பிக் பாஸ் வீட்டின் 24 ஆம் நாள் “பேரு வச்சாலும் வெக்கமா போனாலும்” என்ற பாடல் ஒலிக்கத் தொடங்கியது. ஏற்கனவே செல்போன் டாஸ்க்கில் நடந்த அடிதடி சண்டை எல்லாம் எதுவுமே நினைவில்லாமல் அனைவரும் குஷியாக நடனமாடிக் கொண்டிருந்தனர்.

ஜோவிகா உடைய வெற்றிக்கு அக்ஷயா உறுதியாக போராடியது தான் முக்கிய காரணம் என்பதால் ஒரு ஸ்டாரை அக்ஷயாவுக்கு கொடுத்திருக்கலாம் என சுரேஷ் பரிந்துரை செய்து கொண்டார்.

விசித்ராவுக்கு பிக் பாஸ் ஒரு டாஸ்கை கொடுத்தார். “தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தை வைத்து இதர போட்டியாளர்களை பற்றி ஒரு நல்ல விஷயத்தையும் இம்ப்ரூவ் செய்ய வேண்டிய மற்றொரு விஷயத்தை பற்றி விசித்ரா சொல்ல வேண்டும்” மேகப்பை முடித்து வர விசித்ரா தாமதப்படுத்தியதால் மாயா சற்று கொந்தளித்தார்.

“ரொம்ப ஓவரா பண்ணாத என்ன?” என முகத்தை சுளித்து கொண்டு விசித்ரா சொல்ல “ஹலோ இப்படி எல்லாம் என்கிட்ட பேசுற வேலை வெச்சுக்காதிங்க” என்ன மாயா கோபப்பட்டார். இதுக்கு அடுத்து ஒரு விவாதம் தீப்பற்றி எரிந்த பின் ஒவ்வொருவராக பற்றி தனது அவதானிப்பை சொல்ல ஆரம்பித்தார் விசித்ரா. “மாயாவை பற்றி சொல்லனும்னா எனக்கு அவளை ரொம்பவும் பிடிக்கும். ஆனால் யாரையும் நம்ப மாட்டா. அவ ஆட்றது மட்டுமே கேம் இல்ல. மத்தவங்க ஆடுறதும் கேம் தான். அவளோட நெகட்டிவ் சைடு மட்டும் தான் காட்டுறா, நல்ல பக்கத்தையும் காண்பித்தால் நல்லா இருக்கும்” என்று சொல்லி டாஸ்கை முடித்தார் விசித்திரா.

இந்த கமெண்டால் புண்பட்டு போன மாயா தனக்குத்தானே தனியாக சென்று பேசிக்கொண்டார். “நீ யாருன்னு உனக்கு தெரியும். இந்த உலகமே உன்னை எதிர்த்து நின்னாலும், நீயா ஒத்துக்கிற வரைக்கும் நீ அழாதே. உன் கேம் விளையாடத்தான் வந்திருக்க” என தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.

தனது தாயைப் போன்ற உருவத்தை கொண்டிருப்பதால் தான் அவரிடம் தன்னால் நெருங்க முடியவில்லை என்றும், அப்படி அன்பு காட்டி பழகிவிட்டால் தான் அதற்கு அடிமையாகி அழுது விடுவேன் என்றும் மாயா தனது மற்றொரு பக்கத்தை காட்டினார்.

இதையடுத்துச் சின்ன பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பவர்கள் யாருக்கும் காட்டிலோ சேரோ எதுவுமே இல்லாத நிலையில் அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் 4 சேர்களை பெரிய பிக்பாஸ் வீட்டில் இருந்து கொடுத்தார் பூர்ணிமா. “இந்த சேர் எல்லாம், எப்படி அங்கே போச்சு?” என பிக் பாஸ் கறகற குரலில் கேட்டார்.

அப்போது பயந்து போன பூர்ணிமா, “அவர்கள் நின்றுகொண்டே இருப்பதைப் பார்க்க பார்க்க ரொம்ப கஷ்டமா இருந்தது. எனவே முடிவெடுத்துட்டேன். இந்த விளைவுகளை நான் சந்திக்க தயாரா இருக்கேன்” என பூர்ணிமா கெத்தாக சொல்ல “ஒரு கேப்டன்னா, இப்படித்தான் துணிச்சலா முடிவு எடுக்கணும். ஒரு செயலோட அடிப்படையான நோக்கம் முக்கியம்.” என முந்தைய கேப்டன்களான சரவணன் விக்ரம் மற்றும் யுகேந்திரனை குத்தி காட்டினார் பிக் பாஸ்.

