பிக் பாஸ் வீட்டில் 33 வது நாள் “நன்காய் நிலாவின் தங்காய்” என்ற பாடலோடு விடிந்தது.

சக போட்டியாளர்களைப் பற்றி பஞ்ச் டயலாக் சொல்ல வேண்டும் என்று மார்னிங் ஒரு டாஸ்க் தரப்பட்டது.

“இந்த கொசு தொல்லை தாங்க முடியல நாராயணா” என பிரதிப்பை கேலி செய்த ஆரம்பித்தார் விஷ்ணு

“அந்த ஏரியா இந்த ஏரியா எல்லா ஏரியாலையும் ஐயா கில்லி டா” என பூர்ணிமாவை பாராட்டினர் விக்ரம்

“நான் பத்து பேரு அடிச்சி டான் ஆகல, நான் அடிச்ச 10 பேரும் டான் தான்” என பிரதீப்பை பற்றி புகழ்ந்து பேசினார் அர்ச்சனா

“தம்பி இது ரத்த பூமி குழாயை திறந்தால் ரத்தம் தான் வரும்” என அர்ச்சனாவுக்கு டெரராக அட்வைஸ் செய்தார் ஜோவிகா

“என் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா” என தினேஷ் பிரதீப்பை பாராட்டினார்

அப்போது “மோனே தினேஷா” என அக்ஷயா சொன்னதால் சிரிப்பலை எழுந்தது.

“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?” என பிரதீப் தனக்கு தானே பன்ச் பேசிக் கொண்டார்.

ஷாப்பிங் செலவை சரி கட்டுவதற்கான போட்டியில் பெரிய வீடு தோற்றதால் ஒருவர் ஜெயிலுக்கு செல்ல வேண்டும் என்று கூற இதில் பலரும் அக்ஷயாவின் பெயரை பரிந்துரைத்தனர். இதனால் தன்மீது ஹவுஸ் மேட்ஸ்க்கு கோபம் இல்லை என பிரதீப் கூறிக் கொண்டிருந்தார். இந்த சீசனின் முதல் ஆளாக ஜெயிலுக்கு சென்றார் அக்ஷயா.

அரை இருட்டில் அந்த அறை இருந்ததால் அக்ஷயா சற்று டெரராகித்தான் போனார்.

ஒற்றை கொம்பில் மணி அடித்ததா? இல்லையா? என்று பஞ்சாயத்து இன்னும் ஓயவில்லை பிரதீப்பும் சுரேஷ்-ம் நேருக்கு நேர் அமர்ந்து பேசினர்.

“நான் ஒரு உரிமைல அப்படி பேசிட்டேன் ஆனா நீங்க பொய் சொல்லிட்டீங்க” என பிரதீப் கூற பெல் அடிச்சது பா நான் பொய் சத்தியம் எல்லாம் பண்ணல” என கூல் சுரேஷ் தனது வாதத்தை முன்வைத்தார்

“எனக்கு மன்னிப்பு கேட்க தோணல, பெல் அடித்ததா இல்லையான்னு உண்மை தெரியனும். அது தெரிஞ்சு கமல் சார் என்ன வெளிய போக சொன்னா ஒரு பிரச்சனையும் இல்லை நான் வெளியே போய் விடுவேன் என பேசிக்கொண்டு இருந்தபோது பேச்சுவாக்கில் கமலை “அந்தாளு” என பிரதீப் கூப்பிட சற்று அவரே கதி கலங்கி போய்விட்டார்.

இந்த முறை ஹவுஸ் மேட்ஸ் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து பிரதீப் -ஐ டார்கெட் செய்து உரிமை குரல் எழுப்பி வெளியே அனுப்ப திட்டமிட்டனர்.

இந்த நேரம் பார்த்து கரெக்டாக சபையை ஒன்று கூடிய பிக் பாஸ் இன்வால்வ்மெண்டோட விளையாடிய போட்டியாளர்களை தேர்ந்தெடுக்க சொன்ன போது மாயா மற்றும் சுரேஷ் பெயரை தான் பலரும் பரிந்துரைத்தனர்.

இதை எடுத்து இதை கேப்டன்சி டாஸ்க் என்று தெரிந்ததும் வாக்கெடுப்பில் வென்ற விசித்ரா மாயா சுரேஷ் ஆகியோர், சற்று அதிர்ச்சி அடைந்தனர். நீண்ட நேரம் ஒற்றை காலில் நின்று தாக்குபிடிக்க முடியவில்லை அடுத்ததாக ஸ்கூல் சுரேஷ் தோற்க மாயா ஜெயித்தார்.

இது கேப்டன்சி டாஸ்கென தெரிந்து இருந்தால் மாயா பங்கேற்று இருக்க மாட்டார். அவருக்கு கேப்டனாக விருப்பமில்லை எனவே நீங்கள் கேட்டிருந்தால் விட்டுக் கொடுத்து இருப்பாரே? என பிரதீப் விசித்ராவிடம் சொன்னதிலும் ஒரு காரணம் இருக்கலாம். விசித்ராவை பிரதீப் பிரெயின் வாஸ் பண்ணலாம். மாயா கொஞ்சம் கஷ்டமான போட்டியாளர்தான்.

இதனிடையே, பிரதீப்பைப் பற்றி கமலிடம் ஹவுஸ்மேட்ஸ் சரமாரியாக குற்றம்சாட்டுவதாக புரமோ வந்திருப்பதால், பிரதீப் ரெட் கார்ட் அல்லது உரிமைக்குரல் மூலம் எவிக்ட் செய்யப்பட்டதாக சில கணிப்புக்கள் உலவுகின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE