பித்தம் கெட்டால் ரத்தமும் கெடும். என்ன அறிகுறி?
உடலில் பித்தம் ஏறிவிட்டது என்பதை சில சமயம் கையில் வைக்கும் மருதாணி சிவக்காமல் கருப்பதை வைத்தே சொல்லிவிடுவார்கள். உடல்நிலையின் இண்டிகேட்டராக இருக்கும் பித்தம் டீ, காஃபி அதிகம் குடிப்பதாலும் வரும் என பெரியவர்கள் சொல்ல கேட்பதுண்டு.
பித்தம் கெட்டால் ரத்தமும் கெடும் என சொல்வதால் உடலில் பித்தம் தலைக்கேறினால் என்னென்ன செய்யும்? என்ன அறிகுறி என்பதை தற்போது பார்க்கலாம்.
பசி எடுக்காது
வாய் கசக்கும்
செரிமானம் இருக்காது
கண் எரிச்சல் ஏற்டும்
தலை சுற்றல் இருக்கும்
பாத எரிச்சலும் ஏற்படும்
மேற்சொன்ன அறிகுறிகள் வேறு சில உடல் நோய்களின் அறிகுறிகளாக இருந்தாலும் கூட, இவையே பித்தத்தின் அறிகுறியாகவும் உள்ளது.
அப்படி இருந்தால் பின்வரும் உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது உடலில் பித்தம் குறைந்து உடல் உறுப்புக்களின் செயல்பாடும் சீராக இருக்கும்.
பித்தம் குறைக்க பனங்கிழங்கு சாப்பிட வேண்டும்.
இஞ்சியும் எலுமிச்சையும் பெரும்பாலும் பித்தம் குறைக்க உதவும்.
தேனில் ஊறவைத்த இஞ்சியை சாப்பிட்டால் பித்தம் குறையும்.
பித்தத்தில் மயக்கம் ஏற்பட்டால் இஞ்சி, வெங்காயச் சாறு, தேன் கலந்து கொடுத்தால் மயக்கம் தெளியலாம்.
எலுமிச்சை பழச் சாறு, எலுமிச்சை சாதம் என எலுமிச்சை உணவுகளை அதிகம் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து குடிக்க வேண்டும்.
50 கிராம் தோல் சீவிய இஞ்சி, சீரகம் 50 கிராம், காட்டு சீரகம் 50 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம், இந்துப்பு 50 கிராம், எலுமிச்சை சாறில் ஊற வைத்துக் கொள்ளவும், அதனை வெயிலில் உலர்த்தி பொடியாக்கி, வெதுவெதுப்பான நீரில் உலந்து காலை மாலை குடிக்கலாம்.
அகத்திக் கீரை, கமலா ஆரஞ்ச், மாம்பழச்சாறு, விளாம்பழம் ஆகியவையும் பித்தத்தைக் குறைக்கு இயற்கை உணவுகளாகும்.
மேற்சொன்ன தகவல்கள் ஒரு உடனடி வீட்டு வைத்தியம் தானே தவிர, எந்த அறிகுறிகளாக இருந்தாலும் அதை உதாசிணப்படுத்தாது மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.