BB7 Day 2: சீசனின் முதல் சண்டை முதல் அழுகை. . .
பிக் பாஸ் சீசன் 7-ல் 2வது நாளில் பற்ற வைத்த பட்டாசுகள் போல் படபடவென வெடித்து சில விவாதங்கள் சூடு பிடித்தன.
டான்சர் மணிச்சந்திராவுக்கும் ரவீனாவுக்கும் நட்பு தொடர ஆரம்பித்துள்ளது. ஒருவேளை அது காதலாக மாறினாலும் கூட இந்த சீசன் முடிந்தவுடன் அதுவும் முடிந்து விடும் என்பது போல் சிலர் விமர்சித்து வருகின்றனர்.
மணிச்சந்திராவுடன் ரவீனா கிசுகிசுவென பேசுவதில் இருந்து இந்த பேச்சு தொடங்கியுள்ளது. இது எங்க போய் முடியுமோ என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
சண்டகோழி ஆன பிரதீப்
தொட்டதற்கு எல்லாம் கோவப்படும் சண்ட கோழியாக பிரதீப் இந்த சீசனில் உருவெடுத்துள்ளார்.
பாலை பொங்க வெட்ட வினோஷா
பாரதிகண்ணம்மாவில் கண்ணம்மாவாக நடித்து வந்த வினோஷா பால் காய்ச்சும் போது அரை லிட்டர் பாலை பொங்க விட்டுவிட்டார். “பால் காய்ச்சி எங்கள் வீட்டுக்கு வாருங்கள் என்பது போல் அழைக்கிறீர்களா?” என்று யுகேந்திரன் கிண்டல் செய்து கொண்டிருந்தார்.
காலையிலேயே பெரிய வீட்டை எழுப்பும் வேலை சின்ன வீட்டு ஆட்களுக்கு கொடுக்கப்பட்டது. அதாவது பாத்திரங்களை போட்டு உடைத்து, உருட்டி, பெரிய வீட்டில் உள்ள ஆட்களை எழுப்பி விடும் பணி அதுவும் ஜாலியான பணி சின்ன வீட்டில் இருப்பவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த சீசனின் முதல் டாஸ்க் லெட்டரில் “வீட்டை யார் சுத்தம் செய்வது?” என்ற டாஸ்க் வந்தது. அதில், நிக்சன் தோற்றதால் பெரிய வீட்டையும் சேர்த்து சுத்தம் செய்ய வேண்டும் என்று நிலை உருவானது.
நிக்ஸனை கேலியோடு சேர்த்து கோபமாகவும் கலாய்த்து எச்சரித்தார் பிக் பாஸ்.
“வெல்கம் டூ கழுவப்போவது யாரு?” என்ற டாஸ்க்கிலும் சின்ன வீடே தோற்றது. இதனால் 2 வீடுகளின் பாத்ரூம்களையும் கழுவும் பொறுப்பும் சுத்தம் செய்யும் பொறுப்பும் சின்ன வீட்டில் இருப்பவர்களுக்கு வந்து விழுந்தது.
சில சதித் திட்டங்களை கூட்டி வீட்டில் இருப்பவர்களுக்கு வகுத்துக் கொடுத்தார் பிரதீப். நானா இருந்தா சமையல் வரலைன்னு சொல்லி கேவலமா சமைச்சு வச்சு எல்லாம் தண்டனை கொடுத்து இருப்பேன் என்று அவர் சில சதி வேலைகளை சொல்லிக் கொடுத்தார்.
அனைத்து வேலைகளையும் அதாவது சமையல், வீட்டை சுத்தம் செய்வது, பாத்ரூம் கழுவுவது உள்ளிட்ட அனைத்து வேலைகளும் சின்ன வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுக்கப்பட்டதால் யுகேந்திரனும் விசித்ராவும் மனிதாபிமான அடிப்படையில் எதிர் அணிக்கு உதவி செய்தார்கள். இதனை விதிமீறலாக எடுத்துக் கொண்ட பிக் பாஸ் அவர்களையும் சின்ன வீட்டுக்கு விரட்டியது.
ஐசுவின் ஆடை சரியில்லை என விசித்ரா கூறியிருந்த நிலையில் அதே ஐசு ஹோம் சிக்காக இருக்கும்போது அவரே சென்று சமாதானப்படுத்தினார்.
கோல்டன் ஸ்டார்
கோல்டன் ஸ்டார் டாஸ்க்கள் அடுத்தடுத்து வரும். அதிக ஸ்டார்களை பெற்றவர்கள் வரும் 10 வாரத்துக்குள் தங்களை ஒரு முறை எலிமினேஷனில் இருந்து தப்பித்துக் கொள்ள அதை பயன்படுத்தலாம் என்று பிக் பாஸ் அறிவித்தார். அந்த டாஸ்க் ஒவ்வொருவர் பற்றியும் 6 கிசுகிசுக்கள் போர்டில் எழுதி வைக்கப்படும். அந்த கிசுகிசுக்களை கதையாக மாற்றி சொல்பவர்களுக்கு பரிசு கிடைக்கும் என கூறப்பட்டது. இதில் கூல் சுரேஷ் பற்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனாக உள்ள சரவண விக்ரம் 3 கிசுகிசுக்களை கதையாக்கி கூறியதன் விளைவாக அவருக்கு அந்த டாஸ்கின் கோல்டன் ஸ்டார் பட்டம் கிடைத்தது.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.