுவைக்கும் பழக்கம் இருந்தாலும் ஏப்பம் அடிக்கடி வரும் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
அதிகளவு ஏப்பம் வந்தால் புற்றுநோய் அறிகுறியா?
வெறுமனே ஏப்பம் விடுவது மட்டுமே புற்றுநோயின் அறிகுறி ஆகாது, அதனோடு வலியும் வீக்கமும் இருந்தால் அது ஒரு குறிப்பிட்ட இரைப்பை குடல் புற்று நோயாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மற்ற அறிகுறிகள் என்னென்ன?
வலியோடு வீக்கம் கலந்த ஏப்பம் மட்டுமின்றி பிற அறிகுறிகளும் புற்றுநோய் இருப்பதை உணர்த்தும். அதன்படி மற்ற அறிகுறிகள் என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்.
உடல் எடை குறைதல்
காரணங்கள் எதுவும் இன்றி உடல் எடை குறைதல் புற்றுநோயின் ஒரு அறிகுறி ஆகும். அதாவது சாப்பிடாமல் இருப்பது, அதிக மன அழுத்தத்தில் இல்லாமல் இருப்பது, டயட்டில் இல்லாமல் இருப்பதும் உள்ளிட்ட காரணங்கள் ஏதும் இன்றி திடீரென உடல் எடை குறைந்தால் அதுவும் புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
அடிவயிற்றில் வலி
பெரும்பாலும் புற்றுநோய் பாதித்தவர்களுக்கு அடிவயிற்றில் ஏதேனும் ஒரு வலி உணர கூடும் என்று சொல்லப்படுகிறது. இந்த வலியும் புற்றுநோய் உடலில் இருப்பதற்கான ஒரு அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது
வயிற்றுப்போக்கு
உடலில் நீர் சத்து குறைவதும், அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுவதும் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
நாள்பட்ட காய்ச்சல்
காய்ச்சல் அடிக்கடி வந்தாலும் அல்லது காய்ச்சல் வந்த பின் தொடர்ந்து அது குணமாகாமல் இருந்தாலும் அதுவும் புற்றுநோய் அறிகுறியாக காணப்படுகிறது.
மலச்சிக்கல்
அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுவது மட்டுமின்றி வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை மற்றும் மலம் கழிப்பதும் போன்ற மலச்சிக்கல் ஏற்படுவதும் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
ரத்தக்கசிவு
பல் ஈறுகளிலோ, வேறு எங்கேனுமோ ரத்தம் கசிவதாக காணப்பட்டால் அது கூட ஒரு புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம்.
நாள்பட்ட காய்ச்சல்
காய்ச்சல் அடிக்கடி வந்தாலும் அல்லது காய்ச்சல் வந்த பின் தொடர்ந்து அது குணமாகாமல் இருந்தாலும் அதுவும் புற்றுநோய் அறிகுறியாக காணப்படுகிறது.
எந்த வகை புற்று நோய்க்கு ஏப்பம் அறிகுறி?
வயிறு அல்லது இரைப்பை புற்றுநோய் இருப்பவர்களுக்கும் உணவுக் குழாய் புற்றுநோய் கணைய புற்றுநோய் இருப்பவர்களுக்கும் அடிக்கடி ஏப்பம் வருதல் ஒரு அறிகுறியாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
என்ன செய்ய வேண்டும்
மேற்சொன்ன அறிகுறிகள் அதிக அளவு இருந்தால் புற்றுநோய் இருக்குமோ என்ற சந்தேகம் தோன்றினால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். மேலும் ஆரோக்கியமான வாழ்வை வாழ முதலில் உடல் கொடுக்கும் எச்சரிக்கை அறிகுறிகளை கண்காணித்து மருத்துவரிடம் அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்வது ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.
இது போன்ற தகவல்களை அடிக்கடி தெரிந்துகொள்ள த காரிகையின் சமூக வலைதள பக்கங்களையும் பின் தொடருங்கள்.