பிக் பாஸ் வீட்டில் 22 நாள் துவங்கியவுடன் யார் யார் எந்தெந்த தொழிலுக்கு சரிப்பட்டு வருவார்கள்? என்பதை கேப்டன் ஆக பூர்ணிமா சொல்ல வேண்டும். இந்த தேர்வு பட்டியலில் சிறந்த டிஷ்வாஷர் விஷ்ணு, துணி மடிக்கும் வேலை விசித்திரா, மந்திரவாதி மாயா, கட்டுப்படி வைத்தியம் ஐஸு, டாக்டர் ஜோதிகா, கேம் ஷோ டைரக்டர் பிரதீப், ஜிங்சக் பிளேயர் மணி என தன் விறுப்பு வெறுப்புக்கு ஏற்ப பணிகளை கொடுத்திருந்தார்.

இதை ஏற்கனவே விசித்திராவும் கெஸ் செய்திருந்தார். பூர்ணிமாவின் மனதில் யார் யார் எந்த மாதிரியான இடத்தில் உள்ளார்கள் என்பதை இந்த டாஸ்க் மூலம் தெரிந்துவிடும் கூறி இருந்தார்.

ஓபன் நாமினேஷன் நடந்த போது பூர்ணிமாவை நாமினேட் செய்ய முடியாது என்று பிக் பாஸ் அறிவித்தார். அக்ஷயாவும் விஷ்ணுவும் ஏற்கனவே நேரடியாக நாமினேட் ஆகியுள்ளதால், பிறருக்கான நாமினேஷன் தொடங்கியது.

விஷ்ணு பிரதீப்பை நாமினேட் செய்தார். “பிரதீப் விசித்ரா வயசுக்கு மரியாதை கொடுக்கல. பிச்சை எடுத்து சாப்பிடுங்க அப்படின்னு சொல்றான். அவங்களையே டார்கெட் பண்றான். தன்னையே பிக் பாஸ் மாதிரி நினைச்சுக்கிறான். என்று விஷ்ணு ஆவேசமாக புகார் கூற இருதரப்பு இடையில் கைகலப்பு ஏற்படாத குறையாக வாக்குவாதம் நடந்தது.

ஆனால் கேப்டன் ஆன பூர்ணிமா இதில் தலையிட்டு அமைதி படுத்தாமல் கோட்டை விட்டார். ‘விஷ்ணு உட்காருங்க’ என பிக் பாஸே அதட்டிச் சொல்லும் நிலை வந்தது.

பின் எழுந்த கூல் சுரேஷ், “பெண் தலைமை வரணும் அப்படிங்கறது நிக்சன் விரும்பல, பெண் என்றால் இளக்காரமா? ஏன் அவங்க வரக்கூடாதா?” என பெண்ணியம் பேசத் தொடங்கினர் கூல் சுரேஷ்

பிரதீப் பேசிய போது, “வினுஷா இன்னும் கேம் குள்ளயே வரல என நாமினேட் செய்தார். பின்பு பிக் பாஸ்க்கு ஸ்ட்ராட்டஜி சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். ஆக்சுவலி பிக் பாஸ் சாப்பாடு கொடுத்ததே முதலில் தப்பு என்று குறிப்பிட்ட பிரதீப் அத வச்சு ஒரு கேம்மே ஆடலாம்னு இருந்தேன். ஆனால் சொதப்பிட்டார்” என்று பிக் பாஸ் மீது புகார் சொன்னார் பிரதீப்.

பிக் பாஸை நாமினேட் செய்ய முடியாது என்பதால் அவர் நாமினேட் செய்யவில்லை போலும்.

இந்த நாமினேசன் பட்டியலில் பிரதீப், நிக்சன், யுகேந்திரன், ஜோவிகா, மணி, அக்ஷயா, சுரேஷ், வினுஷா, விக்ரம், மாயா மற்றும் விஷ்ணு ஆகிய அனைத்து பெயர்களுமே இடம்பெற்றன.

நாமினேட் செய்தபோது மாயா “மணி ஒரு பிற்போக்குவாதி என் கண்ணைப் பார்த்து பேச மாட்டேங்குறான்” என அப்பட்டமாக போட்டு உடைத்தார். பின்பு என் சாதியை பற்றி கேட்கிறான் எவ்வளவு பெரிய தப்பு அது கூட ஓகே அதுக்கப்புறம் கூட வந்து பேசவே இல்ல ரொம்ப பயப்படுறான்” என சொல்ல “முதல் நாள் சாப்பிடும் போது அவங்க நான்வெஜ் எடுத்துக்கல, அதனால அவங்க கேஸ்ட் பத்தி சாதாரணமா கேட்டேன், அவ்வளவுதான்” என மணி கொடுத்த விளக்கத்தை யாரும் ஏற்கவில்லை. பொது வழியில் சாதி பற்றியும் சமூகம் பற்றியும் பேசுவது பிற்போக்குத்தனம் என்பதை மணி உணரவில்லை.

இந்த வாரத்திற்கான ஷாப்பிங் டாஸ்க் தொடங்கியதும் தேவையற்ற பொருட்களை அதிகம் எடுத்தார்கள். பின்பு கொத்தமல்லி எடுக்கவில்லை. அதை மட்டும் எடுத்துக்கட்டுமா என பஸர் அழுத்திய பின் விஷ்ணு கேட்க “5 ஸ்டார் சாக்லேட் முதல்ல எடுக்க தெரிந்தது இல்ல ? கிளம்புங்க” என விஷ்ணுவை வெளியே அனுப்பினார் பிக்பாஸ்.

வீட்டை சுத்தம் செய்யும் டாஸ்க் உட்கார்ந்த படியே கோல் போட்டு கேம் ஆட வேண்டும் என கூறப்பட்டது. இதில் பெரிய வீடு வென்றது. இதை அடுத்து பாத்ரூம் கழுவும் டாஸ்க்கில் சின்ன வீடு வென்றது.

மணி இடம் ரவீனா பேசுவது ஐசுக்கு பிடிக்கவில்லை. ரவீனா நிக்சனிடம் பேசுவது மணிக்கு பிடிக்கவில்லை என நான்கு முனைகளில் ஒரு சுவாரசியமான உறவு ஓடிக்கொண்டிருக்கிறது.

அப்பாவி முகத்தையும் குழந்தைத்தனமான சிரிப்பையும் வைத்து பெரும்பாலும் போட்டியாளர்களால் ஒரு சக போட்டியாளராக கருதப்படாத ரவீனா இறுதிவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் சென்று பிரதீப்புக்கு டஃப் கொடுக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி இந்த முறை வைல்ட் கார்டு என்ட்ரியில் விஜே அர்ச்சனா, திருநங்கை நமீதாவின் வளர்ப்பு மகள் உள்பட 5 பேர் உள்ளே செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE