BB Day 12 – சோறு போடவே பாடாய்படுத்தும் பிக் பாஸ்

பிக் பாஸில் இதுவரை 7 சீசன்கள் வந்துவிட்டன. ஆனால் ஒருமுறை கூட பிக் பாஸ் அடிவயிற்றில் கை வைத்துவிட்டார். அதாவது சாப்பாட்டில் மண்ணள்ளி போடும் விதமாகவே கடந்த இரு தினங்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்து கொண்டே வருகின்றன.

“6 பேர் இருந்தால் சமைக்க மாட்டோம் என்று சீன்ன வீட்டில் உள்ளவர்கள் ஸ்ட்ரைக் செய்து சிறிது நேரம் கண்டஸ்டெண்ட்கள் அனைவரையும் பட்டினி போட்டனர். ஒரு வழியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனாக நடித்த சரவணன் விக்ரம் கேப்டன் என்பதால் அவரே தலையிட்டு தானே 7-வது நபராக வருவதாகக் கூறி பிரச்சனையை ஒரு மாதிரி முடிவுக்கு கொண்டு வந்தார்.

இந்த நிலையில் பிக் பாஸ்-ல் நடைபெற்ற ஷாப்பிங் உள்ளிட்டவருக்கு பணத்தை வசூல் செய்யும் விதமாக அவர்களுக்கு டாஸ்க்கள் வைக்கப்பட்டன. காலை எழுந்ததும் “அமுக்கு டுமுக்கு அமால் டுமால்” என்ற பாடல் மூலம் 12 ஆம் நாள் விடிந்தது.

பூர்ணிமாவும் மாயாவும் காம்பவுண்ட் சுவர் அருகே நின்று வழக்கம்போல புரளி பேசத் தொடங்கினர்.

“மாயா நல்ல பொண்ணு தான், ஆனா பதில் பேசினால் தப்பாயிடுது” என ஐஷூ உடன் புலம்பி கொண்டு இருந்த விசித்ரா, பூர்ணிமாவை பற்றி மாயாவிடம் போய் போட்டுக் கொடுக்க ஒரு திட்டம் போட்டார். ஏற்கெனவே இருவருக்கும் வாய்க்காத்தகராறு இருப்பதால் எப்படிப் பேசுவது எனக் கூட தயங்கவில்லை. உடனே ஒரு திட்டம் போட்டார்.

பூர்ணிமாவுக்கு ஒரு பாயசத்தை போடணும் என்பது போல மாயாவிடம் சென்று “கிட்சன் துடைக்கலங்கறதுக்காக உன் கல்யாணம் மேட்டர் பத்தி நான் பேசுனது தப்பு தான், ஆனா உங்க கூட்டத்திலேயே உங்களுக்கு எதிராக ஒரு உளவாளி இருக்கு. யாருன்னு சொல்ல மாட்டேன். ஐ லவ் யூ! உம்மா.” என சமாதானமும் ஆகிவிட்டு, பூர்ணிமாவையும் போட்டுக் கொடுத்தார் விசித்ரா. ராஜமாதாவின் ராஜதந்திரம் பேஸ் பேஸ் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

விசித்திராவும், யுகேந்திரனும் பேசிக் கொண்டிருந்தனர். “என்னதான் சண்டை போட்டாலும் உடனே சமாதானமாய் ஆயிடுறீங்க. ஜோவிகா கூட சண்டை போட்டீங்க, ஆனா இப்ப பழைய மாதிரியே மாறி அவங்க கிட்ட பேசுறீங்க. அவளும் உங்களை பழச மறந்துட்டு “விச்சு அப்படின்னு கூப்பிடுறா. உண்மையிலேயே மன்னிக்கிறது பெரிய விஷயம்” என யுகேந்திரன் விசித்ராவைப் பாராட்டிக் கொண்டிருந்தார்.

உடைகளை பறித்த பிக் பாஸ்

ஷாப்பிங் தொகையை திரும்ப செலுத்துவதற்கான 2-ம் தவணை போட்டி தொடங்கியது. அதில் களிமண்ணில் ஒற்றையடி பாதை போட்டு, கால்களை கீழே வைக்காமல், குழந்தைகளின் சைக்கிள் ஓட்டி கடக்க வேண்டும். இந்த போட்டியில் தோற்றால் அனைத்து ஆடைகளையும் பிக் பாஸ் இடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த அழுத்தத்தினாலோ என்னவோ கடைசியாக வந்த வினுஷா, தோற்க ஒட்டுமொத்த ஆடைகளும் பிக் பாஸ் வசம் சென்றது.

இதனிடையே அக்ஷயாவையும், வினுஷாவையும் மன்னித்து ஜெயீல் தண்டனையில் இருந்து விடுவித்தார் பிக்பாஸ். இதனை ஏற்று எமோஷனலாகி கண்ணீர் வடித்தார் வினுஷா.

அடுத்த டாஸ்க் இதைவிட கொடூரம். அந்த டாஸ்கில்தான் சாப்பாட்டில் கை வைத்தார் பிக் பாஸ். 19 58 ல் வெளியான ‘காத்தவராயன்’ படத்திலிருந்து ’வா கலாப மயிலே’ பாடலில் “ஆரியமாலா. . . ஆரியமாலா” என்ற பாடல் ரிப்பீட் மோடில் கேட்பதுதான் இந்தப் போட்டி..

யுகேந்திரன், விசித்ரா, ரவீனா இந்த டாஸ்கில் பங்கேற்றனர். ஆரியமாலா பாடல் திரும்பத் திரும்ப ரிப்பீட் மோடில் ஓடியது. ஏற்கனவே பாடகராக இருந்த யுகேந்திரன் அதில் வைப் ஆகி, பஜனை போல தட்டி ரசித்து கேட்டார். அடுத்து ரவீனாவும் அந்த பாடலை கேட்டு ஆடத் தொடங்கினார். விசித்ரா தான் பல்லைக் கடித்துக் கொண்டு அந்த பாட்டை கேட்டு பொறுத்துக் கொண்டிருந்தார்.

1 மணி நேரம், 2 மணி நேரம் என நேரம் சென்று கொண்டே இருக்க தொடர்ந்து 4 மணி நேரம் ஓடி அதற்குப் பின்பு தான் பிக் பாஸ் இந்த பாட்டை நிறுத்தினார். 4 மணி நேரம் பொறுமையாக இந்த பழைய பாடலை கேட்டதற்காக அவர்களுக்கு சாப்பாடு வழங்கப்படுவது தடை செய்யப்படாது என பிக் பாஸ் கூற அப்போதுதான் நிம்மதி அடைந்தனர். வீட்டில் உள்ள அனைவருக்குமான வயிறு பிரச்னை என்பதால் பொறுத்துக் கொண்டனர்.

வரவர பிக் பாஸ் வீடு ரணகளமாக மாறி வருகிறது. சோறு, துணிமணி கூட இல்லாமல் தடை செய்தால் இனி எந்த கண்டஸ்ட் பிக் பாஸ் வீட்டுக்குக் கூப்பிட்டால் வருவார்கள் என்று பலரும் சமூக வலைதளங்களில் பேசத் தொடங்கி விட்டனர்.

முந்தைய நாள் நிகழ்வைப் படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE