போற போக்க பாத்தா மாயா தான் ஜெயிப்பாங்க போல?
97ம் நாள் பிக் பாஸ் வீட்டில் என்ன நடந்தது என்பதை தற்போது பார்க்கலாம். விசாரணை நாளில் தனது பேச்சை தொடங்கிய நடிகர் கமல், கொண்டாட்டத்தோடு ஆரம்பிக்கும் பயணம் அதே கொண்டாட்டத்தோடு முடிந்தால் அது நல்ல பயணம் என்றார். விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் பற்றி மக்கள் கூட்டம் கூட்டமாய் பங்கேற்றது பற்றியும் அவர் கூறியிருந்தார்.
“என்னதான் வீட்டில் இருந்து யார் வெளியே செல்வார்கள் என்பதை மக்கள் முடிவு செய்தாலும், ஒரே ஒருமுறை அதாவது பெட்டியை எடுக்கும் சாய்ஸ் மட்டும் போட்டியாளர்களுக்கு உரித்தாகி விடுகிறது” என்றார்.
அகம் டிவி வழியே அகத்துக்குள் சென்று “ஏன் பெட்டியை எடுக்கவில்லை?” என்று ஒவ்வொருவராக கேள்வி கேட்டு வந்தார்.
அம்மா சொன்னாங்க தங்கச்சி சொன்னாங்க என மணியும் அர்ச்சனாவும் விலகிக் கொள்ள, “ஃபைனலிஸ்ட் ஆகிவிட்டோம் கடைசிக்கு கையை தூக்கிப் பிடிக்கும் மேடையில் ஆவது நிற்போம் என்பதற்காக பெட்டியை எடுக்கவில்லை” என்று விஷ்ணு கூறினார்.
“மக்களாக பார்த்து தான் என்னை உள்ளே அனுப்பினார்கள். நான் வெளியே செல்ல எனக்கு உரிமை இல்லை ” என்று ஓட்டு போடும் மக்களுக்கு ஐஸ் வைத்தார் விஜய்.
”என்னால் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்று பார்க்க வேண்டும். இந்த அனுபவம் புதிது. பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம்” என்றார் விசித்ரா.
இதை அடுத்து 16 லட்சம் ரூபாய் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறிய பூர்ணிமா மேடையில் வந்தார்.
“எப்படி உணர்கிறீர்கள்?/” என கமல் கேட்டபோது “சார் வெளியே என்னை கொண்டாடறாங்க. ஃபீனிக்ஸ் பூர்ணிமா என்றெல்லாம் கூப்பிடுகிறார்கள்” என்று பரவசத்தில் பொங்கினார் பூர்ணிமா.
“நான் தான் இங்கு கிடைக்கும் கைத்தட்டலை வைத்து தப்பா நினைச்சுட்டேன்” என பூர்ணிமா கூற “நான் தான் முதலிலேயே சொன்னேன் அல்லவா?” என்று சிரித்தார் கமல்.
பின்பு அகம் டிவி வழியே பூர்ணிமா தோன்றியதும் மாயாவிற்கு ஒரே பரவசம். இருவரும் தெய்வத்திருமகள் விக்ரம்-நிலா போன்று செய்கையிலேயே தங்களது அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர்.
விசித்ரா பூர்ணிமாவை பார்த்து கண் கலங்கினார். அர்ச்சனாவுக்கும் ஒரே பரவசம். பிக் பாஸ் ஜர்னி வீடியோ பல எமோஷனல் கடந்த கலவையாக அவருக்கு காண்பிக்கப்பட்டது. பின்பு ஒவ்வொரு போட்டியாளரையும் உற்சாகப்படுத்தி பேசிய பூர்ணிமா “சூப்பர் செம” என சிக்னல் காட்டி விஷ்ணுவிடம் பேசிய போது கண்கலங்கி பின்னர் சுதாரித்து “இட்ஸ் ஓகே ஆல் த பெஸ்ட்” என குறிப்பிட்டார்.
“சீக்கிரம் வா” என பூர்ணிமா மாயாவை அழைக்க “இப்பவே வரணுமா? ஜெயிச்சுட்டு வரணுமா?” என நடிகர் கமல் கேட்டார்.
”சும்மா வந்தா தொரத்தி துரத்தி அடிப்பேன்” என ஜாலியாக கலாய்த்தார் பூர்ணிமா.
பூர்ணிமா விடை பெற்றதும் அவர் காட்டிய சிக்னலை சுட்டிக்காட்டிய மாயா “தலைவி வேற ரகம்” என சொன்னது விஷ்ணுவிற்கு ஏதோ போலாகியது.
சில நாட்களாக பைனலிஸ்டாக செலக்ட் ஆன குஷியில் இருந்த விஷ்ணு சற்றே மனம் வாடி போனார்.
மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தவர் யார்? செய்யாதவர் யார்? என்று நடிகர் கமல் போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.
“நீங்க தானே சிறந்த அனலிஸ்ட்? நீங்களே ஆரம்பியுங்க” என விஷ்ணுவை கமல் கோர்த்துவிட்டபோது, வழிந்தபடியே பேசத் தொடங்கிய விஷ்ணு பூர்த்தி செய்தவராக அர்ச்சனாவை சுட்டிக்காட்டினார்.
பூர்த்தி செய்யாதவராக விஜய் பெயரை சொன்னார். “இதற்கு முன்பு வந்த வேகம் ரிஎன்ட்ரியில் இல்லை, சேலையில் முள் படாத மாதிரி ஜாக்கிரதையாக நடந்து கொண்டார். சேப் கேம் ஆடுகிறார்” என்று விஜய் பற்றி அப்சர்வ் பண்ணிய விஷயங்களை கூறினார் விஷ்ணு.
அடுத்ததாக பேசிய அர்ச்சனா பூர்த்தி செய்தவராக மாயாவின் பெயரை சொல்ல கைதட்டல் எகிறியது. அங்கு அமர்ந்திருந்த பார்வையாளரான மக்கள் கைதட்டினார்களா? அல்லது யாரேனும் (யாராக இருக்கும் என நீங்களே யூகியுங்கள் பார்ப்போம்) ஆள் வைத்து கைதட்ட வைத்தார்களா?’ என்று சற்று குழப்பம் ஏற்பட்டது.
கோபம், புறணி, ஸ்ட்ராட்டஜி என்பதிலேயே விஷ்ணு தேங்கி விட்டார் என்றும் ஆனால் ஆட்டத்தை சுவாரசியமாக எவ்வாறு மாற்றலாம் என மாயா செய்த அளவுக்கு சிரத்தையை விஷ்ணு செய்யவில்லை என்றும் கருத்துக்கள் முன் வந்தன.
அடுத்து பேசிய விஜய், விசித்ரா, தினேஷ் ஆகியோரும் மாயாவிற்கு பிளஸ் பாயிண்ட் விஷ்ணுவிற்கு மைனஸ் பாயிண்டும் கொடுத்தனர்.
போகிற போக்கை பார்த்தால் வீட்டுக்குள்ளேயும் வெளியேயும் அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் என்று கூறி வருவது, கடைசி வாரத்தில் அதாவது இன்னும் உள்ள 3 நாளில் மாறிவிடுமோ என்ற எண்ணம் தான் தோன்றுகிறது.
மேலும் மாயாவை ஜெயிக்க வைக்க விசித்ராவை கமல் பலி கொடுத்ததாக வெளிவரும் சில செய்திகளும் உண்மையாகி விடுமோ என்றும் சொல்லப்படுகிறது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன என்பதை கமென்டில் பதிவிடுங்கள்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.