‘வீட்டுக்குள்ள ஏதோ பிரச்சினைப்பா. உன்னைக் கூப்பிடறாங்க’ என நின்சனை அழைத்தார் விக்ரம். உள்ளே நள்ளிரவில் ஒரே கூல்ல குழப்பம். உள்ளே சென்றதும்தான் நிக்சனுக்கு ஹேப்பி பர்த்டே பாடி, ஒரு நாள் கேப்டன்சியையும் பரிசளித்தார் தினேஷ்.

தமிழ் பசங்க பாடலோடு 53-ம் நாள் விடிந்தது. ‘உருட்டு அப்படி’ என்கிற ஷாப்பிங் டாஸ்க்கில் தோற்றால், ஒருவரை நாமினேட் செய்யலாம் எனக் கூறியதும், வேண்டுமென்றே தவறாக உருட்டி, தினேஷை ஒட்டுமொத்தமாக கட்டம் கட்டினர்.அவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆஃபீசரா இருக்குறதால அவரை கார்னர் செய்தனர்.

இரு வீட்டு ஆட்களும் இடம் மாறியதால் இந்த முறை நட்புக்களும் மாறியுள்ளது. பெரிய வீட்டில் இருந்து சின்ன வீட்டுக்குப் போனதும், பூர்ணிமா-விசித்ரா இடையே இருந்த பகை நீங்கி நட்பு தொடரத் தொடங்கியுள்ளது. ‘மேம். மேம்’ என்று விசித்ராவை சுற்றிவந்த அரச்சனாவுக்கு தற்போது விசித்ராவின் செயல் சற்று நெருடலை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே சர்க்கரை பதுக்கல் விவகாரத்தில் விசித்ராவை திருடி என்பது போல் தினேஷ் கூறியது சர்ச்சையானது. பர்சனல்-புரொஃபசனல் என இரண்டிலுமே ஈகோ தேவையற்றது என விசித்ரா தினேஷைப் பார்த்து கூறியதன் பழிவாங்கும் நடவடிக்கையாகவேதான் தினேஷின் செயல் உள்ளது.

எப்படியும் 2 நாளில் ஸ்டோர் ரூமுக்குள் இருக்கும சர்க்கரையை எடுத்துக் கொள்ளுங்கள் என பிக்பாஸே சொல்லியிருக்கலாம். அதற்கு போய் இவ்வளவு பஞ்சாயத்தா? என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறது. இதனால், விதி மீறல் விசித்ரா என்றே தினேஷ் அவருக்கு பெயர் வைத்துவிட்டார். இருந்தாலும் சிறுசுகள் திருடியதற்கு விசித்ரா துணைபோகாமல் இருந்திருக்கலாம்.

தம்புள்ஸ் அடுக்கும் போட்டியில் வீடு தோற்றதால் அனைவரும் திட்டமிட்டு தினேஷை நாமினேட் செய்தனர்.
“எனக்கு இந்த கேம் பிடிச்சிருக்கு’ என்று நாமினேஷனை முடித்து விட்டு உற்சாகமாக வெளியே வந்தார் விசித்ரா. எந்த தினேஷ் மீண்டும் கேப்டனானதால் அவர் சந்தோஷப் பட்டாரோ, அதே தினேஷை நாமினேட் செய்தார்.

“நீங்க பண்றதெல்லாம் பிடிக்குது. ஆனா ஸ்ட்ரிக்ட்டா தெரியுது” என்று தினேஷிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ரவீனா. ‘இதெல்லாம் ரொம்ப அடிப்படை. இதையே ஃபாலோ செய்யலைன்னா எப்படி?” என்று சலித்துக் கொண்டார் தினேஷ். தினேஷை நாமினேட் செய்த சுரேஷ் “நீங்க பண்றதெல்லாம் 200% கரெக்ட்டு. ஆனா நடைமுறைக்கு ஒத்துவராது” என்று சொன்னவர், அதற்காக சொன்ன உதாரணம்தான் ‘நச்’சென்று இருந்தது. ‘இந்தியன் தாத்தா ஸ்ட்ரிக்ட்டா பண்ணதெல்லாம் அவரோட பையனுக்கே பிடிக்கலையே?’

“என்ன இருந்தாலும் he is a good guy” என்று விஷ்ணுவைப் பற்றி சிணுங்க, “ஹலோ. உங்க லவ்வையெல்லாம் வெளில வெச்சுக்கங்க. ஆட்டத்துல வரக்கூடாது” என்று மாயா கண்டித்தார்.

“நீ ஏன் என்னை நாமினேட் பண்ணலை?” என்று அர்ச்சனாவிடம் தினேஷ் கேட்க “பாதுகாப்பான ஜோன்ல இருந்து சுத்தறவங்களைத்தான் மொதல்ல தூக்கணும். நீங்க கேப்டன் ஆகக்கூடாதுன்னு நெனச்சா அதை அடுத்த வாரம் கூட பண்ணிக்கலாம். ‘Worst performer’- ல ஓட்டுப் போட்டா வேலை முடிஞ்சது” என்று சொன்னார் அர்ச்சனா.

போட்டியாளர்களின் வாழ்வில் நடந்த பூகம்பத்துக்கான டாஸ்க் தொடங்கியது. அதில் தனக்கு ஒரு ஆணால் நடந்த பாலியல் பலாத்கார முயற்சியை தைரியமாக வெளியே சென்னார் பிராவோ. “இப்ப கூட அந்தப் பயம் என் கிட்ட அப்படியே இருக்கு. லிஃப்ட்ல வரும் போது சக ஆண் கூட வரதுக்கு கூட பயமாவே இருக்கும்” என பரிதாபமாகக் கூறினார்.

“டான்ஸ் துறைல ஒரு மூலையிலாவது வந்து ஆட மாட்டோம்னு அதுக்காக ரொம்ப உழைச்சிக்கிட்டு இருந்தேன். அப்பதான் எங்க அப்பாவோட மரணம் நிகழ்ந்தது. அவருக்கு ஸ்மோக்கிங் பழக்கம் இருக்கு. நான் ஓரமா நின்னு ஆடிய அத்தனை வீடியோக்களும் அவர் போன்ல இருந்தது. அப்பதான் முடிவு பண்ணேன். ‘டான்ஸ்தான் என் கேரியர்ன்னு’. புகைப்பழக்கம் கொடியது” என்று பீறிட்டு வரும் கண்ணீரை விழுங்கியபடியே கூறினார் மணி.

தன்னை பெரியாளாக்கி வேடிக்கை பார்க்க நினைத்த சித்தப்பா மறைவைப் பற்றியும், அவர் இறந்தபோது கடைசி போன் அழைப்பை எடுக்க முடியாமல் போனது பற்றியும் கண்ணீர் மல்க கூறினார் விஷ்ணு.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE