பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலக காரணம் என்ன? எழில் அதிரடி அறிவிப்பு

2019 ஜூலை மாதம் முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது, பாக்கியலட்சுமி என்ற நாடகம். இந்த தொடர் நாடகம் டிஆர்பி யில் எப்பொழுதும் முன்னணியில் இடம் பெற்று வருகிறது.

சாதாரண இல்லத்தரசியாக இருக்கும் பாக்கியலட்சுமி எப்படி ஒரு தொழில்முனைவோராக முன்னேறுகிறார் இந்த பாதையில் அவர் கடக்கும் குடும்ப சமூக பிரச்சினைகள் என்னென்ன? என்பதை குறித்து இந்த கதை நகர்கிறது.

ஆரம்பம் முதலே இந்த நாடகத்தில் பல கதாபாத்திரங்களும் ஹீரோயின் பாக்கியலட்சுமிக்கு எதிராக நடந்தால் கூட அவரது இளைய மகனான எழில் மட்டும் எப்போதும் அம்மா செல்லம். அம்மா எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் பக்கபலமாக துணை நிற்பார் அவர்.

எழில் போன்ற ஒரு மகன் கிடைக்க வேண்டும் என்றுதான் சமூக வலைதளங்களில் பல அம்மாக்களும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த அளவுக்கு ஒரு மகன் பற்றிய ஏக்கத்தையே தாய்மார்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது எழில் கதாப்பாத்திரம். அதற்கு உயிரூட்டியவர் விஜே விஷால்.

அம்மா மனைவி குடும்பத்தார் என அனைவரையும் புரிந்து கொண்டு நடக்கும் எழில் கதாபாத்திரத்தில் நடித்து வந்த வி.ஜே. விஷால் என்பவர் திடீரென அந்த நாடகத்திலிருந்து விலகி இருக்கிறார்.

அவர் நடித்த கடைசி எபிசோடும் பாக்கியலட்சுமி-ல் ஒளிபரப்பான பின்பு இவருக்கு பதில் இவர் என வருவது போல் ஒரு அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் வி ஜே விஷால் கதாபாத்திரத்தில் நவீன் என்ற நடிகர் நடித்து வருகிறார். அவர் பாக்கியலட்சுமி குடும்பத்தாருடன் குடும்பப் புகைப்படம் எடுத்துக் கொண்டதையும் நவீன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

விலகளுக்கான காரணம் குறித்து விஷாலிடமிருந்து எந்த அறிவிப்பும் வராத பட்சத்தில் அவர்களது ரசிகர்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களை நாடி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அவர் நேற்று பதிவிட்ட புகைப்படம் ஒன்று ஏராளமான ஒரு கேள்வி எழுப்பி வரும் நிலையில் விஷால் எந்தவித பதிலும் கூறாமல் விட்டுவிட்டார்.

இதனிடையே சற்று முன்னதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜே விஷால் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் தன்னை அழகாக குரூமிங் செய்து கொள்வது போல் காட்டி புன்னகைக்கும் படியான மாஸான காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

“சரியான முடிவை எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், முடிவை எடுத்துவிட்டு அதனை சரியாக அமைத்துக் கொள்வேன்” என்று அதற்கு தலைப்பிட்டுள்ளார். ஏற்கெனவே, ஷார்ட் ஃபில்ம், விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்த அவர், தற்போது புதிய சீரியலில் ஹீரோவாக நடிக்கிறாரா? அல்லது சினிமா வாய்ப்பா? சீரியல் குழுவோடு சண்டையா? என்று பலரும் தங்கள் வியூகங்களின் அடிப்படையில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE