தெற்க பாத்துக் கத்துக்கோங்க! வடக்குக்கு முத்தழகின் கெத்தான பதில்
நம்ம பருத்திவீரன் முத்தழகு தன்னோட லாங் டைம் கிரஷ் ஆன ஷாருக்கான் ஓட சேர்ந்து 2 படங்கள் நடிச்சிட்டாங்க. கரெக்டா கடந்த பத்து வருஷத்துக்கு முன்னாடி ஷாருக்கான் கூட சேர்ந்து முதன் முதலா சென்னை எக்ஸ்பிரஸ் படத்துல ஒரு பாட்டுக்கு டான்ஸ் மட்டும் ஆடியிருந்தார். இதை அடுத்து மறுபடியும் 10 வருஷம் கழிச்சு ஜவான் படத்துல முக்கியமான கதாபாத்திரத்தில கூட பிரியாமணி நடிச்சிருக்காங்க.
படம் வெளியாகி 20 நாட்களுக்கு மேல ஆகுது. உலகளவுல ரூ.1,000 கோடி வசூலை தாண்டி வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது. இந்திய அளவில் ரூ.600 கோடி என்ற சாதனையை கடந்திருக்கு. இந்த நிலையில் எக்கனாமிக் டைம்ஸ் அப்படிங்கற ஒரு பத்திரிக்கைக்கு நடிகை பிரியாமணி பேட்டி கொடுத்திருக்காங்க. அதுல தென்னிந்திய படங்களை உயர்த்தி பேசி இருக்காங்க. இப்போ ப்ரியாமணி படத்த பத்தியும் திரை அரசியல் பத்தியும் என்ன சொல்றாங்க அப்படிங்கறத பார்க்கலாம்.
அரசியல்ல எல்லாருமே ஈடுபடனும் அப்படிங்கிற அவசியம் இல்ல. ஆனால் அது தொடர்பான கருத்துக்களை அல்லது ரியாலிட்டியை மக்கள் கிட்ட திரைப்படம் மூலமா கதை சொல்லுங்கள் என ப்ரியாமணி கருத்து சொல்லி இருக்காங்க..
“தென்னிந்திய படங்கள் எப்பவுமே, மக்களுடைய பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும். மக்களோட பிரச்சினைகளையும் அவர்கள் அன்றாடமும் அல்லது வாழ்க்கையில் எதிர் கொள்ளக்கூடிய கஷ்டங்களையும் பற்றி படத்தை கதையாக கூறுவதால் மக்களுக்கு அது தங்களுடன் ஒன்றிணைந்த படமாக இருக்கும்.”
அட்லி இயக்கிய “ஜவான் படத்தில் விவசாயிகள் தற்கொலை, மருத்துவர்களுடைய முக்கியத்துவம், ஆக்ஸிஜன் கொடுமை பற்றி பேசப்பட்டு இருக்குது. இது எல்லாமே ரியல் லைப்ல நடந்த பிரச்சனைகளை பத்தி பேசி இருக்கு. அதனால தான் இந்த படம் ஆடியன்ஸ் கூட நல்லா கனெக்ட் ஆயிருக்கு. இந்த பிரச்சனைகளை பத்தின கதையாக இருக்கு அப்படின்னு சொல்லி மக்கள் விரும்பி பார்த்து இருக்காங்க. இது மாதிரி மக்கள் அடிக்கடி எதிர்கொள்கிற பிரச்சினைகளை பற்றி திரைப்படங்கள் தங்களுடைய கதை சொல்லல் மூலமாக மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்க்கணும். இது மாதிரியான படங்களை நிறைய பேர் பேசுவதும், இயக்குவதும் அரிதா இருக்கு.
வடக்கிலும் மக்கள் பல பிரச்சினைகளை சந்தித்து இருப்பார்கள். ஆனால் அதைப் பற்றி மனம் திறந்து பேசி இருக்க மாட்டார்கள். ஆனால் ஜவான் திரைப்படம் மக்களின் பிரச்சினைகளை எடுத்துச் சொல்லியதன் மூலம் வடக்கத்திய படங்களிலும் மக்கள் பிரச்சனை பற்றி பேசப்படும் என்று தான் நம்பிக்கை கொள்வதாக பிரியாமணி கூறியுள்ளார்.
பெங்களூரில் பிறந்த பிரியாமணி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 2007 இல் பிரியாமணி முத்தழகாக நடித்த பருத்திவீரன் படமும் அவரது நடிப்பும் தேசிய விருதை பெற்றுத் தந்தது. இராவணன் படத்திலும், சிறப்பாக நடித்து இருப்பார் நடிகை பிரியாமணி.
பிரியா வாசுதேவ் மணி ஐயர் என்ற முழு பெயர் கொண்ட இவர் 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்று ஈவன்ட் மேனேஜரை திருமணம் செய்து கொண்டார். இதை எடுத்தும் பல திரைப்படங்களில் அவர் தொடர்ந்து நடித்தும் வருகிறார்.
முத்தழகு மிக தைரியமாக, வடக்கத்திய படங்களை பற்றிய ஒரு நல்ல ஒரு முன்னுதாரணமான விமர்சனத்தை வெளிப்படையாகக் கூறியுள்ளதை பார்த்து ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.