பிராமின் ஆத்து சாம்பார் பொடி ரெசிபி

சாம்பார் பொடி என்பது பெரும்பாலும் நம் மக்கள் கடைகளில் தான் வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் அதை வீட்டில் செய்வது அவ்வளவு எளிது. என்னதான் கடைகளில் வாங்கினாலும் அதை கெமிக்கலோடு சேர்த்து உடலுக்குள் உட்கொள்வது என்பது சற்று ஆரோக்கியத்துக்கு ஆபத்தான விஷயம் தான்.

அதிலும், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் சாம்பார் பொடி உள்ளிட்ட மசாலா பொடிகளில் கெமிக்கல் அதிகம் இருக்கும். பல நாள் கெட்டுப் போகாது இருக்க ப்ரிசர்வேடிவ் என்ற கெமிக்கல், அசிடிட்டி, அந்த அசிடியை கண்ட்ரோல் செய்ய ஒரு கெமிக்கல் என ஏராளமான கெமிக்கல்கள் அதில் இருக்கும்.

இந்த உணவு சில சமயம் விஷமாகி போகவும் காரணம் இதுதான். இந்த சாம்பார் பொடி கடைகளில் வாங்கி சாப்பிடும் போது உடனடியாக உங்களது உயிரை பறிக்காது. ஆனால் மெல்ல மெல்லமாக கொல்லும் தன்மை உள்ள அதிக கெமிக்கல்கள் அதில் இடம்பெற்றிருக்கலாம். குடும்பத்தின் ஆரோக்கியத்தை கருதி 15 நிமிடங்கள் மட்டுமே செலவு செய்து எப்படி சாம்பார் பொடி அரைப்பது? என்பதை பார்க்கலாம்.

பிராமின் ஆத்து சமையல் பொதுவாக சாம்பார் வத்த குழம்பு செய்தால் தெருவே மணக்கும். அப்படி தெருவே மணக்கும் வகையில் ருசியான சாம்பார் பொடி, வீட்டில் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். முதலில் அதற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

3 கப் கொத்தமல்லி விதை

1 கப் பருப்பு

அரை கப் கடலைப்பருப்பு

கால் கப் வெந்தயம்

கால் கப் முழு உளுந்து (வெள்ளை)

கால் கப் கடுகு

கால் கப் மிளகாய் தூள்

கால் கப் மஞ்சள் தூள்

கால் கப் மிளகு

2 டேபிள் ஸ்பூன் சீரகம்

சிறிது பெருங்காய தூள்

எப்படி செய்வது?

முதலில் அடுப்பை பற்ற வைத்து வாணலியை அதில் வைத்து மிதமான சூட்டில் சூடேற்றவும். முதலில் துவரம் பருப்பை போட்டு வறுத்து எடுக்கவும்.

இதை அடுத்து கடலைப்பருப்பை தனியாக வறுத்து எடுத்து ஆற வைக்கவும். அவை பொன்னிறமாகும் வரை வருத்தால் போதும். சற்று விட்டால் கருகிவிடும். கவனம்.

வறுபட்ட மணம் வெளிவந்ததும் அதனை மற்றொரு தட்டில் வைக்கவும். தட்டு பிளாஸ்டிக் ஆக இல்லாமல் இருந்தால் நல்லது.

ஒவ்வொன்றையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்ததாக வெந்தயம் அதற்கு அடுத்து கொத்தமல்லி விதை அதற்கடுத்து கடுகு.

இதை அடுத்து குருமிளகு, இதை அஅடுத்து சீரகம் என ஒவ்வொன்றும் நிறம் மாறி அதன் வறுபட்ட வாசனை வரும் வரை வறுக்கவும்.

ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஆற வைத்துக் கொள்ளவும். தற்போது அனைத்தையும் எடுத்து மிக்ஸியிலோ கடையிலோ கொடுத்து நல்ல மிருதுவான பவுடராக அரைத்துக் கொள்ளவும்.

மிளகாய் தூள் மஞ்சள் தூள் உள்ளிட்டவற்றை போட்டு அதில் கலக்கவும் கொஞ்சம் பெருங்காயத் துளையும் போட்டுக் கலக்கலாம்.

தற்போது சாம்பார் பொடி ரெடி. இதனை காற்று போகாத ஒரு கண்டெய்னரில் வைத்து பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.

ஃப்ரிட்ஜில் வைக்காவிட்டால் செல்ஃபிலும் வைத்து பயன்படுத்தலாம்.

உங்களது தேவைக்கு ஏற்ப இந்த சாம்பார் பொடிக்கான பொருட்களின் அளவை அதிகரித்து அல்லது குறைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE