பிக்பாஸ் சீசன் தொடங்கியதும், சமூக வலைதளங்களில் கன்டெஸ்டன்ட்ஸ் பற்றி பேசுவது அதிகரித்துள்ளது. 2-வது வீடு எதற்காக என்ற விடுகதை முடிச்சுக்கும் விடை கிடைத்துவிட்டது.

பொதுவாக பெரிய வீடுகள் இருந்தால், அதன் அருகில் வொர்கர்ஸ் கோட்ரஸ் என்ற பெயரில் பணியாட்களுக்கான வீடு அருகில் இருக்கும். அதுபோலத்தான் பிக்பாஸ் சீசன் 7-ல் இரண்டாவது வீடும் உள்ளது.

முதலில் ஹவுஸ் கேப்டன் விஜயை கன்ஃபெசன் ரூமுக்கு அழைத்த பிக்பாஸ், ஒரு சதித்திட்டத்தை தொடங்கி வைத்தார். பிக்பாஸ் வீட்டுக்குள் விஜயை குறைவாக இம்ப்ரஸ் செய்த 6 பேரை பரிந்துரைக்குமாறு கோரியிருந்தார். பவா செல்லதுரை தன்னை ஐயா என்று அழைக்காமல் பெயரைச் சொல்லியே அழைக்குமாறு கோரியதை ஒரு சர்ச்சையாக்கிய கேப்டன் விஜய், அவரது பெயரைப் பரிந்துரைத்தார்.

உரிமைக்குரல் என்ற அடையாளத் துணியை பத்திரமாக வைக்கவில்லை என்ற காரணத்துக்காக ரவீனா பெயரைப் பரிந்துரைத்தார்.

வினோஷா அதிகம் ஈடுபாட்டோடு பங்கேற்கவில்லை எனக் காரணம் கூறப்பட்டது. விஜயால் பரிந்துரைக்கப்பட்ட ஐஷூ தனக்கு பல்வலி இருப்பதால்தான் சரியாக பேச முடியவில்லை என்றார்.

குட்டி வீடு எப்படி இருக்கு?

குட்டி பிக்பாஸ் வீட்டுக்கு ஒரு வாரத்துக்குத் தேவையான துணிகளை எடுத்துக் கொண்டு விஜய் பரிந்துரைத்த 6 பேரும் வந்தனர். அவர்கள், குட்டியான ஆனால் வசதியான வீட்டுக்குள் வந்ததும் சின்ன பிக்பாஸ் அவர்களை கலாய்த்தபடியே வரவேற்றார்.

லெஃப்ட்ல பாரு, ரைட்ல பாரு, நீங்கதான் அந்த கடைசி பெஞ்ச் ஸ்டூடன்ட்ஸ்-ஆ எனக் கேட்டு கலாய்த்தார்

குட்டி வீட்டில் இருப்பவர்களுக்கு சில கட்டளைகள் இடப்பட்டன.

அவர்கள் பெரிய வீட்டுக்குள் செல்லக் கூடாது.

பெரிய வீட்டில் இருப்போருடனான டாஸ்க்கை போட்டியிட்டு வெல்ல வேண்டும். தவறினால் அந்த வீட்டில் இருப்போருக்கும் பாத்திரம் கழுவி, சமைத்துப் போட்டு பணிவிடை செய்ய வேண்டும்.

நாமினேஷன்

இந்த வாரம் எவிக்சனுக்கு நாமினேட் ஆனவர்கள்.

பவா செல்லதுரை
ஐஷூ
அனன்யா
ரவீணா
யுகேந்திரன்
பிரதீப்
ஜோவிகா

அழவைத்த பவா செல்லதுரை

பவா செல்லதுரையை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பும் போதே அவர் அங்குள்ளவர்களுக்கு நல்லநல்ல கதைகளைச் சொல்ல வேண்டும் என்பதுதான். பவா சமைத்துக் கொடுத்த உணவை நன்றாக இருக்கிறது என பெண்கள் பாராட்டினர். அதுசரி, ஆனால் பெண்களைப் இப்படி பாராட்டி அவர்களை சமையலறைக்குள்ளேயே முடக்கிவிடுவார்கள் சில ஆண்கள் என அவர் குறிப்பிட்டார்.

அதேபோல், எழுத்தாளர் ஆதவன் எழுதிய “ஓட்டம்” என்ற கதையை உணர்ச்சி பொங்க அவர் விவரித்தார். ஓட்டத்தில் ஆர்வமாகவும் திறமையாகவும் இருந்த பெண்ணை, குடும்பம், சமையலறை எப்படி முடக்கி வாழ்வைச் சிதைத்தது? என அவர் விவரித்தார். அவரது கதை சொல்லல் திறமையால் கட்டுண்டவர்கள் போல அமர்ந்து கேட்ட போட்டியாளர்களில் சிலர் கதையின் இறுதியில் கண்ணீரும் வடித்தனர்.

கதை சொல்லல் மூலம் நவீன நாவல்களையும், நல்ல புத்தகங்களையும் அவர் போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல, பிக்பாஸ் பார்க்கும் வெகுஜன மக்களுக்கே தெரியவேண்டும் என்பதற்காகத்தான் அவர் அழைக்கப்பட்டிருக்கிறார் என்ற பிக் பாஸின் நல்ல நோக்கமும் தெரியவந்துள்ளது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE