பரபரப்பான வாழ்க்கை முறையில் நம் தலைக்கு மேலே வானில் இருக்கும் நிலவையும், அதன் அழகையும் ரசிக்கக் கூட நேரமின்றி அலைந்து திரிகிறோம். அப்படியிருந்தும் முழுநிலவைக் கண்டு பௌர்ணமியை ரசிப்பவர்களும், மூன்றாம் பிறையைப் பார்த்து தங்களது விருப்பத்தைக் கூறி வணங்குவோரும் இருக்கத்தான் செய்கின்றனர்.

இந்தநிலையில் நிலவைப் பற்றிய ஒரு அரிய வகை நிகழ்வான சூப்பர் Blue Moon Day நிலவின் காதலர்களால் வெகு ஆவலோடு எதிர்பார்கப்படுகிறது. நீல நிலா இன்றும் நாளையும் அதாவது ஆகஸ்ட் 30 மற்றும் ஆகஸ்ட் 31 ஆகிய தேதிகளில் ஆஸ்திரேலிய வானில் தோன்றவுள்ளது.

பொதுவாக இவை 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும். ஆனால் இந்த முறை அரிதாக நிகழ்கிறது. இன்று இரவு வானில் ஒரு அரிய வகை சூப்பர் ப்ளு மூன் நிகழ்வு நடைபெற உள்ளது. இது ஒரு மிக அரிதான நிகழ்வாகும். கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புளூ மூன் தோன்றியது. இதையடுத்து இன்று நிகழ்கிறது.

புளூ மூன் எப்படி வரையறுக்கப்படும்?

ஒரு மாதத்தில் 2-வது முழு நிலவு வெளிப்படும் போது, ​​அது “ப்ளு மூன்” என்று அழைக்கப்படும். இதைத்தான் “once in a blue moon” என்று ஆங்கிலத்தில் அரிதான நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி குறிப்பிடுகிறோம். முதல் நிகழ்வு ஆகஸ்ட் 1-ம் தேதி நடந்ததும் குறிப்பிடத்தக்கது.

மிகவும் பிரகாசமான நிலா

பூமியின் நீள்வட்ட சுற்றுப்பாதைக்கு அருகாமையில் நிலா இருக்கும். இதனால், நிலா வழக்கத்தை விட பெரியதாகவும், பிரகாசமானதாகவும் வெறும் கண்களுக்கே தென்படும். அதன் “நீல” தன்மையை அதன் ஈர்க்கக்கூடிய அளவுடன் இணைத்து இது வர்ணிக்கப்படும். எனவே, இது “சூப்பர் ப்ளூ மூன்” என்றும் பொருத்தமாக அழைக்கப்படுகிறது. இது வழக்கமான பிரகாசத்தை விட 16% அதிக ஒளியை வெளியிடும்.

நிலா நீல நிறத்துக்கு மாறுமா?

சுவாரஸ்யமாக, “ப்ளூ மூன்” என்று சொல்வதால் நிலா ப்ளூ கலராக அதாவது முற்றிலும் நீல நிறமாக மாறும் என்று அர்த்தமில்லை. மாறாக நிகழ்வின் அரிதான தன்மையை இது குறிக்கிறது. இந்த அரிய நிகழ்வு அடுத்த 10 ஆண்டுகளுக்கு தோன்றாது என்பதும் வருத்தத்துக்குரிய விஷயம்.

ப்ளு மூன்

“ப்ளு மூன்” என்பது ஒரு மாதத்திற்குள் வரும் 2-வது முழு நிலவைக் குறிக்கும். இதுவும் ஒரு அரிய நிகழ்வாகும். ஏனெனில் முழு நிலவுகள் பொதுவாக ஒரு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே அதுவும் பௌர்ணமி நாட்களில் நிகழும்.

சூப்பர் ப்ளூ மூன்

வடக்கு ஹெமிஸ்பியர் பகுதியின் கோடை இறுதி நாளாக ஆகஸ்ட் 30-ம் தேதி வரும். அந்த நாளில் வரும் இந்த நிலா “சூப்பர் ப்ளூ மூன்” என்றும் குறிப்பிடப்படுகிறது.

இந்தியாவில் எப்போது பார்க்கலாம்?

சூப்பர் ப்ளூ மூன் ஆகஸ்ட் 30-ம் தேதி இரவு 8.37 மணிக்கு EDT தோன்றக் கூடும். இந்தியாவில் ஆகஸ்ட் 31-ம் தேதி காலை 5.57 சூப்பர் ப்ளூ மூன் தோன்றும். அப்போது நிலா அதிக பிரகாசத்துடன் தெரியும்.

லண்டன் தரிசனம்

சந்திரோதயம், நீல நிலவின் அழகைக் கண்டு வியக்க ஏற்ற தருணத்தை இது
வழங்குகிறது. ஆகஸ்ட் 31 அன்று சந்திர உதயம் சற்று தாமதமாக நிகழக்கூடும். இதனால், ஐரோப்பியாவில் வாழும் மக்கள் சற்று மகிழ்ச்சியில் உள்ளனர். லண்டனில், சந்திரன் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு 15 நிமிடங்களுக்குப் பிறகு இரவு 8:08 மணிக்கு புளூ மூன் தோன்றும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE