எவ்வளவு சாப்பிட்டாலும், சோர்வாக இருப்பதாக சிலர் உணர்வார்கள். அவர்கள் இறைச்சி, முட்டை போன்ற அசைவ உணவை சாப்பிட மருத்துவர் பரிந்துரைக்கலாம். மிகவும் விட்டமின் பி12 பற்றாக்குறை இருப்பவர்கள் மருத்துவர் பரிந்துரைத்தால் கண்டிப்பாக மாத்திரைகளை சாப்பிட வேண்டும். ஆனால், சைவமாக இருப்பவர்களோ, அல்லது அடிக்கடி இறைச்சி சாப்பிடும் அளவுக்கு பணம் இல்லாதவர்களோ சில சைவ உணவுப்பொருள்களை மாற்றாக எடுத்துக் கொள்ளலாம். அவை என்னென்ன? என்பதை த காரிகையின் கட்டுரையில் பார்க்கலாம்.

வைட்டமின் பி-12 ஆரோக்கியத்திற்கு மிக முக்கிய ஊட்டச்சத்து ஆகும். இதன் அளவு உடலில் குறைந்து விட்டால் ஒரு சில உறுப்புக்கள் சீராக செயல்படுவதில் சிக்கல் ஏற்படலாம். அது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தக் கூடும் என மருத்துவத் துறையின் தரப்பில் கூறப்படுகிறது.

உடலில் இரத்த சிவப்பு அணுக்கள் உருவாக வைட்டமின் பி-12 உதவுகிறது. மேலும், இது ஃபோலிக் அமிலத்தின் உதவுகிறது எனவும் கூறப்படுகிறது. இந்த வைட்டமின் குறைபாடு மனநல கோளாறுகள், எலும்பு மற்றும் மூட்டு வலியை ஏற்படுத்தும் என தெரிகிறது.

பொதுவாக இந்த சத்து இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்றவற்றில் காணப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்காக சைவ உணவை மட்டும் உண்பவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. சில சைவ உணவுகளை சாப்பிடுவதன் மூலமும் வைட்டமின் பி-12 சத்துக்களைப் பெறலாம். அந்த வகையில், வைட்டமின் பி-12 உள்ள சில சைவ உணவுகளை இங்கு காணலாம்.

ப்ரோக்கோலி

பச்சை காய்கறிகள் என்று வரும்போது, ப்ரோக்கோலி டாப் லிஸ்டில் வந்துவிடும். இது ஒரு சூப்பர் ஃபுட்டிற்கு குறைவானது இல்லை. வைட்டமின் பி 12 உடன், ஃபோலிக் அமிலமும் இதில் காணப்படுகிறது. இதன் காரணமாக உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது மற்றும் உங்களுக்கு இரத்த சோகையால் பாதிப்பு ஏற்படாதவாறு நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.

சோயா பொருட்கள்

அசைவ உணவுகளை உங்களால் சாப்பிட முடியாவிட்டால், சோயா உங்களுக்கு வைட்டமின் பி-12 நிறைந்த சைவ உணவின் ஆதாரமாக இருக்கும். சோயாபீன், சோயா பால் மற்றும் டோஃபு உள்ளிட்ட சோயா தயாரிப்புகளை நீங்கள் சாப்பிட வேண்டும்.

ஓட்ஸ்

ஓட்ஸ் மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள், மக்கள் இதை காலை உணவாக அடிக்கடி சாப்பிட விரும்புகிறார்கள், வைட்டமின் பி-12 இதில் உள்ளது. இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது, அதே போல் உடல் எடையை குறைப்பவர்களும் ஓட்ஸை உட்கொள்கிறார்கள்.

தயிர்

தயிர் மிகவும் பயனுள்ள உணவு. இதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. வைட்டமின் பி-12 உடன் வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் பி2 ஆகியவையும் தயிரில் உள்ளன. குறைந்த கொழுப்புள்ள தயிரை அதிகம் சாப்பிட்டால் உடல் நலத்திற்கு நல்லது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE