பிக் பாஸ் சீசன் 7 தமிழில் இதுவரை வாயில் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தத போட்டியாளர்கள், தற்போது கைகலப்பில் இறங்கி சூட்டைக் கிளப்பி வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 7-ல் ஜிங்கிலியா, ஜிங்கிலியா என்ற பாடல் ஒலிக்க விடிந்தது. அடிச்சுக்காம சும்மா இருக்காங்களே என பிக்பாஸ் நினைத்தாரோ, இல்லையோ தெரியவில்லை. ரணகளமான ஒரு டாஸ்க்கை அறிமுகப்படுத்தினார்.

கார்டன் ஏரியாவில், 30 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கப்பட்டன. பஸ்ஸர் அழுத்தியதும் தீயாய் பாய்ந்து வந்தனர் இரு வீட்டாரும். எந்த வீட்டில் உள்ளவர்கள் அதிக சிலிண்டர்களை எடுக்கிறார்கள்? எப்படி அடுத்த வீட்டில் இருப்பவர்களின் சிலிண்டரை எப்படிப் பறிக்கிறார்கள்? எனப் போட்டி நடந்தது.

இந்தப் போட்டியில் ஜெயித்தவர்கள், அடுத்த முறை கேப்டனாகும் போட்டிக்குத் தேர்வாவார்கள். கேப்டன் எலிமினேசனில் இருக்கமாட்டார் என்பதால் இரு வீடும் எதிரிகளைப் போல் மோத ஆயத்தமாகின்றனர்.

தற்போதைய கேப்டனாக உள்ள யுகேந்திரனும் இதில் பங்கேற்க வேண்டும். அவர் எந்த வீட்டின் சார்பாக ஆடுகிறார் என்பதை அவரே முடிவு செய்து கொள்ளலாம் என பிக்பாஸ் அறிவித்தார். இதனால், அவர் பெரிய வீட்டின் பக்கம் களமிறங்கினார். விஷ்ணுவுக்கு பதில் களமிறங்குவதாகக் கூறினார்.

எப்படியும் விஷ்ணுதான் சண்டைக் கோழி, அவரைக் கழற்றி விட வேண்டும் என அவர் நினைத்து இருந்தார். இந்த சூழலில்தான், அக்ஷயா பாவக்கல்லை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும், கீழே வைக்கக் கூடாது என தண்டனைப் பெற்று இருப்பதால் அவரின் சார்பாகத்தான் ஆட வேண்டும் என சின்ன வீட்டுக்காரர்கள் கோரிக்கை வைக்க, அதனை சரி என ஏற்றார் யுகேந்திரன்.

பஸ்சர் அழுத்தியதும், சிட்டாய் பறந்து ஆளுக்கு ஒரு சிலிண்டரை எடுக்க, அடுத்தவர் இடமிருந்து சிலிண்டரைப் பறிக்கும் போட்டியில், இணைந்திருந்தார் விஜய். விஷ்ணுவின் மீது வன்முறையைக் கையாண்ட அவர் WWF போல களத்தை மாற்றிவிட்டார்.

நெக்குலயே மிதிக்குறான் என விஜய் மீது குற்றம்சாட்டினார் பிரதீப். கையில் வைத்திருந்து சிலிண்டருடன் வீட்டுக்குள் ஓடியவரைப் பிடிக்கச் சென்ற போது வீட்டின் கதவில் இருந்த கண்ணாடியை உடைத்தார்.

இதையடுத்து தற்காலிகமாக போட்டியை நிறுத்தினார் பிக்பாஸ். இதற்கு இடையில் 24 மணி நேரமும் நீ மணி கூடலே சுத்துற என ரவீனாவை கடுப்போடு கடிந்து கொண்டார் நின்சன். இதை ரவீனா சென்று மணியிடம் கூற, விளையாட்டில் இருவரும் சேர்ந்து விளையாடுவது ஈருடல் ஓருயிராய் இருப்பது சரியல்ல என நிக்சன் கூற புகைச்சலானது.

மீண்டும் பஸ்சர் அழுத்த பாத்ரூமுக்குள் சென்று ஒளிந்தவர் கையில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டரைப் பறிக்கும் போட்டியில், கதவை அடைக்கக் கூடாது, கையில் இருந்து கீழே வைக்கக் கூடாது என பிக்பாஸ் கூற அடுத்தடுத்த ரவுண்டுகளைக் கடந்து பெரிய வீடு வெற்றி பெற்றது.

இதில் பூர்ணிமா-ரவீனா-மணி ஆகியோர் தள்ளுமுள்ளுவில் கீழே விழ, யார் தள்ளியது என்ற பஞ்சாயத்து ஓய்ந்தபாடில்லை.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE