இதப் படிச்சா வாழைப்பூ செய்யுற சோம்பேறித்தனம் தெறிச்சு ஓடிடும்!

வாழைப்பூவை சமைப்பது என்பது பல பெண்களுக்கும் சோம்பேறித் தனமான ஒரு விஷயம்தான். ஏனெனில் அதை பக்குவமாக மகரந்தமும், கண்ணாடித் தாளும் நீக்கி சுத்தம் செய்ய அதிக நேரம் தேவைப்படும் ஒரு சமையல் ஆகும். ஆனால், பின்வரும் நன்மைகளை நீங்கள் பட்டியலோடு பார்த்தால் எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை, வாழைப் பூவை சமைத்து தான் ஆக வேண்டும் என்று மனோ நிலைக்கு வருவீர்கள்.

அப்படி அள்ளித்தரும் எக்கச்சக்கமான நன்மைகள் அடங்கிய பட்டியல் வழங்குகிறது “த காரிகை”

வாழைப்பூவில் இயற்கையிலேயே நோய் தொற்றுக்களை அகற்றும் சக்தி உள்ளது. ஏனெனில், எத்தனால், பேத்தோஜெனிக் ஆகியவை, பாக்டீரியாக்கள் வளர்ச்சியை தடுக்க உதவும் சத்துக்கள் உள்ளன.

இதய நோய், புற்றுநோயை தள்ளி வைக்கும்

வாழைப்பூவில் ஃபினோலிக் அமிலம், டானின்கள், ஃபிளேவனாய்டுகள், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன. இந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் சமப்படுத்தி ஆக்ஸிடேடிவ் சேதத்தை தடுக்கும். இதனால், இதய நோய் மற்றும் புற்றுநோய் ஆபத்தை குறைக்கும்.

சர்க்கரை நோய்

வாழைப்பூ ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.

மாதவிடாய் ஆரோக்கியம்

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்பட்டால் அதை குறைக்க இது உதவும். அதுமட்டுமின்றி வயிற்று வலியையும் இது போக்கும் என்று நம்பப்படுகிறது. ஹார்மோனல் இம்பேலன்ஸால் பாதிக்கப்பட்ட பெண்கள் வாழைப்பூக்களை சாப்பிடும் போது புரொஜஸ்ட்ரான் என்ற ஹார்மோன் உடலில் அதிகரிக்க உதவி இது உதிரப்போக்கை குறைக்கும் என்று நம்பப்படுகிறது.

பதற்றம் குறையும்

வாழைப்பூவில் உள்ள மெக்னீசிய சத்துக்கள் நல்ல மனநிலையை கொடுக்கும் பதற்றத்தை குறைத்து மன அழுத்தத்தையும் போக்கும் என்று நம்பப்படுகிறது.

தாய்ப்பால் சுரக்கும்

பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் சுரப்பதற்காக வாழைப்பூவை தங்களது உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். இது கருப்பை மற்றும் கர்ப்பத்துக்கு பின்னான உதிரப்போக்கையும் கட்டுப்படுத்த வல்லது.

தாமதமான வயோதிகம்

வாழைப்பூவில் உள்ள விட்டமின் சி சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்சிடென்ட்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதோடு செல்களில் அழுத்தத்தை குறைத்து வயோதிகத்தையும் தாமதப்படுத்துகிறது.

இதன் தொடர்ச்சியைப் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE