“மயில் போல பொண்ணு ஒன்னு” மறைந்தார் பவதாரணி
இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி உயிரிழந்தார். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் கொழும்பு லங்கா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொழும்புக்கு இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்த இளைராஜாவும் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். இதையடுத்து, அவரும் மருத்துவமனைக்கு சென்று மகளைப் பார்த்து மனமுடைந்து போனார்.
பாடகி
1995 முதல் பாடகியாக இருந்தார் பவதாரணி. இளையராஜாவின் இசையில் அமைந்த பாரதி படத்தின் மயில்போல பொண்ணு ஒன்னு பாடலைப் பாடியவர் இவர்தான். மயில் பாடலை குயில் போல் பாடிய இவருக்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்து அங்கீகாரம் அளித்தது மத்திய அரசு.
இவர் இராமன் அப்துல்லா படத்தில் என் வீட்டு சன்னலில் என்ற பாடலை திரையுலகுக்காக பாடினார்.
ரொமான்டிக்கான 90-ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் பாடலாக ஒலித்துக் கொண்டிருந்த தாமிரபரணி படத்தின் தாலியே தேவையில்ல, நீ தான் என் பொஞ்சாதி’ பாடலைப் பாடி ஒரு ஹிட் கொடுத்தார்.
விஜயின் புதிய கீதை படத்தில் மெர்க்குரிப் பூவே பாடலையும் பவதாரணி தான் பாடினார்.
பிரபுதேவா நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளியான ராசய்யா படத்தில் வரும் மஸ்தானா மஸ்தானா பாடல் மூலம் அவர் பாடகியாக அறிமுகமானார்.
எம்.குமரன் படத்தில் வரும் அய்யோ அய்யோ பாடல்களைப் பாடியுள்ளார் பவதாரிணி.
காதலுக்கு மரியாதை படத்தில் வரும் என்னைத் தாலாட்ட வருவாளா, ஆயுத எழுத்து படத்தின் யாக்கைத் திரி, காக்க காக்க படத்தின் என்னைக் கொஞ்சம் மாற்றி போன்ற தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க பாடல்களை அவர் பாடியுள்ளார்.
தமிழில் அமிர்தம், இலக்கணம், மாயநதி ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
சகோதரர்கள்
இவருக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என்ற இரு சகோதரர்கள் உள்ளனர். இருவரும் வெற்றிகரமாக இசைத்துறையில் வலம் வருகின்றனர்.
இரங்கல்
முதல்வர் ஸ்டாலின், திரை மற்றும் இசையுலகினர் பவதாரணி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.