தமிழில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்று முதல் தொடங்கியுள்ளது. அதில் நடிகர் கமல்ஹாசன் தனியாக ஒரு வீட்டில் வசிப்பது போன்று பிரீமியர் தொடங்கியுள்ளது.

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என பாடல் ஒலிக்க, அனுபவம், புதிய முயற்சி பற்றியெல்லாம் அறிவுரை கூறிவிட்டு காஃபி போட்டு குடித்துவிட்டு, குளித்து, டிப் டாப்பாக கோட் ஷூட் போட்ட கமல் பல கார்களின் புடைசூழ விக்ரம் பாடலுடன் என்ட்ரி ஆகினார். பின் பிக்பாஸ் மேடையின் ஒளிரும் விளக்குகளில் வழக்கமான வணக்கத்துடன் விசில் பறக்க இன்ட்ரோ ஆரம்பித்தது.

பிக் பாஸ் விளையாட்டு இந்த முறை மாறியிருக்கும் என கமல் எடுத்த எடுப்பிலேயே சஸ்பென்ஸ் வைத்துள்ளார். பிரம்மாண்ட மாளிகையில் வட்ட வடிவில் படுக்கைகள் போடப்பட்டுள்ளன. பின் கமல்ஹாசனே டபுள் ஆக்டிங்கில் வந்து கேள்விகளையும், 2 வீடு பற்றிய குழப்பங்களையும் மேடையில் இருக்கும் கமலிடம் கூறி விளக்கம் கேட்கிறார்.

ஒரே வாசல், ஒரே கிட்சன். ஆனா வீடு மட்டும் ரெண்டு.

கூல் சுரேஷ்

நடிகர் சிம்பு, சந்தானத்தின் நடிகரும் சினிமாவில் நடித்து வருபவருமான கூல் சுரேஷ் பிக்பாஸ் 7-ன் முதல் போட்டியாளர்க கமலால் அறிமுகப்படுத்தப்பட்டார். சிம்புவால்தான் கூல் சுரேஷ் இப்போட்டியில் கலந்துகொண்டதாகக் கூறினார்.

பூர்ணிமா ரவி

அராத்தி என்ற யூடியூப் சீரீஸில் நடித்திருந்தவர் பூர்ணிமா ரவி. ஐடியில் 9-5 பணியில் இருந்த அவர், யூடியூப் சீரீஸ் மூலம் பிரபலமானார். தர லோக்கல் கதாப்பாத்திரங்களிலும் மாடர்ன் பொண்ணாகவும் அவர் நடித்து வருகிறார். தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ரவீனா தாஹா

மௌனராகம் என்ற விஜய் டிவியில் ஒளிபரப்பான நாடகத்தில் ஹீரோயின் ஆக நடித்திருப்பவர் ரவீனா. இவருக்கு 19 வயதுதான் ஆகிறது. 7-ம் வகுப்பு படிக்கும் போதிருந்தே இறந்துபோன தனது தந்தையின் பொறுப்பில் இருந்து வீட்டை கவனித்து வருகிறார்.

பிரதீப் ஆன்டனி

அருவி, டாடா, வால் ஆகிய படங்களில் நடித்தவர் பிரதீப் ஆன்டனி. லொயோலாவில் விஸ்காம் படித்து, விளம்பரம், படங்களில் பணியாற்றியவர். அப்பா, அம்மா இறந்துவிட சித்தியின் வளர்ப்பில் வாழ்ந்ததாகக் கூறினார்.

நிக்சன்

நிக்சன் ஒத்த தாமரை ரேப் பாட்டு எழுதி நடித்தவர் இவர். சினிமாவில் கிடைத்த வேலையெல்லாம் செய்வார் என்ற நிலையில் இருந்து கடின உழைப்பால் அடையாளம் காணப்பட்டு பிக்பாஸ்-க்குள் அடி எடுத்து வைத்துள்ளார்.

வினோஷா

பாரதி கண்ணம்மாவில் கண்ணம்மா கதாப்பாத்திரத்தில் நடித்தவர் வினோஷா. இவர் பிக்பாஸ் சீசன் 7-ல் அடியெடுத்து வைக்கிறார். தான் கண்ணம்மாவை விட வினோஷாவாக உலகம் தன்னை அறிய பிக்பாஸ் ஒரு வாய்ப்பாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

அக்ஷயா

பாலக்காட்டைச் சேர்ந்த அக்ஷயா, டிஜிட்டல் கிரியேட்டராக ஷார்ட் வீடியோக்களை பதிவேற்றி வந்தார். லவ் டுடே உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

ஜோவிகா விஜயகுமார்

வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார் பிக்பாஸ் சீசன் 7-ல் பங்கேற்பார் என ஏற்கெனவே வியூகங்கள் வெளியாகின. அதேபோல் அவர் இதில் நுழைந்துள்ளார். ஏற்கெனவே வனிதா விஜயகுமாரும் பிக்பாஸில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஷு

ஊட்டியைச் சேர்ந்த நடனக் கலைஞர் ஐஷூ. ஏற்கெனவே ரியாலிட்டி ஷோக்களில் நடனம் ஆடியிருக்கிறார் ஐஷூ. வீட்டை எதிர்த்து திரை வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஷ்ணு

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஃபீஸ் நாடகத்தில் விஷ்ணு ஆகவே நடித்தவர் விஷ்ணு. சின்னத்திரையின் அமுல் பேபி என அழைக்கப்படும் இவர் பிக்பாஸ் சீசன் 7-ல் பங்கேற்றுள்ளார்.

அனன்யா ராவ்

அபூர்வா-அனன்யா இரட்டைச் சகோதரிகள். அவர்களில் அனன்யா ராவ் பிக்பாஸ் சீசன் 7 தமிழில் வந்துள்ளார். ஃபேஷன் அன்ட் மாடலிங்கில் உள்ள அவர் பரதநாட்டியக் கலைஞர் கூட.

யுகேந்திரன்

நடிகர் யுகேந்திரன் இதில் பங்கேற்றுள்ளார். ஏற்கெனவே பல படங்களில் நடித்த இவர் திருப்பாச்சி படத்தில் கூட விஜயின் நண்பராகவும், அவருக்கு ரவுடிகளைப் பிடிக்க உதவும் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் நடித்தவர். இவர் மலேசியா வாசுதேவனின் மகன் ஆவார்.

விசித்ரா

90ஸ் படங்களில் நடித்தவர் விசித்ரா. முத்து படத்தில் செந்திலும் வடிவேலுவும் போட்டி போட்டுக் காதலிக்கும் பெண்ணாகவும் நடித்தவர் விசித்ரா. இவருக்கு பிக்பாஸ் சீசன் 7-ல் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பவா செல்லதுரை

எழுத்தாளரும் கதை சொல்லியுமான இவர் திரையுலகில் இருப்போருக்கு பிரபலமானவர். இவர் கதை சொல்லும் விதம் அனைவரையும் ஈர்க்கும். கண்முன் காட்சிகளை நிறுத்தும். வந்திருக்கும் போட்டியாளர்களிலேயே பவா செல்லதுரை ஐயாதான் மூத்தவர் ஆவார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE