அதிக வெப்பத்தின் காரணமாக தோளில் சிவப்பு நிறத்தில் ஆங்காங்கே சிறிய சிறிய உருவில் தடித்து காணப்படுபவை வியர்க்குரு. இது அதிக வெப்பத்தின் போது உடலில் உற்பத்தியாகும் வியர்வையானது வெளியேற வழியின்றி அடைக்கப்படுவதால் ஏற்படும். அந்த வியர்வை உள்ளேயே தேங்கும் போது அரிப்பு ஏற்படும். அதனை சொறிய சொறிய சிவந்து வியர்க்குருவாக மாறிவிடும்.

உடலின் பல இடங்களில் இது போல் குருத்து இருப்பது வெளியிலேயே செல்ல முடியாத சூழலையும் அசவுகரியங்களையும் சிலருக்கு ஏற்படுத்தலாம். எனவே வேர்க்குரு வந்தால் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பதை தற்போது பார்க்கலாம்.

  • தேங்காய் எண்ணெய்

வியர் குருவுக்கு மிகச் சிறந்த மருந்து தேங்காய் எண்ணெய். கொஞ்சம் அளவு தேங்காய் எண்ணெயை எடுத்து கைகளில் நன்கு தேய்த்துக் கொள்ளவும். ஏனெனில் மிகவும் தின்னான லேயரில் தான் தேங்காய் எண்ணெயை வியர்க்குரு இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். அதிக அளவு எண்ணெய் பயன்படுத்தக் கூடாது. அதேபோல் முகத்தில் வியர் குரு இருந்தால் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது உகந்தது அல்ல. ஏனெனில் ஏற்கனவே உள்ள சூடும், வியர்வையும் சேர்ந்திருக்கும் போது பிம்பிள் உள்ள முகத்தில் அது அதிகரிக்கக் கூடும். அல்லது புதிதாக பிம்பிள் வரக்கூடும்.

  • குழந்தைகளுக்கு வந்தால். . .

முதுகு, கை கால்களில் குழந்தைகளுக்கு வியர்க்குரு வரலாம். அவர்களுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதை நிபுணர்கள் பரிந்துரைப்பதில்லை. மாறாக கேலமைன் லோஷன் பயன்படுத்தலாம். இது குழந்தைகளின் மெல்லிய தோலுக்கு சற்று குளிர்ச்சி தரும் விதமாக அமையும்.

  • கேலமைன் லோஷன்

ஸிங்க் ஆக்சைடு கொண்ட கேலமைன் லோஷன் தடவும் போது அது வெப்பத்தை கிரகித்துக் கொண்டு குளுமையான உணர்வைத் தரும். எனவே ஒரு சுத்தமான காட்டன் மீது கேலமைன் தடவி தேய்த்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.

  • ஆலோவேரா

கற்றாழை வியர்க்குருவுக்கு மிகச் சிறந்த மருந்து. இது எரிச்சலை அடக்கி ஆன்டி செப்டிக்காகவும், இயற்கையிலேயே தோலுக்கு சிறந்த கூலன்ட் ஆகவும் அமையும். வேர்க்குருவை சொறந்ததால் ஏற்படும் வீக்கம், வலி உள்ளிட்டவற்றை கற்றாழை குறைக்கும். மேலும் அதில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு சக்திகள், கெட்ட பாக்டீரியாக்களின் தொற்றை குறைக்கும். எனவே வியர்க்குருவால் அவதிப்படுவோர் கற்றாழை தடவி வர சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

  • மஞ்சள் + சந்தனம்

இயற்கை பொருட்களான மஞ்சளும், சந்தனமும் மேனிக்கு எப்போதுமே உகந்ததுதான். அதிலும் குறிப்பாக வியர்க்குரு ஏற்பட்டால், மஞ்சளையும் சந்தனத்தையும் தண்ணீரில் குழைத்து பேஸ்ட் போல செய்து கொண்டு அதனை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவவும். முதலில் மிகவும் குறைந்த அளவு பேஸ்ட்டை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி பரிசோதிக்கவும். அதீத எரிச்சல், அதீத அரிப்பு இருந்தால் அதனை பின்தொடர வேண்டாம். ஆனால் அலர்ஜி ஏதும் வராத பட்சத்தில் வியர்க்குருவுக்கு மஞ்சளும் சந்தனமும் சிறந்த மருந்தாக அமையும்.

  • குளிர் நீர் குளியல்

வேர்க்குருவால் பாதிக்கப்பட்டவர்கள் குளிர்ந்த நீரில் குளிக்கும் போது சற்று நிவாரணம் கிடைக்கும். மின்விசிறி, ஏர் கண்டிஷனர் உள்ளிடவற்றின் முன்பு அமரும்போது உடலின் வெப்பத்தை குறைத்து குளுமையாக இருக்கச் செய்யும்.

  • மூச்சு விடக்கூடிய ஆடை

பொதுவாக ஆடைகளில் இரு வகைப்படும். ஒன்று இறுக்கமான, அதிக ஜிஎஸ்எம், எடை கூடிய ஆடைகள். அதில், மிக நெருக்கமாக இழைகள் ஓட்ட பட்டிருக்கும். இரண்டு, இலகுவான ஆடைகள். ஆனால், வியர்க்குரு உள்ள சமயத்தில் சற்று தளர்வான ஓரிழை காட்டன் துணிகளை அணிவது, தோலை சுவாசிக்க எளிமையாக இருக்கும்.

  • ஈரத்துணி

வேர்க்குருவால் பாதிக்கப்பட்ட இடத்தில் ஈரத்துண்டை 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்து ஒத்தி எடுக்க உடலின் வெப்பமும் குறையும். வியர் குருவின் அரிப்பும் குறையும். 3 அல்லது 4 மணி நேரத்துக்கு ஒருமுறை இதுபோல் ஈரமான துண்டை வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த த காரிகையின் சமூக வலைதள பக்கங்களை பின்தொடருங்கள்

You may have missed

Facebook
Instagram
YOUTUBE