மழைக்காலத்தில் கை, கால் வலியா? இதை சாப்பிடுங்க.

உடலில் எலும்புகள் இல்லை என்றால் யாரும் நடக்க முடியாது. ஊர்ந்துதான் செல்ல முடியும். அப்படி மனிதன் தலைநிமிர்ந்து நடைபோட உதவும் எலும்புகளுக்கு எப்படி கால்சியம் அவசியமோ, அதோ போல்தான் அந்த கால்சியத்தை எலும்பு உறிஞ்ச விட்டமின் டி அவசியம்.

விட்டமின் டி-யானது கால்சியத்துடன் சேர்ந்து ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்திலிருந்து நம்மை பாதுகாக்கிறது.குளிர்காலத்தில் தரையில் கால் வைத்தாலே சில்லென்ற சூழலில், கை வலி, கால் வலி, உடல் வலி ஆகியவை வந்துவிடும். லேசான அடிக்குக் கூட தாங்காமல் பலவீனமாக இருக்கும் எலும்புகள் முறிந்துவிடும். எனவே, அதனைக் குறைக்க விட்டமின் டி உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.

நம் உடலுக்கு தேவையான விட்டமின் டி-ஐ சூரிய ஒளியில் இருந்தே பெறலாம். ஆனால், குளிர்காலத்தில் பருவம் மாநியிருக்கும் என்பதால் சூரிய ஒளியும் குறைவாகவே இருக்கும். அதனை ஈடு செய்ய, உலர் பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும்.

உலர் அத்திப்பழம்

உலர்ந்த அத்திப்பழத்தில் விட்டமின் டி, கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது.

உலர் அப்ரிகாட்

அப்ரிகாட் என்பவை பாதாமி பழங்கள் ஆகும். இவை, விட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் டயட்ரி ஃபைபர் உள்ளிட்ட கொண்டது. 100 கிராம் உலர் அப்ரிகாட்டில் 439 IU கால்சியம் உள்ளது.

பிளம்ஸ்

ட்ரைட் ப்ரூன்ஸ் என்பது ஒரு உலர வைக்கப்பட்ட பிளம்ஸ் ஆகும். இவை செரிமான ஆரோக்கியத்திற்கு உதவும். விட்டமின் கே, பொட்டாசியம், விட்டமின் டி-யும் உள்ளது. பல விட்டமின்ஸ்கள், மினரல்ஸ்கள் அடங்கி இருப்பதால் ஆரோக்கியமானதாக உள்ளன.

உலர் திராட்சை:

பச்சை நிற உலர் திராட்சையில் கால்சியம், வைட்டமின் டி, பாஸ்பரஸ் உள்ளது. இனிப்பாக ஏதும் சாப்பிடத் தோன்றினால், வீட்டில் உள்ள உலர் திராட்சை சாப்பிடுங்கள். இதில், இரும்புச்சத்தும் நார்ச்சத்தும் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.

பேரீச்சம்பழம்

பேரீச்சம்பழத்தில் விட்டமின் சி மற்றும் வைட்டமின் டி உள்ளதால் பளபளப்பாகவும் சருமம் மென்மையாக இருக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE