ஆரத்தி எடுப்பது என்பது தமிழர்கள் மட்டும் என்று இந்திய பாரம்பரியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சடங்காகக் கருதப்படுகிறது.

என்னதான் உலகம் கணினி மயமானாலும், விஞ்ஞானம் வளர்ந்தாலும் இன்னும் நமது சடங்கு சம்பிரதாயங்களில் பழங்கால முறையை பின்பற்றி வருகிறோம்.

90ஸ் கிட்களாக இருக்கும் பலருக்கும் கூட இப்போது வரை ஆரத்தி எடுப்பது எதற்காக என்றும், அதன் பலன் என்ன என்றும் தெரியாது, என்னும் போது 2K கிட்ஸ்களுக்கு அது முழுமையாக தெரிந்து இருப்பது ஆச்சரியமே.

தெரியாதவர்கள் இந்த கட்டுரையின் வாயிலாக தெரிந்து கொள்ள “த காரிகை” வாய்ப்பை வழங்குகிறது.

யார் யாருக்கு ஆரத்தி?

ஆரத்தி எடுப்பது என்பது நம் கலாச்சாரத்தில் ஒன்றாக இருந்தாலும் தொலைதூரம் பயணங்கள் முடிந்து வரும் குடும்பத்தினர், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் நபர், திருமணம் முடித்துவிட்டு வீடு திரும்பும் தம்பதி, குழந்தை பெற்றெடுத்து வீடு திரும்பும் தாய்மார்கள் உள்ளிட்டவர்களுக்கும் சமூகத்தில் சாதித்து வெற்றி உள்ளிட்டவற்றை பெற்றவர்களுக்கும், ஊர் கண் பட்டுவிடும் என நினைப்போருக்கும் ஆரத்தி எடுப்பது உண்டு.

ஆரத்தி கரைப்பது எப்படி?

ஆரத்தி கரைக்க மஞ்சள் தூளும், தண்ணீரும், சிறிது சுண்ணாம்பும் தேவை. இவை மூன்றையும் தண்ணீரில் நன்றாக கரைத்து பின் பார்த்தால் அதில் சிவப்பு நிறம் வரும்.

எனவே ஒரு அகலமான பரந்த பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அதில், இந்த மூன்றையும் போட்டு வெற்றிலை வைத்து அதன் மீது கற்பூரத்தை வைத்து கொளுத்தி யாருக்கு ஆரத்தி சுற்றுகிறோமோ அவர்களுக்கு வலது புறம் 3 முறை இடது புறம் 3 முறை சுற்றி திருஷ்டி கழிக்க வேண்டும்.

பலன் என்ன?

மஞ்சளுக்கும் சுண்ணாம்புக்கும் இயற்கையிலேயே நோய் எதிர்ப்பு சக்தி தரும் ஆற்றல் உள்ளது. இது நோய்க்கிருமிகளை அழிக்க வல்லது. எனவே ஒருவர் மீது உள்ள விஷ அணுக்களை அழிப்பதற்கு ஆரத்தி பயன்படுத்தப்படுகிறது. அதனை எடுத்துக் கொண்டு அவர்கள் நடந்து சென்ற பின் அவர்கள் நடந்து வந்த பாதையில் ஊற்றும் போது அவர்களை தொடர்ந்து எந்த ஒரு தீய சக்தியும் வீட்டுக்குள் வராமல் தடுக்க இது உதவுவதாக நம்பப்படுகிறது.

பொதுவாக கற்பூரத்தை பூஜைகளுக்கு ஏற்றி சுற்றி போடுவது வழக்கம். இறையருளுக்காக செய்வதாக இதை பலரும் கருதுகின்றனர். ஆனால் கற்பூரமும் ஒரு இயற்கையான பாசிட்டிவ் சக்தி தரும் ஒரு பொருளாகும்.

புதுமண தம்பதியரை வரவேற்பதற்காக வாசற்படியின் இரு புறங்களிலும் ஒவ்வொரு பக்கத்துக்கும் 11 கற்பூரம் வீதம் 2 பக்கமும் வரிசையாக ஏற்றிவிட்ட பின் தான் ஆரத்தி எடுப்பார்கள்.

எனவே இந்த கற்பூரம் எரிந்து அதன் புகை முழுவதும் பரவும் போது, அந்த இடம் முழுவதும் பாசிடிவ் சக்தி பரவும் என்று நம்பப்படுகிறது.

அந்த கற்பூரத்தினால் இருந்து வரும் புகையால் திருஷ்டி கலையும் என்றும் இறையருள் கிடைக்கப்பெறும் என்றும் நம்பப்படுகிறது.

வெற்றிலை ஒரு சிறந்த சுத்திகரிப்பு இலை என்பதால் அதன் மீது கற்பூரத்தை கொளுத்தி சுற்றி போடும் போது பல்வேறு நன்மைகள் உண்டாகும்.

எனவே ஆரத்தியில் அறிவியலும் ஆன்மீகமும் இரண்டற கலந்திருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது. ஆரத்தியை சுற்றினோமா? காசை வசூலித்தோமா? என இருக்காமல் அதன் பலன்களை முழுமையாக தெரிந்து கொள்ள இந்த கட்டுரை உங்களுக்கு உதவியிருக்கும் என நம்புகிறோம். இதுபோன்ற பல பலனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள த காரிகையின் சமூகவலைதளப் பக்கங்களைப் பின் தொடருங்கள்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE