BB Day 30 – பிரதீப்பையே அழ வைத்த கூல் சுரேஷ்
அறுந்த வாலு எனக் கூறி உள்ளே வந்த அர்ச்சனா, மறு நாளே பிக்பாஸிடம் அழுது புலம்ப கன்பெசன் ரூமுக்கு அழைக்குமாறு கோரினார். “இந்த கேமே ஒருத்தரை அழுத்தி வெளியே அனுப்புறதுதான்.. அதுக்குத்தானே நாமினேட் செய்கிறோம்” என்று டெரரான நியாயத்தைக் கூறினார் பிரதீப்.
“வீக்கா இருக்கிறவங்களை பேக் பண்ணி வெளியே அனுப்ப வேண்டியதுதான்… இங்க படுக்கறதுக்கும் இடமில்லை… தட்டி தூக்கிட வேண்டியதுதான்” என்று கானா பாலா கெத்தாக சொன்னார். வக்கீல் வாதம் பிரதீப்பிடம் எப்படி ஒத்துக் போகும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.
மாயா மற்றும் பூர்ணிமாவுக்கு எக்ஸ்ட்ரா சட்னி தந்து நட்பைத் தொடங்கியுள்ளார் தினேஷ். மாயாவையும் தினேஷையும் இணைத்து வைத்து பூர்ணிமா கிண்டல் அடிக்க “அப்படியெல்லாம் கிடையாது. அவர் என் சித்தப்பா மாதிரி” என்று கேட் போட்டார் மாயா.
“சின்ன வீட்டில இருக்கிறவங்களை ஆளுக்கு ஒருத்தரா பிளான் பண்ணி டார்கெட் பண்ணுவோம். தினேஷை யாருமே கண்டுக்காதீங்க. தனியா சுத்தட்டும். அவன் பயந்துட்டான். எனக்கும் மாயாவுக்கும் சொம்பு தூக்குறான்..” என்றெல்லாம் ஐசுவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் பிரதீப்.
கிளீனிங் டாஸ்க்கில், பெரிய வீடு வென்றதால் சிறிய வீட்டுக்குப் பணிச்சுமை கூடியது. நான்தான் ஜெயிக்கப் போகிறேன் என பிரதீப் தொடர்ந்து கூறி வருவது, ஹவுஸ் மேட்ஸ் மத்தியில் தன்னம்பிக்கையை இழக்கச் செய்கிறது. இதுதான் பிரதீப்பின் யுக்தி. பாபநாசம் படத்தில் கமல் ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லி நம்ப வைத்தது போல் காய் நகர்த்துகிறார் பிரதீப்.
“பிரதீப் நமக்காக பிளான் பண்றது மாதிரி சொல்றான் ஆனால் அவன் நம்பளையும் துரத்திடுவான். அதுக்காகத்தான் மத்தவங்க மண்டையைக் கழுவுறான்” என்று விஷ்ணு சொன்னார். “நம்ப சப்கான்சியஸ்ல அவர் மைண்டை ஏத்திட்டாரு. இதில் நாம ஏமாறக்கூடாது” என்று இதையே இன்னொரு பக்கம் நிக்சனும் ஐஷூவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
“உனக்குன்னு ஒரு தனி ஐடென்டிட்டி, கன்டென்ட் வேணும்ல. நீ பிராவோ பக்கம் போய் லவ் ட்ராக் தூண்டிலைப் போடு. ரிஸ்க் எடுக்காமல் இங்க ரஸ்க் சாப்பிட முடியாது. நான் ஆடற கேம்ல எனக்கு கூட கெட்ட பேர் வரலாம். என்ன பண்றது? சர்வைவல் முக்கியம் குமாரு” என அக்ஷயாவிற்கு ஐடியா தர, பிராவோவோ அக்ஷயாவுக்கு காஃபி போட்டுக் கொடுத்து கரெக்ட் செய்யும் அளவு இறங்கி வர, வொர்க் அவுட் ஆயிடுமோ என பிரதீப்பும் பார்த்து வருகிறார்.
‘அசைஞ்சா போச்சு’ என்கிற கோல்டன் ஸ்டாருக்கான டாஸ்க்கில் காண்டாமிருகம் போன்ற ஒற்றைக் கொம்பில், மணி மாட்டி போட்டியார்களின் தலையில் மாட்டப்பட்டது. கடைசி வரை யாருடைய மணி அடிக்கவில்லையே அவர்களுக்கு கோல்டன் ஸ்டார்.
இதில், பிரதீப்பின் மணி அசைந்ததுபோல் இருந்ததால் கூல் சுரேஷ் அவரைப் போட்டுக் கொடுக்க, கெட்ட கெட்ட வார்த்தைகளால் வசைபாடினார் பிரதீப். தான் நேர்மையாக விளையாடும் போது கெடுப்பதாக கோபித்த பிரதீப், மிளகாய் பொடியை முகத்தில் தூவி விடுவேன் எனக் கூறியதும், கூல் சுரேஷ் பெட்டியைக் கட்டிக் கொண்டு கதவைத் திறக்குமாறு அலப்பறை செய்துவிட்டார்.
“ஏன் யாருமே அவனை கண்டிக்க மாட்றீங்க… அவனுக்கு பயப்படுறீங்களா? நீங்க எவ்வளவு திட்டினாலும் பதிலுக்கு நான் ஒருமுறையாவது திட்டியிருக்கேனா… நான் ஏதாவது ஒரு வார்த்தை சொன்னாலே இங்கே ஆட்சேபிக்கறாங்க. நான் விளையாட விரும்பலைப்பா” என்று பிரதீப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.
“நீ என்னை ஏமாத்திட்ட.. துரோகம் பண்ணிட்ட.. உன்ன போய் அண்ணனா நெனச்சேன் பாரு… என்னைத்தான் செருப்பால் அடிச்சிக்கணும்.. நீ வீட்டை விட்டு வெளியே போயிடு. இல்லைன்னா அசிங்கப்பட்டு போவ” என்றெல்லாம் சுரேஷை நோக்கி கண் கலங்க சொல்லிக் கொண்டிருந்தார் பிரதீப். இந்த வகையில் ஆனானப்பட்ட பிரதீப்பையே கலங்க வைத்த பெருமை சுரேஷிற்கு சேரும்.
இந்த டாஸ்க்கின் கடைசியில் அவுட் ஆனது விசித்ரா. எனவே அவருக்குத்தான் வெற்றி. கோல்ட் ஸ்டார் அவருக்குத்தான் கொடுக்கப்பட்டது. “நீ வெளியே போடா.. சில்ற பயலே… செருப்பால அடிப்பேன்… அடிடா பாக்கலாம்..” என்றெல்லாம் பரஸ்பரம் திட்டித் தீர்க்க பீப் ஒலியில் முடிந்தது 30-ம் நாள்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.