பின்பு விசித்திராவுக்கும் மாயாவுக்கும் இடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டது. “உனக்கு என்னதான் பிரச்சனை?, நான் உன்ன பத்தியே சொல்லலையே. நீயா வந்து ஏன் வாக்குமூலம் தர்ற?” என்று விசித்ரா ஆரம்பிக்க, நீங்க நேரடியா சொல்லியிருந்தா நானே பாராட்டி இருப்பேன். கோழைத்தனமா பேசுறீங்க. மறைமுகமாக சொல்லி என்ன தப்பா காண்பிக்க ட்ரை பண்றிங்க. யாரையும் நம்பாதே என்று ஐஸ் கிட்ட சொன்னதுக்கு என்ன அர்த்தம்? உங்களுக்கு இந்த கேம் புரியல. நான் சுவாரஸ்யமாக ஆட வந்திருக்கேன்.” என படபட வென பேசி பின்பு ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு அன்பு செலுத்தி சமாதானம் அடைந்தனர்.

கேம் விளையாட தெரியல என சொன்னதும் விசித்ரா என்ன நினைத்தாரோ தெரியல. திடீரென கேமரா முன் சென்று தனது ரொமான்டிக்கான லுக்கை பிக் பாஸை நோக்கி வீசினார். “பிக் பாஸ் உங்க மேல எனக்கு கிரஷ்ஷா இருக்கு. உங்க குரலை கேட்கும் போதெல்லாம் எனக்கு வெக்க வெக்கமா வருது, ரூல்ஸ் எல்லாம் மீறி உங்க கூட வந்துட தயாரா இருக்கேன். அந்த மூணு வார்த்தையை உங்ககிட்ட சொல்லணும். ஆனா வெட்கம் தடுக்குது. உங்களுக்காக டீயும் கொடுப்பேன் தீயும் குளிப்பேன்” என்றெல்லாம் கண்ணை சிமிட்டிக்கொண்டே விசித்ரா பேசுவதை பார்த்து பிக் பாஸ்-க்கு ஒரு மைல்ட் ஹார்ட் அட்டேக்கே வந்திருக்கலாம்.

அடுத்ததாக ஒவ்வொருவரின் குடும்பத்தினரிடமிருந்து வந்திருக்கும் வீடியோவை ஒளிபரப்பும் டாஸ்க் வந்தது. அனைவரும் தங்களது குடும்பத்தினரை பார்க்கப் போவதாக மகிழ்ச்சியாகினர். இதை அடுத்து பிக்பாஸ் ஒரு ட்விஸ்ட்டை வைத்தார். ஒரு நபர் 2 நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் வீடியோக்களை பார்க்கலாம். அவரவர்களுக்கு உரிய குடும்ப வீடியோவை அவரவர் பார்க்க முடியாது. அதே சமயம் யாருடைய குடும்பத்தினருக்கு அதிக லைக் கிடைக்கிறதோ, அவருக்கு போல்டன் ஸ்டார் வழங்கப்படும் என பிக்பாஸ் அறிவித்தார்.

முதலில் சென்ற பிரதீப் ஜோவிகாவின் குடும்பத்துக்கு லைக் கொடுத்து, கூல் சுரேஷ் குடும்பத்தின் வீடியோவுக்கு டிஸ்லைக் கொடுத்தார். இதை அடுத்து உள்ளே சென்ற ரவீனா பிரதீப் குடும்ப வீடியோவுக்கு லைக்கும், மணி குடும்ப வீடியோவுக்கு டிஸ்லைக்கும் கொடுத்தார். “என்னை விட்டுக் கொடுத்துட்டுல்ல இல்ல” என மிகவும் புலம்பி தள்ளிய மணியோ, ரவீனா குடும்ப வீடியோவுக்கு லைக் கொடுத்து சரவண விக்ரமின் குடும்ப வீடியோவுக்கு டிஸ்லைக் கொடுத்ததார். “உன்ன மாதிரி நான் இல்லை” என்பதை ரவீனாவிடம் காட்டுவதற்காகவே மணி இவ்வாறு செய்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

முந்தைய நானின் எபிசோடை காண இங்கு கிளிக் செய்யவும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE