மகளிர் தினத்தன்று பெண்கள் தங்களுக்குள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வார்கள். சில ஆண்களும் தங்களது வட்டத்தில் உள்ள பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்து செய்தியை பரிமாறுவார்கள்.

ஆனால், சமூகத்திலும் பொருளாதாரத்திலும் குடும்பத்திலும் அவர்கள் படும் கஷ்டம் ஏதேனும் உங்களுக்கு தெரிந்திருந்தால், ஒரு அரசாங்கமாக தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் எப்படி அவர்களுக்கு உதவுகிறது என்பதை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அரசின் நலத்திட்ட உதவிகளை அவர்கள் தெரிந்து கொண்டால் ஓரிரு நாட்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பிப்பதன் மூலம் அவர்கள் ஏதேனும் ஒரு வகையில் பயனடைய முடியும்.

எனவே, இத்தகைய பயனுள்ள செய்தியை மகளிர் தின வாழ்த்தாக பகிர்ந்து மன நிறைவு பெறுங்கள்.

பெண்கள் தொழில் தொடங்க பயிற்சி தரலாம்.

“எனக்கு எதுவுமே தெரியாது. நான் 10வது தான் படிச்சேன். +2 தான் படிச்சேன் என புலம்பியபடி பொருளாதார சுமைகளை தாங்கிக் கொண்டு வலம் வரும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்..

கிராமப்புறங்களில் சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் உள்ளன.

சமுதாய திறன் பள்ளிகள் மூலமாகவும் பெண்கள் தொழில் தொடங்க பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில், ஒரு சில பயிற்சிகளுக்கு கல்வி தகுதியே தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பிரதான தொழில் இருக்கும். அந்த தொழிலை எப்படி திறம்பட செய்வது என்பதை சில நுணுக்கங்களுடன் இங்கு கற்றுக் கொள்ளலாம்.

பின், தாங்களே தொழில் தொடங்கி வேலைக்கு செல்வதற்கு பதிலாக 10 பேருக்கு வேலை கொடுக்கும் அளவு முன்னேறலாம்.

`மதி சிறகுகள் தொழில் மையம்’ அமைப்பு தமிழகம் முழுவதும் 42 இடங்களில் செயல்படுகிறது.

பெண்களிடம் ஏதேனும் ஒரு பிசினஸ் செய்ய ஐடியா மட்டும் இருந்தால் போதும்.

குறைந்த கட்டணத்துடன் அதை பிசினஸ் மாடலாக மாற்றி வங்கிக்கடன் பெறவும் உதவுவார்கள்.

கிராமப்புற வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலமாக திறன் பயிற்சிகள் கிடைக்கும்.

வேலைக்கு போனா பாதுகாப்பு இருக்காது என்று சிலர் இன்னும் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கலாம்.

வேலைக்குச் செல்லும் இடத்திலும், தொழில்முனைவு நடைபெறும் இடத்திலும் பெண்களுக்கு நிகழும் பாலியல் வன்கொடுமை களைத் தடுக்கவும் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு கமிட்டியையும் விழிப்புணர்வு மூலம் வழங்குவார்கள்.

இதனை தெரிந்து கொண்டு தன்னம்பிக்கையோடு தைரியமாக முன்னேறிச் செல்லலாம்.

வீட்டிலேயே அடி உதை வாங்கிக் கொண்டு வெளியே செல்ல அனுமதிக்காத துணை இருந்தால் அந்த தடைகளை நீக்கவும் அரசு உதவும்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் வட்டார அளவில் வானவில் மையங்கள் உள்ளன.

இதில் குழந்தை திருமணம், வரதட்சணை கொடுமை என பெண்களுக்கு நிகழும் வன்முறைகளை யார் வேண்டுமானாலும் தெரியப்படுத்தலாம்.

ஒரு பெண் அரசியல், சமூக, பொருளாதார முன்னேற்றம் அடைய முதல் அவளது தடைகளை உடைக்க அரசு உடன் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இன்னும் பல திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவை பெண்களுக்கு அவசியம். இதில் பொருளாதார முன்னேற்றம் கிடைத்துவிட்டால் மற்ற இரண்டும் தானே மாறத்தொடங்கும் என்பதும் அனைவரும் அறிந்ததே.

இந்தியாவில் தமிழகத்தில் தான் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகம்.

முன்னேறுவோம்…
முன்னேற்றுவோம்…

மகளிர் தின வாழ்த்துகள்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE