கடந்த வாரம் முழுக்க நடந்த குடுமை பிடி சண்டையில் தலைவர் என்னதான் செஞ்சார் என புறம் பேசிக் கொண்டிருக்காமல் அவரிடமே கேட்போம் என அகம் டிவி உள்ளே சென்றார் கமல்.

கடந்த வார கேப்டன் எப்படி செயல்பட்டார்? என மற்றவர்களிடம் விசாரிக்க அவர் நல்லவர் வல்லவர் பொறுமையானவர் என வந்தன. கமாண்டிங்காக இல்லை என சில நெகட்டிவ் பதில்களும் வந்தன.

அவர் கிட்டயே விசாரிக்கலாம் எனக் கூறிய கமல், பின் ஒரு இடைவெளி விட்டு “பிக் பாஸ் நீங்க என்ன சொல்றீங்க என சரவணன் கிட்ட கேள்வி கேட்டா எப்படியும் அவர் உங்க கிட்ட தான் வந்து நிக்க போறாரு அதுக்கு தான் ஸ்ட்ரைட்டா உங்ககிட்ட வந்துட்டேன்” என கலாய்த்தார். இதனை புரிந்து கொண்ட சரவணன் தலையை சொரிந்தபடி சிரித்தார்.

அவ்வளவு கேள்வி கேட்டு இம்சை படுத்திட்டாங்க என பிக் பாஸையே கலங்கும் படி பேச வைத்து விட்டார் சரவணன் விக்ரம்.

7 பேர் இருந்தால்தான் சமைப்போம். 6 பேர் தான் இருக்கிறார்கள் என சின்ன வீடு ஸ்ட்ரைக் செய்த போது ஏழாவது ஆளாக உள்ளே நுழைய ஏன் அவ்வளவு தாமதம்? என கமல் கேள்வி கேட்டார். “ஒருத்தர் எல்லாருக்கும் நல்லவரா இருக்க முடியாது ஆனால் எடுக்கிற முடிவுல உறுதியா இல்லன்னா பொறுப்பிலிருந்து தவறிவிடும் நிலைமை வந்துவிடும்” என தலைமை பதவிக்கான அடிப்படை இலக்கணத்தை கற்றுத் தந்தார் கமல்.

“இந்த வாரம் எவிக்சன் கிடையாது, ஆனா ரகசியமா வச்சுக்கோங்க அவர்களுக்கு சொல்லாமல் ஒரு ஆட்டம் ஆடலாம்” என நமட்டுச் சிரிப்போடு பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தார் இடைவேளைக்குப் பின் வந்த கமல்.

தொடங்கிய உடனேயே ஜோவிகா என அழுத்தமாக அழைத்து பயமுறுத்தினார். “நீங்க காப்பாற்றப்பட்டிங்க” என்று சிரித்த கமல், கூடலே அட்வைசும் செய்தார். “யாரையும் அவமரியாதையாக பேசக்கூடாது, மத்த பிக் பாஸ் வீட்டில் நடக்கிறத நான் இங்கு அனுமதிக்க மாட்டேன்” எனக் கூற தன் தவறை ஒப்புக் கொண்டார் ஜோவிகா.

நிக்சன்- பிரதீப் சண்டையை வைத்து இந்த வீட்டில் யாருக்கெல்லாம் தகுதி இல்லை என காரணத்தோடு சொல்லுங்கள் என்று பிக் பாஸ் சூட்சுமமான ஆட்டத்தை தொடங்கி வைத்தார். வெளிப்படையாக பகையை அதிகரிக்கச் செய்வது பிக் பாஸின் கைவந்த கலை.

தகுதியில்லாதவர்களின் பட்டியலில் விஷ்ணு பெயரும் வினுஷா பெயரும் அதிகம் உச்சரிக்கப்பட்டன. விஷ்ணு அதிகம் கோபப்படுவதாலும், வினுஷா செயலற்று இருப்பதாகவும் காரணங்கள் சொல்லப்பட்டன.

இதுவரை காப்பாற்றப்பட்டவர்கள் என கமல் சொன்னபோது உடனே கையை தூக்கினார் பிரதீப். நீங்க காப்பாத்தப்பட்டுட்டீங்க என கமல் சொன்னாதும் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து கைதட்டல் கிடைத்தது. வித்தியாசமாக இருப்பதால் அவரை ரசிக்கின்றனர் போல.

மக்கள் மட்டும் பிரதீப்புக்கு கை தட்டினால் இந்த வீட்டை விட்டு உடனே போயிடுவேன் என மாயா முன்பு சொன்னது நினைவு இருக்கலாம். இருப்பினும் அவர் சர்காஸ்டிக்காக சிரித்து வைத்தார்.

அக்ஷயா காப்பாற்றப்பட்டு, மாயாவும் பூர்ணிமாவும் மீதம் இருந்தனர். “பூர்ணிமா போனா நானும் போயிடுவேன்னு மாயா சொன்னாங்களே? நீங்க எப்படி? என கமல் விசாரிக்க அப்படியெல்லாம் இல்லை சார் என பூர்ணிமா சொல்ல, பின் மாயாவிடம் குற்ற உணர்ச்சியோடு பார்வையிலேயே மன்னிப்பு கேட்டார் பூர்ணிமா.

“இந்த 2 பேர்ல யார் வெளியே போவா?” என கமல் கேட்க மாயாவின் பெயரே அதிகமாக வந்தது. கூடா நட்பு என பூர்ணிமா உஷாராக வாய்ப்புண்டு.

“நான் ஒன்லி கன்டென்ட் தான் சார்” என மாயா சொல்ல, மக்களும் ஒரு கன்டென்ட் வச்சிருக்காங்க அத பாக்கறீங்களா? என எவிக்சன் கார்டை எடுத்துக்காட்டினார். அது காலியாக இருந்ததும் தோழிகள் இருவரும் சந்தோஷமாகி கொண்டனர்.

கமல் சென்றதும் சின்ன வீட்டில் தங்கப் போகிறவர்கள் யார் யார்? என்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட யுகேந்திரன் முடிவு செய்யும்போது அவருக்கு அதிக வேலை வைக்காமல் பிக் பாஸே சில கேள்விகளை கேட்டிருந்தார்.

அதிகம் influence செய்பவர், விதிகளை மீறுபவர், சின்ன விஷயத்தை பெரிதாக்குபவர், வேலை செய்வதற்காகவே வந்தவர், தைரியமாக பேசாதவர், மரியாதையில்லாமல் பேசுபவர் என இத்தனை கேட்டகரியிலும் மாயா, வினுஷா, பூர்ணிமா. சரவணன், பிரதீப் மற்றும் விஷ்ணு ஆகியோர் தேர்வாகினர்.

முந்தைய நாளின் பிக்பாஸ் எபிசோடைக் காண இங்கு கிளிக் செய்யவும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE