அயோத்தி ராமர் கோவில் – கடந்து வந்த பாதை ஒரு நினைவூட்டல்
அயோத்தி ராமர் கோவில் ஆனது கிட்டத்தட்ட பல 1000 ஆண்டு வரலாற்றை கடந்து வந்துள்ளது.
இந்த கோவிலை மையமாக வைத்து இந்து இஸ்லாமியர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டு உலக அளவில் கவனம் பெற்றது. உதாரணத்துக்கு உங்களுக்கு பம்பாய் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை கண்முன் நிறுத்திக் கொள்ளுங்கள்.
அந்த சர்ச்சைகளின் தொகுப்பை தற்போது மீண்டும் நினைவூட்டுகிறது த காரிகை
1528ல் அயோத்தியில் முகலாய மன்னராக மாபெரும் புகழோடு திகழ்ந்த பாபர் ஒரு மசூதியை கட்டினார்.
1949 ஆம் ஆண்டு திடீரென ஒரு சர்ச்சை வெடித்தது. அதில் பாபர் மசூதிக்கு மர்மமான முறையில் ராமர் மற்றும் சீதையின் சிலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது சமூக வலைதளங்கள் இல்லாத அந்த காலத்திலேயே மிகப்பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.
அடுத்த பத்து ஆண்டுகளில் சர்ச்சை பெரிதானது. 1959ல் சர்ச்சைக்குரிய அந்த வழிபாட்டு இடத்தில் நாங்கள் வழிபாடு செய்ய வேண்டும் என்று இந்து அமைப்புகள் நீதிமன்ற கதவுகளை தட்டின.
சர்ச்சைக்குரிய அந்த இடத்தில் 1986 ஆம் ஆண்டு இந்துக்கள் வழிபடலாம் என்று அப்போது பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி அனுமதி அளித்தார்.
1985 லிருந்து 86 ஆம் ஆண்டுக்குள் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு என தனியாக ஒரு இயக்கத்தை தொடங்கி மிகப்பெரிய போராட்டத்தையும் நடத்தியது விஹெச்பி
1990 ஆம் ஆண்டு ராமர் கோவிலுக்கு என அத்வானி ரத யாத்திரை தொடங்கி நடத்தினார். பின்பு அந்த ரத யாத்திரை பீகாரில் தடுத்து நிறுத்தி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
1992 ஆம் ஆண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய சர்ச்சை வெடிக்க காரணமானது கர சேவகர்களின் செயல். ஆம், இஸ்லாமியர்கள் வழிபட்டு வந்த பாபர் மசூதி அதன் உச்சி கோபுரத்தின் மீது ஏறி உர சேவகர்களால் ஆக்சோரமாக இடிக்கப்பட்டது.
நாடு முழுவதும் இந்துக்களிடையேயும் இஸ்லாமியர்களிடையேயும் பெரும் கலவரம் மூண்டது.
1999 ஆம் ஆண்டு மசூதிக்கு கீழ் பகுதியில் ஒரு கோவில் இருந்ததாக தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது.
2019 வஃக்பு வாரியம், நிர்மோஹி அகாரா,, ராம் லல்லா ஆகிய அமைப்புகளுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் மசூதி இடிக்கப்பட்ட இடத்தை பிரித்துக் கொடுத்து தீர்ப்பளித்தது.
2011 முதல் 2019 வரை அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கும் நீண்ட ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
2019 ஆம் ஆண்டு மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவிலை கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்தது.
அதற்கு மறு ஆண்டு 2020ல் பிரதமர் மோடி தலைமையில் அயோத்தியில் ராமர் கோவிலுக்கான கட்டுமான பூமி பூஜைகள் நடைபெற்றன.
இந்த நிலையில்தான் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி அதாவது திங்கள் கிழமை அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் கருவறைக்குள் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.