பிக் பாஸ் சீசன் 7-ல் கண்டன்டுக்காக கண்டஸ்டண்டுகளை விரட்டி விரட்டி வெளுக்கிறார் பிக் பாஸ். கன்டென்ட் தராவிடில் ஜெயிலுக்கு அனுப்பும் அளவு அவர் கன்டென்ட் வெறி பிடித்தவர் போல இருக்கிறார்.

பிக் பாஸ் முந்தைய சீசன்களில் அவர்களாகவே ஏதேனும் சண்டை போட்டு அவர்களாகவே கத்தி அழுது எமோஷன் ஆகி நகைச்சுவை செய்து கண்டெட்டு தருவார்கள். ஆனால் தற்போது அப்பட்டமாக கண்டன்டுக்காகவே அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பாம்பும் கீரியும் போல நடந்து கொள்வது ரசிக்கும் வகையில் இல்லை.

குறிப்பாக ஏற்கனவே வீட்டில் பல பிரச்சனைகளோடு இருப்பவர்கள் சற்று ரிலாக்ஸ் ஆகலாம் என பிக் பாஸ்க்கு போட்டு விட்டால் அவ்வளவுதான். ஆளாளுக்கு ஒருபுறம் கத்தி அவர்களின் நெகட்டிவ் பாகத்தைக் காட்டி நெகட்டிவ் வெறியை ஏற்றுகின்றனர். குறிப்பாக பிக் பாஸ் அவர்களுக்குள் சண்டை மூட்டி விடும் நாரதர் வேலையை கச்சிதமாக பார்க்கிறார்.

சின்ன வீட்டுக்காரர்கள் சமையல் செய்யும்போது பாஸ்தாவிலும், கோவைக்காயிலும் காரத்தை அதிகமாக போட்டுவிட இரு வீட்டில் இருப்பவர்களுக்கும் சண்டையே வந்துவிட்டது இருபுறமும் மாறி மாறி ஓடி சமாதானம் செய்வதற்குள் ஒரு வழியாகிவிட்டார் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் என்ற சரவணன்.

ஒரு வழியாக அனைத்தையும் சமாதானப்படுத்துவதற்குள் நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டார்.

இந்த முறை ரொட்டி முட்டை கொண்டு ஒவ்வொருவரும் விதவிதமாக மெனு ஐட்டம்களை கேட்க சின்ன பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு கடுப்பே ஆகிவிட்டது. ஆளாளுக்கு ஒரு மெனு கேட்டால் எப்படி சமைப்பது என்று அவர்கள் கடுப்பாக என்னால் சமைக்க முடியும் மா, என தனது ஸ்ட்ரேட்டஜியை முன் கொண்டு வைத்தார் பிரதீப்.

அக்ஷயாவும் வினுஷா ஜெயிலுக்கு போற ஆபத்துல இருக்கறதுனால டாஸ்க்ல அவங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வாய்ப்பு கொடுத்தா ஜெயில்ல இருந்து தப்பிக்க வைக்கலாம் என்று கேப்டன் இடம் மனிதாபத்தோடு ஆலோசனை கூறினார் கூல் சுரேஷ். அப்படின்னு வீட்டை சுத்தம் செய்யும் டாஸ்க்கும் பாத்ரூம் கழுவும் டாஸ்க்கும் கொடுத்தபோது, அக்ஷயாவும் வினுஷாவும் தோல்வியுற்றனர். எனவே அவர்கள் சிறை செல்வது கன்ஃபார்ம் என்ற பாணியில் பிக் பாஸ் கடுப்பேற்றிக் கொண்டிருந்தார்.

இதற்கிடையில் ஸ்ட்ரேட்டஜி கிங்கான பிரதீப்போ, “ஜோவிகா கிட்ட உஷாரா ஆடனும், டேஞ்சரஸ் கேர்ள். நல்லா ஆடுறா. நிக்சன் பையல இறக்கம் பார்த்து விட்டு வச்சிருக்கேன். முதலில் பணக்கார பசங்களை தூக்கிட்டு அப்புறம் ஏழை பசங்களுக்கு வரணும். விஜய்யெல்லாம் ஜிம்முக்கு சொந்தக்காரன். விஷ்ணுவை பார்த்தா அவ்வளவு வசதி இருக்கிற மாதிரி தெரியல” என்றெல்லாம் பிரதீப் தனது ஸ்ட்ராட்டஜிக்கு புளூ பிரின்ட் போட்டுக் கொண்டிருந்தார்.

வர்க்க பேதம் பார்ப்பதெல்லாம் தப்புப்பா என்று சிலர் கமெண்ட் செய்து வந்தாலும், ஏழையாக இருந்தால் இன்னும் அதிக நாள் இருந்து அதிக பணம் சம்பாதித்து செல்லலாம் என்ற நினைப்பில் பிரதீப் கூறியிருக்கலாம். ஆனாலும், ஆளை கட்டம் கட்டி தூக்க பிரதீப் யார்? என எகிறியபடி கேட்டார் நிக்சன்.

அம்மாவை பத்தி தப்பா பேசினியா? என்று பிரதீப்-மாயா இருவருடைய பிரச்சனை ஓரளவு சுமூகமாக முடிந்தது. அடுத்த கோல்டன் ஸ்டார் ஜெயிப்பதற்கான டாஸ்க் வரவே ஒவ்வொருவரும் எழுந்து நின்று எதற்காக கோல்டன் ஸ்டார் வெல்ல வேண்டும்? என்றும் யார் மக்களை அதிக என்டர்டைன் செய்து விட்டார்கள்? என்று ப்ரூப் செய்யும் அளவு பேச வேண்டும். இறுதியில் அனைவரும் பேசி முடித்த பின் யார் அதிகமாக நல்ல முறையில் மக்களை கவருவதாக கூறினார்களோ, அவர்களுக்கு கோல்டன் ஸ்டார் வழங்கப்படும் என்றும் அந்த கோல்டன் ஸ்டார் ஆனது அவர்களை ஒரு கட்டத்தில் எலிமினேஷனில் இருந்து ஒருமுறை காப்பாற்றும் என்றும் ஏற்கனவே பிக்பாஸ் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE